ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 15
தலைப்பு வாரியான வினா விடைகள்வாழ்த்து / நன்னூல் / திராவிட மொழிகள்
| வரிசை எண் | வினா | விடை |
|---|---|---|
| 1. | நன்னூல் நூலின் ஆசிரியர் யார்? அவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்? | ஆசிரியர்: பவணந்தி முனிவர், சமயம்: சமண சமயம். |
| 2. | இந்தியாவில் காணப்படும் மொத்த மொழிக்குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு? | 4. |
| 3. | "திராவிடம்" என்ற சொல்லின் பொருள் என்ன? | திராவிட நாடு. |
| வரிசை எண் | வினா | விடை |
|---|---|---|
| 1. | தேசியக் கவி, மகாகவி போன்ற சிறப்புப் பெயர்களால் புகழப்படுபவர் யார்? | பாரதியார். |
| 2. | பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் எவை? | ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு. |
| வரிசை எண் | வினா | விடை |
|---|---|---|
| 1. | பாரதியாரின் வசன கவிதைகள் யாருடைய கவிதை சாயலில் அமைந்திருக்கும்? | வால்ட்விட்டமன். |
| 2. | கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் எது? | 24.6.1927. |
| 3. | "காளை மணியோசை, களத்துமணி நெல்லோசை; வாழை இலையோசை; வஞ்சியர்கை வளையோசை" என்ற ஓசைநயமிக்க பாடலை இயற்றியவர் யார்? | கண்ணதாசன். |
| 4. | "கதிர் வெடித்துப் பிழம்புவிழக் கடல் கொதித்துச் சூடேற்ற" என்ற பாடல் மூலம் தமிழ்தாயின் பழைமையைப் பறை சாற்றுபவர் யார்? | கண்ணதாசன். |
| 5. | கண்ணதாசன் எழுதிய வரலாற்றுப் புதினம் எது? | சேரமான் காதலி. |
| வரிசை எண் | வினா | விடை |
|---|---|---|
| 1. | புறநானூறு எந்த வகை நூல்களுள் அடங்கும்? | எட்டுத்தொகை. |
| 2. | மதுரைக் கணக்காயனார் மகனார் யார்? | நக்கீரனார். |
| 3. | பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு, பண்பாடு, நாகரிகச் சிறப்பு போன்றவற்றை அறிய உதவும் எட்டுத்தொகை நூல் எது? | குறுந்தொகை. |
| 4. | வங்கிய சூடாமணி பாண்டியன் இறைவனுக்கு சண்பகமாலை சாத்தி வழிபடுவதற்காக எதனை உருவாக்கினான்? | சண்பக நந்தவனத்தை. |
| 5. | இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் எத்தனை? | 64. |
| 6. | இறைவனின் திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் தொண்டைநாட்டு இளம்பூர் வீமநாதப் பண்டிதரின் நூல் எது? | கடம்பவன புராணம். |
| 7. | திருவிளையாடற் புராணத்தின் மதுரைக்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது? | 18 படலம். |
| 8. | திருவிளையாடற் புராணத்தின் கூடல்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது? | 30 படலம். |
| 9. | திருவிளையாடற் புராணத்தின் திருவாலவாய்க்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது? | 16 படலம். |
| வரிசை எண் | வினா | விடை |
|---|---|---|
| 1. | தமிழர்கள் எந்தெந்த நாடுகளின் பொருள்களை விரும்பி வாங்கியதாகக் கூறப்படுகிறது? | எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம். |
| 2. | கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு போன்ற பெயர்கள் எதனைக் குறிக்கும்? | மரக்கலத்தைக் குறிக்கும் பெயர்கள். |
| 3. | அதியமானின் முன்னோர் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தவை எவை? | சுங்கச்சாலையும், கலங்கரை விளக்கமும். |
| 4. | தமிழ் சொல்லான குமரி என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது? | கொமாரி. |
| 5. | தமிழ் சொல்லான சோபட்டினம் என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது? | சோபட்னா. |
| 6. | தமிழ் சொல்லான தொண்டி என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது? | திண்டிஸ். |
| 7. | தமிழ் சொல்லான மதுரை என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது? | மதோரா. |
| 8. | தமிழ் சொல்லான முசிறி என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது? | முசிரில். |
| 9. | டைஸ் என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் யாது? | நாள். |
| 10. | டைரியம் என்னும் சொல்லின் பொருள் யாது? | நாட்குறிப்பு. |
| 11. | டைரியம் என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவான ஆங்கிலச் சொல் எது? | டைரி. |
| 12. | சுங்குசேஷாசல செட்டியாரின் பெண்கள் இருவருக்கு நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட ஆளுநர் யார் என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பு கூறுகிறது? | முசே துய்ப்ளே. |
| 13. | செங்கற்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? | ஆனந்தரங்கர். |
| 14. | செங்கற்பட்டு மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமிக்கப்பட்டவர் யார்? | ஆனந்தரங்கர். |
| 15. | ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டிருந்தது? | ஆனந்தரங்கருக்கு. |
| 16. | அருணாசலக் கவிராயர் தம் இராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றிய பின்னர், மீண்டும் யார் முன்னிலையில் அரங்கேற்றினார்? | ஆனந்தரங்கர் முன்னிலையில். |
| 17. | ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி என்று கூறியவர் யார்? | கே.கே.பிள்ளை. |
| 18. | கள்வன் நொண்டிச் சிந்து என்னும் நூல் யாரைக் குறித்து வெளிவந்த நூல்? | ஆனந்தரங்கரை. |
| 19. | ஆனந்தரங்க விஜய சம்பு என்ற வடமொழி நூலை இயற்றியவர் யார்? | சீனிவாசக்கவி. |
| 20. | ஆனந்தரங்க ராட்சந்தமு என்னும் தெலுங்கு மொழிநூலை இயற்றியவர் யார்? | கஸ்தூரிரங்கக் கவி. |
| 21. | "தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்" என்று கூறியவர் யார்? | வ.வே.சு. |
| வரிசை எண் | வினா | விடை |
|---|---|---|
| 1. | முத்தொள்ளாயிரம் என்னும் நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆயின் புறத்திரட்டு என்னும் நூல்வாயிலாகக் கிடைத்த வெண்பாக்கள் எத்தனை? | 108 வெண்பாக்கள். |
| 2. | பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக முத்தொள்ளாயிரத்தின் எத்தனை வெண்பாக்கள் கிடைத்துள்ளன? | 22 வெண்பாக்கள். |
| 3. | சிறந்த இலக்கிய நயமும் கற்பனை வளமும் நிறைந்த நூலாகத் திகழ்கிறது எது? | முத்தொள்ளாயிரம். |
| 4. | பாண்டிய மன்னனின் யானை தன் தந்தங்களை எதனைக் கொண்டு மார்போலை எழுதும்? | எழுத்தாணியாக. |
| 5. | கலிங்க மன்னன் அனந்த பத்மன் மீது போர்த் தொடுத்து வெற்றிப் பெற்றவன் யார்? | முதல் குலோத்துங்கச் சோழன். |
| 6. | தோல்வியுற்ற நாட்டின் பெயரால் அமைந்த நூல் எது? | கலிங்கத்துப்பரணி. |
| 7. | நவ்வி இச்சொல்லின் பொருள் யாது? | மான். |
| 8. | முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர் யார்? | செயங்கொண்டார். |
| 9. | செயங்கொண்டாரை "பரணிக்கோர் செயங்கொண்டார்" எனப் பாராட்டியவர் யார்? | பலப்பட்டைச் சொக்கநாதப் புலவர். |
| 10. | "எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணி” என்றவர் யார்? | அறிஞர் அண்ணா. |
| 11. | ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பெயர் என்ன? | பரணி. |
| 12. | தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர்? | சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு. |
| 13. | தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக எந்தத் தீவில் குடியமர்த்தப்பட்டார்கள்? | ரியூனியன் தீவில். |
| 14. | உலக நாடுகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும் நாடுகள் எவை? | சிங்கப்பூர், மொரிசியசு, மலேசியா, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன். |
| 15. | திரு.வி.க அவர்கள் சென்னை இராயப்பேட்டையில் உள்ள எந்தப் பள்ளியில் பள்ளிப் படிப்பைப் படித்தார்? | வெஸ்லி பள்ளி. |
| 16. | "உரைநடை எழுதுவது எனது தொழில்" என்று கூறியவர் யார்? | திரு.வி.க.. |
| 17. | மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம் முதலிய நூல்களை இயற்றியவர் யார்? | திரு.வி.க.. |
| 18. | முருகன் அல்லது அழகு, சைவத்திறவு, சைவத்தின் சமரசம் போன்ற உரைநடை நூல்களின் ஆசிரியர் யார்? | திரு.வி.க.. |
| 19. | தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார் வரலாறு, தமிழ நூல்களில் பௌத்தம் போன்ற உரைநடை நூல்களை இயற்றியவர் யார்? | திரு.வி.க.. |
| 20. | வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் என்னும் நூலை திரு.வி.க. யார் உதவியுடன் வெளியிட்டார்? | மு.வரதராசனாரின். |
| 21. | திரு.வி.க.வின் மனைவியின் பெயர் யாது? | கமலாம்பிகை. |
| 22. | "ஒருவனுக்குத் தன்னைப் பெற்ற தாயின்பால் எத்தகைய அன்புண்டோ அத்தகைய அன்பு அவனது நாட்டினிடத்தும், மொழியினிடத்தும் அவனுக்கு இருத்தல் வேண்டும்" என்று கூறியவர் யார்? | திரு.வி.க.. |
| 23. | "பேசும் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்" என்று கூறியவர் யார்? | திரு.வி.க.. |
| 24. | காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரது மேடை உரையை மொழிபெயர்த்தவர் யார்? | திரு.வி.க.. |
| 25. | கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசுவதில் வல்லவர் யார்? | திரு.வி.க.. |
| 26. | திரு.வி.க இயற்கை எய்திய நாள்? | 17.9.1953. |
| 27. | கவிமணியின் பெற்றோர்கள் யாவர்? | சிவதாணு, ஆதிலட்சுமி. |
| 28. | மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச்செல்வம், ஆசிய ஜோதி போன்ற நூல்களை இயற்றியவர் யார்? | கவிமணி. |
| 29. | கவிமணி வாழ்ந்த காலம்? | 1876 - 1954. |
| 30. | இம்மை மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் செய்யுள் இயற்றியவர் யார்? | உமர்கய்யாம். |
| 31. | ரூபாயத் என்பது என்ன? | நான்கடிச் செய்யுள். |
| 32. | கவிமணியின் உமர்கய்யாம் பாடல்கள் தொகுப்பில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை யாது? | 115. |
| வரிசை எண் | வினா | விடை |
|---|---|---|
| 1. | பசிப்பிணி நீங்கும் அறப்பணியினை மேற்கொண்டவர் யார்? | மணிமேகலை. |
| 2. | பசிப்பிணி நீக்கும் அமுதசுரபி என்ற பாத்திரம் முற்பிறப்பில் யாரிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது? | ஆபுத்திரனிடம். |
| 3. | பேதைமை எனப்படுவது யாது? | அறியாமை. |
| 4. | குற்றங்கள் எத்தனை வகைப்படும் என மணிமேகலை கூறுகிறது? | 10 வகைப்படும். |
| 5. | அறுவகை உயிர்களாக மணிமேகலை கூறுவது யாது? | மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்குத்தொகுதி, பேய். |
| 6. | சாத்தனாரின் இயற்பெயர் யாது? | சாத்தன். |
| 7. | சாத்தனார் பிறந்த ஊர் யாது? | திருச்சியை அடுத்த சீத்தலை. |
| 8. | சாத்தனார் செய்து வந்த தொழில் யாது? | கூலவாணிகம் (கூலம் - தானியம்). |
| 9. | தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்றெல்லாம் சாத்தனாரைப் பாராட்டியவர் யார்? | இளங்கோவடிகள். |
| 10. | மணிமேகலைத் துறவு என்று அழைக்கப்படும் நூல் எது? | மணிமேகலை. |
| 11. | மணிமேகலையில் "ஆபுத்திரன் நாடுஅடைந்த காதை” எத்தனையாவது காதையாக அமைந்துள்ளது? | 24வது காதை. |
| 12. | தமிழில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்கள் யாவை? | சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. |
| 13. | "அருந்தவர்க் கமைந்த ஆசனம்” இவ்வடியில் அருந்தவர் எனக் குறிப்பிடப்படுபவர் யார்? | அறவண அடிகள். |
| 14. | உடலில் தோன்றும் குற்றங்கள் எவை என மணிமேகலை கூறுகிறது? | கொலை, களவு, காமமெனும் கொடிய விருப்பம். |
| 15. | மனத்தில் தோன்றும் குற்றங்கள் எவை என மணிமேகலை கூறுகிறது? | பேரவா, கடுஞ்சினங்கொள்ளுதல், மாயத்தோற்றம். |
| 16. | மறுபிறப்பு உணர்ந்தவளாகக் குறிப்பிடப்படுபவள் யார்? | மணிமேகலை. |
| 17. | மணிமேகலை யார் கூறிய அறிவுரையின்படி முதன்முதலில் ஆதிரையிடம் பிச்சையேற்றாள்? | அறவண அடிகள். |
| 18. | "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று கூறும் நூல்கள் எவை? | புறநானூறு, மணிமேகலை. |
| 19. | "அருந்தியது அற்றது போற்றி உணின்” என்று கூறும் நூல் எது? | திருக்குறள். |
| வரிசை எண் | வினா | விடை |
|---|---|---|
| 1. | நெஞ்சிலுள்ள சளியை நீக்குவது எது? | மஞ்சள். |
| 2. | பித்தத்தைப் போக்குவது எது? | கொத்தமல்லி. |
| 3. | வயிற்றுச் சூட்டைத் தணிப்பது எது? | சீரகம். |
| 4. | தொண்டைக் கட்டைத் தொலைப்பது எது? | மிளகு. |
| 5. | வளியகற்றி வயிற்று அலைச்சலை நீக்கிப் பசியை மிகச்செய்வது எது? | பூண்டு. |
| 6. | குளிர்ச்சி உண்டாக்கி இரத்தத்தைத் (குருதியை) தூய்மைப்படுத்துவது எது? | வெங்காயம். |
| 7. | வலியை வெளியேற்றுவது எது? | பெருங்காயம். |
| 8. | நீர்க்கோவையை நீக்குவது எது? | தேங்காய். |
| 9. | மணமூட்டி உணவு விருப்பை உண்டாக்குவது எது? | கறிவேப்பிலை. |


0 Comments