12-ஆம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் +2 Tamil Part 1


கம்பர் மற்றும் காப்பியங்கள்
  1. 'ஒன்றே யென்னின் ஒன்றேயாம்' என்ற இறைவாழ்த்துப் பாடலைப் பாடிய புலவர் யார்?
    • விடை: கம்பர்
  2. கம்பர் தாம் எழுதிய கம்பராமாயணத்துக்கு சூட்டிய பெயர் என்ன?
    • விடை: இராமவதாரம்
  3. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
    • விடை: திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
  4. விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பன் என்று யாரைப் போற்றுவர்?
    • விடை: கம்பர்
  5. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் யார்?
    • விடை: புகழேந்தி, ஒட்டக்கூத்தர், ஔவையார்
  6. தமிழின் முதல் காப்பியம் எது?
    • விடை: சிலப்பதிகாரம்
  7. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
    • விடை: இளங்கோவடிகள்
  8. இளங்கோவடிகளின் தமையன் பெயர் என்ன?
    • விடை: சேரன் செங்குட்டுவன்
  9. சிலப்பதிகார நூல் முழுமைக்கும் உரையெழுதிய இக்கால உரையாசிரியர் யார்?
    • விடை: ந.மு.வேங்கடசாமி நாட்டார்
  10. இரட்டைக் காப்பியங்கள் என்று கூறப்படும் நூல்கள் எவை?
    • விடை: மணிமேகலை, சிலப்பதிகாரம்
  11. சிலப்பதிகார நூலை 'நெஞ்சையள்ளும் சிலம்பு' எனப் பாராட்டியவர் யார்?
    • விடை: பாரதியார்
  12. சிலப்பதிகார நூலை 'தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தோறும் சிலப்பதிகாரம்' எனப் பாராட்டியவர் யார்?
    • விடை: கவிமணி
  13. கண்ணகியின் தந்தை பெயர் யாது?
    • விடை: மாநாய்கன்
  14. சிலப்பதிகார நூலில் ஊர்சூழ்வரி பகுதி எந்தக் காண்டத்தில் காணப்படுகிறது?
    • விடை: மதுரைக் காண்டம்
  15. ஆதிகவி என்று அழைக்கப்பட்டவர் யார்?
    • விடை: வால்மீகி
  16. கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ள காண்டங்கள் எத்தனை?
    • விடை: 6 காண்டங்கள்
  17. கம்பராமாயணத்தில் உத்தர காண்டத்தை இயற்றிய புலவர் யார்?
    • விடை: ஒட்டக்கூத்தர்
  18. இராமாயண காப்பியத்தின் முடிமணியாக திகழும் காண்டம் எது?
    • விடை: சுந்தர காண்டம்
  19. மணிமேகலை நூலின் ஆசிரியர் யார்?
    • விடை: மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
  20. மணிமேகலை எந்த சமயக் காப்பியம்?
    • விடை: புத்த சமயக் காப்பியம்
திருக்குறள் மற்றும் நீதி நூல்கள்
  1. 'தமிழ்மாதின் இனிய உயிர்நிலை' என்று உலகோரால் பாராட்டப்பட்ட நூல் எது?
    • விடை: திருக்குறள்
  2. திருக்குறளைப் போற்றி ஔவையார் பாடிய வரி எது?
    • விடை: 'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டில் குறுகத் தறித்த குறள்'
  3. திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறைசாற்றும் நூல் எது?
    • விடை: திருவள்ளுவ மாலை
  4. 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று கூறியவர் யார்?
    • விடை: பாரதியார்
  5. 'வள்ளுவனை பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே' என்று புகழ்ந்து பாடியவர் யார்?
    • விடை: பாரதிதாசன்
  6. திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் என்று கற்றோர்களால் புகழப்பட்டவர் யார்?
    • விடை: பரிமேலழகர்
  7. 'உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு' - என்று கூறியவர் யார்?
    • விடை: மாங்குடி மருதனார்
சங்க இலக்கியம்
  1. புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்கள் மொத்தம் எத்தனை?
    • விடை: 12
  2. புறநானூற்று நூலில் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?
    • விடை: பாரதம் பாடிய பெருந்தேவனார்
  3. புறநானூற்றுப் பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
    • விடை: ஜி.யு.போப்
  4. 'பல்சான் றீரே பல்சான் றீரே' - எனும் பாடலை இயற்றியவர் யார்?
    • விடை: நரிவெரூஉத் தலையார்
  5. புறநானூற்றுப் பாடலின் அடிவரையறை என்ன?
    • விடை: 4 முதல் 40 அடிவரை
  6. புறநானூற்றுப் பாடல்கள் அனைத்தும் எந்த வகைப் பாக்களால் ஆனது?
    • விடை: அகவற்பாக்களால் ஆனது
  7. அகநானூற்றுப் பாடல்களை தொகுத்தவர் யார்?
    • விடை: மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மார்
  8. அகநானூற்றுப் பாடலின் வேறு பெயர் யாது?
    • விடை: நெடுந்தொகை
  9. அகநானூற்றில் 1, 3, 5 என்ற எண்ணில் வரும் பாடல்கள் எத்திணையைச் சார்ந்தவை?
    • விடை: பாலைத்திணை
  10. அகநானூறு நூல் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
    • விடை: 3 பிரிவுகள் (களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை)
  11. நற்றிணை நூலை தொகுப்பித்தவர் யார்?
    • விடை: பன்னாடு தந்த மாறன் வழுதி
  12. குறுந்தொகை நூலின் அடிவரையறை யாது?
    • விடை: 4 அடிச் சிறுமையும் முதல் 8 அடிப் பெருமையும் கொண்டது
  13. 'உள்ளது சிதப்போர் உளரெனப் படாஅர்' என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
    • விடை: குறுந்தொகை
  14. குறுந்தொகை என்ற நூலை தொகுத்தவர் யார்?
    • விடை: பூரிக்கோ
  15. ஐந்திணை உரிப்பொருளில் பாலைத் திணைக்குரியது எது?
    • விடை: பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
  16. 'யாரு மில்லை தானே கள்வன்' - என்ற பாடலை இயற்றியவர் யார்?
    • விடை: கபிலர்
  17. எந்த மன்னனின் அவைக்களப் புலவராக கபிலர் திகழ்ந்தார்?
    • விடை: பாரி மன்னன்
  18. 'புலனழுக் கற்ற அந்தணாளன்' - என்று கபிலரைப் புகழ்ந்தவர் யார்?
    • விடை: நக்கீரர் (மற்றும் பிறர்)
  19. கபிலரை 'வாய்மொழிக் கபிலன்' எனப் பாராட்டியவர் யார்?
    • விடை: நக்கீரர்
  20. ஐங்குறுநூறு நூலினை தொகுத்தவர் யார்?
    • விடை: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
  21. ஐங்குறுநூறு நூலினை தொகுப்பித்தவர் யார்?
    • விடை: கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  22. 'மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை' - என்ற வரிப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
    • விடை: ஐங்குறுநூறு
அயல் சமய மற்றும் பிற காப்பியங்கள்
  1. இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் யார்?
    • விடை: எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
  2. கிறித்துவக் கம்பர் என்று போற்றப்படும் கவிஞர் யார்?
    • விடை: எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
  3. சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
    • விடை: உமறுப்புலவர்
  4. யார் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்?
    • விடை: வள்ளல் சீதக்காதி
  5. தேம்பாவணி நூலை இயற்றிய ஆசிரியர் யார்?
    • விடை: வீரமாமுனிவர்
  6. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவர் யார்?
    • விடை: சூசை மாமுனிவர்
  7. வீரமாமுனிவரின் இயற்பெயர் யாது?
    • விடை: கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி
  8. வீரமாமுனிவர் திருக்குறளின் எந்தப் பால்களை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார்?
    • விடை: அறத்துப்பால் மற்றும் பொருட்பால்
சிற்றிலக்கியங்கள்
  1. சிற்றிலக்கியத்தின் இலக்கணத்தை விளக்கி கூறும் நூல் எது?
    • விடை: பாட்டியல் நூல்கள் (குறிப்பாக வச்சணந்திமாலை)
  2. வீரமாமுனிவர் இயற்றிய எந்த நூலில் பிரபந்தம் 96 எனக் கூறப்பட்டுள்ளது?
    • விடை: சதுரகாதி
  3. உலா என்பதன் பொருள் யாது?
    • விடை: பவனிவரல்
  4. உலா இலக்கியத்தின் வேறு பெயர் யாது?
    • விடை: உலாப்புறம்
  5. மூவருலாவைப் பாடியவர் யார்?
    • விடை: ஒட்டக்கூத்தர்
  6. ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர்கள் யாவை?
    • விடை: கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சன்
  7. திருவேங்கடத்து அந்தாதி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
    • விடை: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  8. முதல் அந்தாதி நூல் எது?
    • விடை: அற்புதத்திருவந்தாதி
  9. அற்புதத்திருவந்தாதி என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
    • விடை: காரைக்கால் அம்மையார்
  10. தமிழில் தோன்றிய முதல் கலம்பக நூல் எது?
    • விடை: நந்திக் கலம்பகம்
  11. மதுரைக் கலம்பக நூலை இயற்றியவர் யார்?
    • விடை: குமரகுருபரர்
  12. குமரகுருபரர் யாரின் திருவருளால் பேசும் திறனைப் பெற்றார்?
    • விடை: திருச்செந்தூர் முருகப் பெருமான்
  13. முக்கூடற்பள்ளு நூலின் பாட்டுடைத்தலைவன் யார்?
    • விடை: அழகர்
  14. உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சுவை பெறச் சொல்லும் சிற்றிலக்கியம் எது?
    • விடை: பள்ளு
  15. 'நண்ணு மிளமைப் பருவத்தி லேமுதல்' என்ற வரிப் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
    • விடை: தமிழரசி குறவஞ்சி
  16. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்?
    • விடை: சுவாமி மலையில் உள்ள முருகப்பெருமான்
புலவர் பெருமக்கள்
  1. கற்றோரால் 'புலவரேறு' என்று சிறப்பிக்கப் பெற்றவர் யார்?
    • விடை: அ.வரதநஞ்சையப் பிள்ளை
  2. 'இந்திய நாடிது என்னுடை நாடே' என்ற பாடலை பாடியவர் யார்?
    • விடை: நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்
  3. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் எந்தக் கலையில் சிறந்தவராக விளங்கினார்?
    • விடை: ஓவியக்கலை
  4. வெ.இராமலிங்கனார் அவர்கள் வரைந்த முதல் ஓவியம் எது?
    • விடை: இராமகிருஷ்ணர்
  5. உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்கள் வழிநடைப் பாடல் பாடுவதற்கு வெ.இராமலிங்கனார் அவர்கள் இயற்றிய பாடல் எது?
    • விடை: 'கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது'
  6. 'நமக்கு தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்' - எனக் கூறியவர் யார்?
    • விடை: பாரதியார்
  7. 'பாரதி' - என்ற சொல்லின் பொருள் யாது?
    • விடை: கலைமகள்
  8. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கவிஞர் யார்?
    • விடை: பாரதியார்
  9. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்' எனப் பாடியவர் யார்?
    • விடை: பாரதியார்
  10. 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்' - என்று பாடியவர் யார்?
    • விடை: பாரதியார்
  11. பாண்டியன் பரிசு என்ற நூலை இயற்றியவர் யார்?
    • விடை: பாவேந்தர் பாரதிதாசன்
  12. பாரதிதாசனுக்கு 'பாவேந்தர்' என்ற பட்டத்தை அருளியவர் யார்?
    • விடை: அண்ணா
  13. பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
    • விடை: சுப்புரத்தினம்
  14. பாரதிதாசன் அவர்கள் எழுதிய எந்த நாடக நூலுக்குச் சாகித்திய அகாடமி பரிசு கிடைத்தது?
    • விடை: பிசிராந்தையார்
  15. புதுவை அரசின் தமிழ் வாழ்த்துப் பாடலாக அமைந்துள்ள பாரதிதாசன் பாடல் வரி எது?
    • விடை: 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே'
  16. பல்வேறு கவிஞர்கள் தோன்றி வளரக் காரணமாயிருந்த பாரதிதாசன் தொடங்கிய இதழ் எது?
    • விடை: குயில்
  17. 'தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! வேறென்ன வேண்டும் இனி?' - என்று பாடியவர் யார்?
    • விடை: பாரதிதாசன்
  18. 'பாரதிதாசன் பரம்பரை' என்றழைக்கப்படும் தலைமுறையில் வந்த கவிஞர் யார்?
    • விடை: வாணிதாசன்
  19. 'தமிழகத்தின் வோர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டப்பட்ட கவிஞர் யார்?
    • விடை: வாணிதாசன்
  20. வாணிதாசன் இயற்றிய கவிதைகள் எம்மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?
    • விடை: உருசியம், ஆங்கிலம்
  21. பாரதிதாசனின் தலைமாணாக்கர் என்று அழைக்கப்படுபவர் யார்?
    • விடை: சுரதா
  22. சுரதாவின் இயற்பெயர் யாது?
    • விடை: இராசகோபாலன்
  23. மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்பட்டவர் யார்?
    • விடை: கவிக்கோ அப்துல் ரகுமான்
  24. தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
    • விடை: சுந்தரர்
பிற பொதுவான கேள்விகள்
  1. வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
    • விடை: உள்ளுறை உத்தி
  2. இசைத் தமிழுக்கு எடுத்துக்காட்டாய் கூறப்படும் இடைக்காலத்தில் தோன்றிய நூல் எது?
    • விடை: தேவாரம்
  3. எல்லா மொழிகட்கும் அடிப்படை ஒன்றே, அஃது ஒலி அல்லது நாதம் என்று கூறியவர் யார்?
    -   விடை: திரு.வி.க

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement