சங்க இலக்கியம் மற்றும் அறநூல்கள்:
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1. | புறநானூற்று நூலில் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்? | பாரதம் பாடிய பெருந்தேவனார் |
| 2. | புறத்திணைகளுள் சொல்லப்படாத செய்திகளையும், பொதுவான செய்திகளையும் கூறும் திணை எது? | பொதுவியல் திணை |
| 3. | துறவியராகிய மெய்யுணர்ந்தோர் கண்ட பொருள் 'இதுவென' அதன் இயல்பை உணர்த்தும் துறை எது? | பொருண்மொழிக் காஞ்சி |
| 4. | அகநானூறு நூலில் 10, 20 என்ற எண்ணில் வரும் பாடல்கள் எந்தத் திணையைச் சார்ந்தவை? | நெய்தல் திணை |
| 5. | அகநானூறு நூலில் 6, 16 என்ற எண்ணில் வரும் பாடல்கள் எந்தத் திணையைச் சார்ந்தவை? | மருதத் திணை |
| 6. | 'பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன' - எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடலை இயற்றியவர் யார்? | மதுரை மள்ளனார் |
| 7. | நற்றிணை நூலின் அடிவரையறை என்ன? | 9 அடிச் சிறுமையும் முதல் 12 அடிப் பெருமையும் கொண்டது |
| 8. | நற்றிணை பாடலில் வரும் 'இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்' என தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? | நக்கண்ணையார் |
| 9. | ஐங்குறுநூறு நூலில் மருதத் திணையைப் பாடிய புலவர் யார்? | ஓரம்போகியார் |
| 10. | ஐங்குறுநூறு நூலில் நெய்தல் திணையைப் பாடிய புலவர் யார்? | அம்மூவனார் |
| 11. | ஐங்குறுநூறு நூலில் பாலைத் திணையைப் பாடிய புலவர் யார்? | ஓதலாந்தையார் |
| 12. | மறுதரவுப் பத்து என்பது ஐங்குறுநூறு நூலில் எந்தத் திணைப் பாடலில் அமைந்துள்ளது? | பாலைத் திணை |
| 13. | திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை? | 4 (பாயிரவியல், இல்லறவியல், துறவியல், ஊழியல்) |
| 14. | திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை? | 70 |
| 15. | திருக்குறளில் காமத்துப்பாலில் உள்ள இயல்கள் யாவை? | களவியல், கற்பியல் |
| 16. | திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் ஒருவர் பெயரைச் சொல்லவும்? | தருமர் (அல்லது மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையன், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர்) |
| 17. | 'தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட' என்று திருக்குறளின் பெருமையைக் கூறியவர் யார்? | கபிலர் |
| 18. | 'செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்' - என்று பாடியவர் யார்? | கவிமணி |
| 19. | 'பகடு நடந்த கூழ்' என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது? | நாலடியார் |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 20. | சிலப்பதிகார நூலில் புகார்க் காண்டத்தில் உள்ள காதைகள் எத்தனை? | 10 காதைகள் |
| 21. | சிலப்பதிகார நூலில் மதுரைக் காண்டத்தில் உள்ள காதைகள் எத்தனை? | 13 காதைகள் |
| 22. | சிலப்பதிகார நூலில் வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகள் எத்தனை? | 7 காதைகள் |
| 23. | சிலப்பதிகார நூலுக்கு உரையெழுதிய பழைய உரையாசிரியர்கள் யார்? | அரும்பத உரைகாரர் மற்றும் அடியார்க்கு நல்லார் |
| 24. | 'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக' - என்று இளங்கோவடிகளிடம் கூறியவர் யார்? | சீத்தலைச் சாத்தனார் |
| 25. | 'நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' - என்று கூறியவர் யார்? | இளங்கோவடிகள் |
| 26. | கோவலனின் தந்தை பெயர் என்ன? | மாசாத்துவான் |
| 27. | புகார் நகரத்தில் 'தலைக்கோலரிவை' என்ற பட்டத்தைப் பெற்றவள் யார்? | மாதவி |
| 28. | கவுந்தியடிகள் கோவலன் மற்றும் கண்ணகியை மதுரையில் யாரிடம் அடைக்கலம் தந்தார்? | மாதிரி |
| 29. | 'கழுத்தில் விழுந்த மாலை கழட்ட முடியவில்லை காரிகையே இதுயார் செய்த சூதோ' என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது? | கர்ணகை நாடகம் |
| 30. | வால்மீகி இயற்றிய நூலின் பெயர் என்ன? | இராம காதை (ஆதிகாவியம்) |
| 31. | கம்பராமாயணத்தில் உள்ள மொத்தப் பாடல்கள் எத்தனை? | 10589 பாடல்கள் |
| 32. | கம்பராமாயணத்தில் 4-வதாக அமைந்துள்ள காண்டம் எது? | கிட்கிந்தா காண்டம் |
| 33. | திருவடி தொழுத படலம் அமைந்துள்ள காண்டம் எது? | சுந்தர காண்டம் |
| 34. | இராமன் அனுமனிடம் சீதைக்காகக் கொடுத்தனுப்பிய பொருள் எது? | கணையாழி |
| 35. | சீதா பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம் (கெடு) என்ன? | ஒரு திங்கள் |
| 36. | 'கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக் கண்டேன் இராகவா' - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது? | இராமநாடகக் கீர்த்தனை |
| 37. | மணிமேகலை நூலில் உள்ள காதைகள் எத்தனை? | 30 காதைகள் |
| 38. | சீவக சிந்தாமணிக்கு நிகரான நூல் என்று கூறப்படும் நூல் எது? | நீலகேசி |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 39. | தேம்பாவணி நூலின் அமைப்பு என்ன? | 3 காண்டங்கள் + 36 படலங்கள் + 3615 பாடல்கள் |
| 40. | 'தேம்பாவணி' என்ற சொல்லின் பொருள் என்ன (பிரித்து அறியும் போது)? | என்றும் வாடாத மாலை (தேம்பா + அணி) |
| 41. | கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நூல் எது? | தேம்பாவணி |
| 42. | கொன்ஸ்டான் என்னும் சொல்லின் பொருள் என்ன? | அஞ்சாமை |
| 43. | வீரமாமுனிவர் தமிழகம் வந்த ஆண்டு எது? | கி.பி 1710 |
| 44. | வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல்கள் எவை? | செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம் |
| 45. | கோலியாத்தை எதிர்த்துப் போரிட்ட சிறுவன் யார்? | தாவீதன் |
| 46. | தாவீதன் என்ற இளைஞன் கோலியாத்தை வீழ்த்த பயன்படுத்திய கருவி எது? | கவன் |
| 47. | இரட்சணிய யாத்திரிகம் என்ற நூல் எதனைத் தழுவி எழுதப்பட்டது? | பில்கிரிம்ஸ் பிராகிரஸ் |
| 48. | உமறுப்புலவரின் ஆசிரியர் பெயர் என்ன? | கடிகை முத்துப் புலவர் |
| 49. | நபிகள் நாயகத்தின் வரலாறு முழுமையாக முடிவுபெற்ற நூல் எது? | சின்ன சீறா |
| 50. | சின்ன சீறா என்ற நூலை இயற்றியவர் யார்? | பனு அகமது மரைக்காயர் |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 51. | 'பிரபந்தம்' என்ற வடசொல்லின் பொருள் யாது? | நன்கு கட்டப்பட்டது |
| 52. | சிற்றிலக்கியங்களுள் சிறப்பானவையாகக் கருதப்படும் இலக்கியங்கள் எவை? | உலா, தூது, கலம்பகம், பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, அந்தாதி |
| 53. | உலா நூலில் கூறப்படும் ஏழுவகைப் பருவ மகளிரில் 40 வயது வரை உள்ளவர் யார்? | பேரிளம்பெண் |
| 54. | உலா என்னும் சிற்றிலக்கியப் பாடல்கள் எந்த வகை பாக்களால் இயற்றப்பட்டுள்ளது? | கலிவெண்பா |
| 55. | உலாவின் முன்னிலையில் கூறப்படும் சிறப்புகள் எவை? | ஒப்பனை, பாட்டுடைத்தலைவன் சிறப்பு, நீராடல், ஊர்வலம் |
| 56. | 'ஒட்டம்' என்பதன் பொருள் யாது? | பந்தயம் |
| 57. | ஒட்டக்கூத்தர் இயற்றிய வேறு நூல்கள் எவை? | தக்கயாகப்பரணி, ஈட்டி எழுபது, அரும்பைத்தொள்ளாயிரம் |
| 58. | அந்தாதி - வரையறை தருக. | ஒரு பாடலின் இறுதி அடுத்த பாடலின் முதலாக வருவது |
| 59. | பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்களின் வேறு பெயர்கள் யாது? | அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி |
| 60. | பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் எழுதிய எட்டு நூல்களின் தொகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? | அஷ்டபிரபந்தம் |
| 61. | 'சொற்றொடர்நிலை' என அழைக்கப்படுவது எது? | அந்தாதி |
| 62. | பொன்வண்ணந்தந்தாதி என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்? | சேரமான் பெருமாள் நாயனார் |
| 63. | திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்? | நம்பியாண்டார் நம்பி |
| 64. | கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாகக் கூறியவர் யார்? | டாக்டர் உ.வே.சா |
| 65. | அந்தாதி தொடையில் 100 பாடல்கள் வரை பாடுவது எவ்வாறு அழைக்கப்படும்? | கலம்பகம் |
| 66. | குமரகுருபரர் இயற்றிய வேறு நூல்கள் எவை? | மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கந்தர்கலி வெண்பா, சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் |
| 67. | வடமொழிக்கவிஞர் காளிதாசன் எழுதிய உலகப்புகழ் பெற்ற தூது நூல் எது? | மேகசந்தேசம் |
| 68. | முக்கூடலில் கலக்கும் ஆறுகள் எவை? | தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு |
| 69. | சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியம் கொண்ட நூல் எது? | முக்கூடற்பள்ளு |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 70. | சுந்தரரின் இயற்பெயர் யாது? | நம்பியாரூரர் |
| 71. | சுந்தரர் எந்த அரசரால் வளர்க்கப்பட்டார்? | நரசிங்க முனையரையர் |
| 72. | சுந்தரர் எழுதிய எந்த நூலை முதனூலாகக் கொண்டு பெரியபுராணம் எழுதப்பட்டது? | திருத்தொண்டத் தொகை |
| 73. | குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது? | திருவஞ்சிக்களம் |
| 74. | திருவாய்மொழிக்கு 'ஈடு' என்னும் பேருரை எழுதியவர் யார்? | வடக்குத் திருவீதிப் பிள்ளை |
| 75. | 'சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்த்தேன்' - என்ற பாடலை பாடியவர் யார்? | இராமலிங்க சுவாமிகள் |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 76. | பாஞ்சாலி சபதம் நூலில் உள்ள சருக்கங்கள் எத்தனை? | 5 சருக்கங்கள் |
| 77. | மாலைக்கால வருணை என்ற பகுதி பாஞ்சாலி சபதத்தில் எந்தச் சருக்கத்தில் உள்ளது? | அழைப்புச் சருக்கம் |
| 78. | 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' என்று பாடியவர் யார்? | பாரதியார் |
| 79. | 'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே' - என பாடியவர் யார்? | பாரதிதாசன் |
| 80. | 'தமிழ்க் கவிதைக்களஞ்சியம்' என்ற நூலாக வெளியிடப்பட்ட கவிதைகளை எழுதியவர் யார்? | வாணிதாசன் |
| 81. | 'தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்டவர் யார்? | வாணிதாசன் |
| 82. | வாணிதாசன் பெற்ற பிரெஞ்சு அரசு விருது எது? | செவாலியர் |
| 83. | தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய்ப் பாடல் செய்தவர் திருவள்ளுவர் என்று பாடியவர் யார்? | சுரதா |
| 84. | 'சோகம் தராதவன் அசோகன்' - என்று பாடியவர் யார்? | சுரதா |
| 85. | சுரதாவின் எந்த நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்றுள்ளது? | தேன்மழை |
| 86. | ஆலந்தூர் கோ.மோகனரங்கனின் எந்த நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது? | இமயம் எங்கள் காலடியில் |
| 87. | தாராபாரதி எழுதிய கவிதைத் தொகுப்பு எது? | எங்கள் கிழக்கு |
| 88. | அப்துல் ரகுமான் பிறந்த ஊர் எது? | மதுரை |
| 89. | 'சிறந்த சொற்களை சிறந்த முறையில் வைப்பது கவிதை' என்று கூறியவர் யார்? | கோலரிட்ஜ் |
| 90. | 'ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை' என்று கூறியவர் யார்? | வோர்ட்ஸ்வொர்த் |
| 91. | பாண்டியன் பரிசு நூலில் கதிர் நாட்டை ஆண்ட மன்னன் யார்? | கதிரை வேலன் |
| 92. | பாண்டியன் பரிசு நூலில் அன்னத்தின் தோழி பெயர் என்ன? | நீலி |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 93. | கரந்தை தமிழ்ச் சங்கத்தில் 'ஆசிரியர்' பட்டம் பெற்றவர் யார்? | அ.வரதநஞ்சையப் பிள்ளை |
| 94. | அ.வரதநஞ்சையப் பிள்ளை அவர்களுக்கு 'தங்கத்தோடா' பரிசு அளித்தவர் யார்? | நமச்சிவாய முதலியார் |
| 95. | நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் அவர்களுக்கு மத்திய அரசு அளித்த விருது எது? | பத்மபூஷண் |
| 96. | போரவைக் கோப்பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னன் வெற்றிக் கொண்ட மன்னன் யார்? | ஆமூர் மல்லன் |
| 97. | 'சுபாஷாபிமானம்' என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ்ப் பொருள் என்ன? | தாய் மொழிப்பற்று |
| 98. | மக்கள் நாகரிகம் எத்தனை நிலைகள் கொண்டதாக பாவாணர் கூறுகிறார்? | 4 நிலைகள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், நகரம்) |
| 99. | முதன் முதலில் குறிஞ்சி நிலத்திற்கே உரிய விலங்கு எது? | ஆ, பசு |
| 100. | அலுவலகச் சொல் 'புரோநோட்' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன? | ஒப்புச் சீட்டு |


0 Comments