Ad Code

Responsive Advertisement

11-ஆம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் +1 Tamil Part 3


நூல் மற்றும் ஆசிரியர் பெயர்கள்
  1. நன்னூல் - "காலம் களனே காரணம் என்று இம் மூவகை ஏற்றி மொழிநரும் உளரே" எனக் கூறும் நூல்.
  2. நன்னூல் - "முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்" என்று பாயிரத்திற்குரிய பெயர்களைக் கூறும் நூல்.
  3. நீலகேசி - "மரங்களும் மன்னுயிர் எய்தின என்ன" என்று பாடிய நூல்.
  4. திருமந்திரம் - "துணையாய் வருவது தூயநற் கல்வி" எனக் கூறும் நூல்.
  5. தொல்காப்பியம் - "ஆசாற் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல்" என்று கல்வி முறையைப் பற்றிக் கூறும் நூல்.
  6. முதுமொழிமாலை - நூலின் ஆசிரியர் உமறுப்புலவர்.
  7. Extracts from Purananuru and Puraporul Venbamalai - நூலின் ஆசிரியர் ஜி.யூ.போப்.
  8. சூளாமணி வசனம் - நூலின் ஆசிரியர் சி.வை.தாமோதரனார்.
  9. எழுத்து இதழ் தொகுப்பு - நூலின் தொகுப்பாசிரியர் கி.அ.சச்சிதானந்தன்.
  10. அடுத்த நூற்றாண்டு - நூலின் ஆசிரியர் சுஜாதா.
  11. கணினியை விஞ்சும் மனித மூளை - நூலின் ஆசிரியர் கா.விசயரத்தினம்.
  12. பாரதியைப் பற்றி நண்பர்கள் - நூலின் ஆசிரியர் ரா.அ.பத்மநாபன்.
  13. முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் உரைகளின் ஆசிரியர் டி.கே.சி.
  14. மீனாட்சி ஸ்தோத்திரம் பாடியவர் ஆதிசங்கரர்.
  15. வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது - நூலின் ஆசிரியர் இளையராஜா.
  16. சிவானந்த நடனம் - நூலின் ஆசிரியர் ஆனந்த குமாரசுவாமி.
  17. தஞ்சைப் பெருவுடையார் கோயில் - நூலின் ஆசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
  18. Love Poems from a Classical Tamil Anthology - நூலின் ஆசிரியர் ஏ.கே.ராமானுஜம்.
  19. உருமாற்றம் (Metamorphosis) - நூலின் ஆசிரியர் காப்கா.
  20. சொற்கள் - நூலின் ஆசிரியர் ழாக் பிரெவர்.
  21. குட்டி இளவரசன் - நூலின் ஆசிரியர் எக்சுபெரி.
  22. உலகக் கவிதைகள் - நூலின் ஆசிரியர் பிரம்மராஜன்.
  23. சொல்லாக்கம் - நூலின் ஆசிரியர் இ.மறைமலை.
  24. மஸ்னவி பாரசீக ஞான காவியம் இயற்றியவர் மௌலானா ரூமி.
  25. என் வாழ்க்கை என் கையில் - நூலின் ஆசிரியர் ஞாநி.
  26. நான் வித்யா - நூலின் ஆசிரியர் லிவிங் ஸ்மைல் வித்யா.
  27. தாகூரின் கடிதங்கள் நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் த.நா.குமாரசுவாமி.
  28. மனைவியின் கடிதம் (தாகூர் சிறுகதைகள்) நூலை மொழிபெயர்த்தவர் த.நா.குமாரசுவாமி.
  29. மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள் நூலின் மொழிபெயர்ப்பாளர் அய்யாசாமி.
  30. தமிழ் அழகியல், நவீன ஓவியம் - கட்டுரை நூல்களின் ஆசிரியர் இந்திரன்.
  31. உயிர்த்தெழும் காலத்துக்காக - கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் சு.வில்வரத்தினம்.
  32. கடல்புறா - நூலின் ஆசிரியர் சாண்டில்யன்.
  33. நல்ல தமிழ் எழுத வேண்டுமா? - நூலின் ஆசிரியர் அ.கி.பரந்தாமனார்.
  34. சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - நூலின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரனார்.
  35. குறடு, நெரிகட்டு - சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர் அழகிய பெரியவன்.
  36. உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு - கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர் அழகிய பெரியவன்.
  37. மீள்கோணம், பெருகும் வேட்கை - கட்டுரைத் தொகுப்புகளின் ஆசிரியர் அழகிய பெரியவன்.
  38. வெயிலும் நிழலும் - கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் பிரமிள்.
  39. நட்சத்திரவாசி - நாடக நூலின் ஆசிரியர் பிரமிள்.
  40. ஊமைச்செந்நாய், மத்தகம் - நூல்களின் ஆசிரியர் ஜெயமோகன்.
  41. அறம் - சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் ஜெயமோகன்.
  42. வீரைத் தலபுராணம், சங்கரன்கோவில் திரிபந்தாதி - நூல்களின் ஆசிரியர் சென்னிகுளம் அண்ணாமலையார்.
  43. சுதந்திர தாகம், ஜீவனாம்சம் - நூல்களின் ஆசிரியர் சி.சு.செல்லப்பா.
  44. பொங்கியெழு கேணி, மின்சாரம், ராக்கெட்டும் துணைக்கோள்களும் - நூல்களின் ஆசிரியர் பெ.நா.அப்புசாமி.
  45. தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதய நகரிலிருந்து - நூல்களின் ஆசிரியர் இ.ரா.மீனாட்சி.
  46. ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ் - நூலின் ஆசிரியர் புலவரேறு அரிமதி தென்னகன்.
  47. ஒரு புளிய மரத்தின் கதை, குழந்தைகள் பெண்கள் ஆண்கள், செம்மீன், தோட்டியின் மகன் (மொழிபெயர்ப்பு) - நூல்களின் ஆசிரியர் சுந்தர ராமசாமி.
  48. பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேரதாண்டவம் - நூல்களின் ஆசிரியர் பாரதிதாசன்.
  49. இராமேஸ்வரத் தீவு, உறையூர் அழிந்த வரலாறு, கொங்கு நாட்டு வரலாறு, துளு நாட்டு வரலாறு, சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் - நூல்களின் ஆசிரியர் மயிலை சீனி.வேங்கடசாமி.
  50. ஜீவா வாழ்க்கை வரலாறு - நூலின் ஆசிரியர் கே.பாலதண்டாயுதம்.
  51. நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை - நூல்களின் ஆசிரியர் அப்துல் ரகுமான்.
  52. காஞ்சனை, சாபவிமோசனம் - கதைகளின் ஆசிரியர் புதுமைப்பித்தன்.
  53. தெய்வமணிமாலை, கந்தர் சரணப்பத்து - நூல்களின் ஆசிரியர் வள்ளலார்.
  54. தாமரை நெஞ்சம் - நூலின் ஆசிரியர் அகிலன்.
  55. இளமை விருந்து, முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சைவத்திறவு, பொதுமை வேட்டல் - நூல்களின் ஆசிரியர் திரு.வி.க.
மேற்கோள்கள் மற்றும் கூற்றுகள்
  1. சு.வில்வரத்தினம் - "வழிவழி நினதடி தொழுதவர், உழுதுவர், விதைத்தவர்" மற்றும் "கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்" என்று பாடியவர்.
  2. மசானபு ஃபுகோகா - "இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய்" மற்றும் "விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லா காலத்திலும் திகழும்" என்றவர்.
  3. பெரியவன் கவிராயர் - "மலரில் ஆரளி இந்துளம் பாடும்" (வடகரை நாட்டின் வளம்), "வளருங் காவில் முகில்தொகை ஏறும்" (தென்கரை நாட்டின் வளம்), "இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும்" என்று பாடியவர்.
  4. சென்னிகுளம் அண்ணாமலையார் - "அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம்" என்று பாடியவர்.
  5. பேராசிரியர் க்வாபெனா போஹென் - "உலகின் அதிவிரைவு கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட மனித மூளை சிறந்தது" என்றவர்.
  6. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - "வறிது நிலைஇய காயமும்" என்று பாடியவர்.
  7. மா.ராசமாணிக்கனார் - "சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் விளங்கியது" என்று கூறியவர்.
  8. போதனார் - நற்றிணையில் "கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்" என்று பாடியவர்.
  9. வ.வே.சு - "அந்த காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் சித்திரகுப்தன் எழுதிவரும் பதிவை போல எழுதியவர்" என ஆனந்தரங்கரைப் புகழ்ந்தவர்.
  10. வீரை வெளியன் தித்தனார் - "முறைபுரிந்து அறன்நெறி பிழையாத் திறன்அறி மன்னர்" என்று பாடியவர்.
  11. ஷேக்ஸ்பியர் - "ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு" என்று கூறியவர்.
  12. கம்பர் - "தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின்" என்று பாடியவர்.
  13. குமட்டூர் கண்ணனார் - "மண்ணுடை ஞாலத்து மண்ணுயிர்க்கு எஞ்சாது" என்று பாடியவர்.
  14. கவிஞாயிறு தாராபாரதி - "எத்தனை உயரம் இமயமலை அதில் இன்னொரு சிகரம் உனது தலை" என்று பாடியவர்.
  15. மகாகவி பாரதியார் - "பெண்மை வெல்கென்று கூத்திடுவோம்" என்று பாடியவர்.
  16. பாரதிதாசன் - "மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே" மற்றும் "மானுட சமுத்திரம் நானென்று கூவு" என்று பாடியவர்.
  17. திருமூலர் - "தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனுமாய் நிற்கும்" என்றவர்.
  18. சிவவாக்கியர் - "நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள்" என்று பாடியவர்.
  19. கிருஷ்ணன் - "ஏழ்எழு பிறப்பும் இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று உரையாக இதயம் நீ அளித்தருள்" என்று கர்ணனிடம் வேண்டியவர்.
  20. கர்ணன் - "ஓவிஇலாது பயன் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ" என்று கூறியவர்.
  21. ரவீந்திரநாத் தாகூர் - "பாரத நாட்டினர் மனிதன் விலங்காக மாறுவதையும் விலங்கு மனிதனாக மாறுவது பற்றி எதுவும் தவறாக எண்ணுவது இல்லை" என்றவர்.
  22. பேராசிரியர் சுந்தரனார் - "உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்" என்று பாடியவர்.
  23. திரு.வி.க - "நமது நாடு நாடாக இருக்கிறதா?" என்று கேட்டவர்.
  24. திரிகூடராசப்பக் கவிராயர் - குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை பாடியவர்.
இடம் குறித்த குறிப்புகள்
  1. மதினா - சீறாப்புராணத்தில் "நல்தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்" என்று குறிப்பிடப்படும் நகர்.
இதழ்கள் மற்றும் அவற்றின் ஆசிரியர்கள்
  1. வெளிச்சம், நுண்கலை - இதழ்களின் ஆசிரியர் இந்திரன்.
  2. அன்னம் விடு தூது, கவி - இதழ்களின் ஆசிரியர் மீ.இராசேந்திரன்.
  3.  - இதழின் ஆசிரியர் ஆத்மநாம்.
  4. குயில் - என்ற இலக்கிய இதழை நடத்தியவர் பாரதிதாசன்.
  5. தேசபக்தன், நவசக்தி - இதழ்களின் ஆசிரியர் திரு.வி.க.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement