பேச்சு மற்றும் மொழி பற்றிய கூற்றுகள்
- "மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாகப் பிரிந்து" என்று கூறியவர்: எர்னஸ்ட் காசிரர்
- "உலகை மொழி கட்டி எழுப்பியது என்று சொல்கிறபோது" என்று கூறியவர்: இந்திரன்
- "நேரடி மொழி தான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" என்றவர்: ஆற்றூர் ரவிவர்மா
- "நாம் பிறக்கும் போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம்" என்று கூறியவர்: நோம் சோம்ஸ்கி
- "நூலே நுவில்வோன் நுவலும் திறனே" என்று தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்: நன்னூல்
- "மாடக்குச் சித்திரமும் மாநகர்க்கு கோபுரமும்" என்று கூறும் நூல்: நன்னூல்
- "வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்: நற்றிணை
- "சலச வாவியில் செங்கயல் பாயும்" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்: திருமலை முருகன் பள்ளு
- "காயா கொன்றை நெய்தல் முல்லை" எனத் தொடங்கும் ஐங்குறுநூறு பாடலை பாடியவர்: பேயனார்
- "காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்" என்ற வரி இடம்பெறும் நூல்: கலித்தொகை
- "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" எனக் கூறும் நூல்: கலித்தொகை
- "அறிவு அறிவு ஆகாச் செறிவினை ஆகி" என்ற வரி இடம்பெறும் நூல்: புறநானூறு
- "கல்வி அழகே அழகு" எனக் கூறும் நூல்: நாலடியார்
- "வழக்கின் இலக்கணம் இழுக்கின்றி அறிதல்" என்று கூறும் நூல்: தொல்காப்பியம்
- "ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழைபா டிலனே" எனக் கூறும் நூல்: தொல்காப்பியம்
- "முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்" எனக் கூறும் நூல்: தொல்காப்பியம்
- "நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்" என்று கூறும் நூல்: குறுந்தொகை
- "நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று அன்னை கூறினள்" என்று கூறும் நூல்: நற்றிணை
- "புடவியை அளந்தன போன்று வீதிகள்" என்று கூறும் நூல்: சீறாப்புராணம்
- "பூரணப் புவியெனப் பொலிந்த பொன்னகர்" எனக் கூறும் நூல்: சீறாப்புராணம்
- "ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" எனக் கூறும் நூல்: திருமந்திரம்
- "எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை இயக்குதற்கு" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்: மனோன்மணீயம்
- "பட்டிமண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்" எனக் கூறும் நூல்: மணிமேகலை
- "வழிவழி நினதடி தொழுதவர், உழுதுவர், விதைத்தவர்" என்று பாடியவர்: சு.வில்வரத்தினம்
- "விரல்முனையைத் தீயிலே தோய்த்து திசைகளின் சுவரெல்லாம் எழுதத்தான் வேண்டும்" என்றவர்: சு.வில்வரத்தினம்
- "தமிழ் இவைபத்துமே" என்று கூறியவர்: ஞானசம்பந்தன்
- "கரையெல்லாம் நெடு மரங்கள் கரைகின்ற பறவை குரல்கள்" என்று பாடியவர்: அழகிய பெரியவன்
- "குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும்" என்று பாடியவர்: பெரியவன் கவிராயர்
- "மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே" என்று பாடியவர்: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
- "வன்ன மயில்முரு கேசன் - குற வள்ளி பதம்பணி நேசன்" என்று பாடியவர்: சென்னிகுளம் அண்ணாமலையார்
- "அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப்" என்று பாடியவர்: வெள்ளிவீதியார்
- "பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர்" என்று பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- "செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்" என்று பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
- "ஆயிரம் வண்ணம் காட்டும் அடிவான முகில்கள்" என்று பாடியவர்: வாணிதாசன்
- "புது வெள்ளத்தில் மாய்கதிர் செக்கர் வானம்" என்று பாடியவர்: வாணிதாசன்
- "ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும்" என்று கூறியவர்: ஹென்றி ஆடம்ஸ்
- "தாய்மொழியிலேயே பயின்று யாதும் ஊரென உலகின் உறவாகவே விரும்புகிறேன்" என்றவர்: இ.ரா.மீனாட்சி
- "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்" என்று நற்றிணையில் பாடியவர்: போதனார்
- "ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்" என்று பாடியவர்: அவ்வையார்
- "ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த குறும்பி" என்று பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்
- "தமிழ்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டாலும்" என்று கூறியவர்: உ.வே.சா
- "பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ\!" என்று பாடியவர்: வீரை வெளியன் தித்தனார்
- "குறமகள் காக்கும் ஏனல் புறமும் தருதியோ?" என்று பாடியவர்: வீரை வெளியன் தித்தனார்
- "தமிழன் திருநாள் பொங்கல் என்றால் அதில் தமிழன் பண்புகள் பொங்குமன்றோ" என்றவர்: பெ.தூரன்
- "கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை" என்று பாடியவர்: மாணிக்கவாசகர்
- "மனித சிந்தனையே கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே" என்று கூறியவர்: ஜீவானந்தம்
- "காதலனை கொலைக்களத்துக் கனுப்ப கண்டும்..." என்று பாடியவர்: பாரதிதாசன்
- "கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்" என்று பாடியவர்: பாரதிதாசன்
- "பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்" என்று பாடியவர்: பாரதிதாசன்
- "ஒருமனிதன் தேவைக்கே இந்த தேசம் உண்டென்றால்" என்று பாடியவர்: பாரதிதாசன்
- "பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி" என்று பாடியவர்: குமட்டூர் கண்ணனார்
- "வீட்டுக்கு உயிர்வேலி வீதிக்கு விளக்குத்தூண்" என்று பாடியவர்: கவிஞாயிறு தாராபாரதி
- "வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு" என்று கூறியவர்: மகாகவி பாரதியார்
- "தேடுகல்வி இல்லாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்" என்றவர்: மகாகவி பாரதியார்
- "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?" என்றவர்: மகாகவி பாரதியார்
- "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில்" என்று பாடியவர்: பாரதிதாசன்
- "வீட்டிற்கோர் புத்தகச்சாலை வேண்டும்" என்று கூறியவர்: அறிஞர் அண்ணா
- "சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும் சுகம்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ" என்றவர்: நாமக்கல் கவிஞர்
- "பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு முத்தமிட்டு சொன்னது பூமி" என்றவர்: ஈரோடு தமிழன்பன்
- "எப்போதும் மத்தாப்பு கொளுத்தி விளையாடுகிறது மலையருவி" என்றவர்: கழனியூரன்
- "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்" என்றவர்: அகத்தியர்
- "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா யானும் வந்தேன்" என்றவர்: மகாகவி பாரதியார்
- "ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு" என்றவர்: பட்டினத்தார்
- "சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?" என்றவர்: சிவவாக்கியர்
- "சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்" என்றவர்: பாம்பாட்டிசித்தர்
- "ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே" என்றவர்: பத்திரகிரியார்
- "நந்த வனத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்" என்றவர்: கடுவெளி சித்தர்
- "விழுந்த மலர் கிளைக்கு திரும்புகிறது அடடா வண்ணத்துப்பூச்சி" என்று பாடிய ஜப்பானியக் கவிஞர்: மோரிடாகே
- "பட்டுப்போன மரக்கிளை அமர்ந்து ஓய்வெடுக்கும் காலம்" என்று பாடியவர்: பாஷோ
- "பெட்டிக்கு வந்தபின் எல்லா காய்களும் சமம்தான்" என்று பாடியவர்: இஸ்ஸா
- "விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான்வெளுப்பது உனது விடியலில்லை" என்றவர்: அப்துல் ரகுமான்
- "கற்றேன் என்பாய் கற்றாயா? வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை" என்றவர்: அப்துல் ரகுமான்
- "நான் என்பாய் அது நீ இல்லை வெறும் நாடக வசனம் பேசுகிறாய்" என்றவர்: அப்துல் ரகுமான்
- "நன்றுஎன நகைத்துத் தர தகுபொருள் நீ நவில்க" என்று கர்ணன் யாரிடம் கூறினான்: கிருஷ்ணனிடம்
- "ஒன்றிலிருந் தொன்றென்னும் உலக நிலை அறிந்தேன்" என்றவர்: சுரதா
- "பெயரில்லா மலர்களின் நாட்டில் கவிஞர் நிலை எவ்வளவு மோசமானது" என்றவர்: ரவீந்திரநாத் தாகூர்
- "நமது தேசப்பற்று புத்தக மூட்டையால் உருவானது" என்றவர்: ரவீந்திரநாத் தாகூர்
- "ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்" என்றவர்: இன்குலாப்
- "எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளிலே எதிரொலி கேட்கும்" என்றவர்: இன்குலாப்
- "பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்" என்றவர்: திரு.வி.க
- "தமிழின் கவிதையியல்" நூலின் ஆசிரியர்: கா.சிவத்தம்பி
- "பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம்" நூலின் ஆசிரியர்: மனோரமா பிஸ்வாஸ்
- "முப்பட்டை நகரம்", "சாம்பல் வார்த்தைகள்" நூல்களின் ஆசிரியர்: இந்திரன்
- "நாடற்றவன்" நூலின் ஆசிரியர்: அ.முத்துலிங்கம்
- "தகப்பன் கொடி" புதினத்தின் ஆசிரியர்: அழகிய பெரியவன்
- "பிரமிள் கவிதைகள்", "லங்காபுரி ராஜா" நூல்களின் ஆசிரியர்: பிரமிள்
- "விஷ்ணுபுரம்", "கொற்றவை" நாவல்களின் ஆசிரியர்: ஜெயமோகன்
- "இயற்கை வேளாண்மை" நூலின் ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்
- "பனைமரமே பனைமரமே" நூலின் ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்
- "யானைகள் அழியும் பேருயிர்" நூலின் ஆசிரியர்: ச.அகமது அலி, க.யோகானந்த்
- "அன்புள்ள அம்மா", "சிறகுக்குள் வானம்" நூல்களின் ஆசிரியர்: ஆர்.பாலகிருஷ்ணன்
- "The Four Hundred Songs of War and Wisdom" நூலின் ஆசிரியர்: ஜார்ஜ்.எல்.ஹார்ட்
- "கட்டளைக்கலித்துறை", "நட்சத்திர மாலை" நூல்களின் ஆசிரியர்: சி.வை.தாமோதரனார்
- "காகிதத்தில் ஒரு கோடு" நூலின் ஆசிரியர்: ஆத்மநாம்
- "சிலிகான் சில்லு புரட்சி" நூலின் ஆசிரியர்: சுஜாதா
- "ஊசிகள்", "கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்" நூல்களின் ஆசிரியர்: மீரா
- "நெருஞ்சி", "சுடுபூக்கள்" நூல்களின் ஆசிரியர்: இ.ரா.மீனாட்சி
- "இதய ஒலி", "கம்பர் யார்?" நூல்களின் ஆசிரியர்: டி.கே.சி
- "மறைக்கப்பட்ட இந்தியா" நூலின் ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
- "ரத்னாபாயின் ஆங்கிலம்", "ஜே.ஜே. சில குறிப்புகள்" நூல்களின் ஆசிரியர்: சுந்தர ராமசாமி


0 Comments