Ad Code

Responsive Advertisement

11-ஆம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் +1 Tamil Part 7


வினா விடைத் தொகுப்பு 7: (பதினொன்றாம் வகுப்பு தமிழ் - முக்கிய வினாக்கள் - பாகம் 7)

நூலும் - இடம்பெற்ற அடிகளும்:
  1. தொலைந்து போனவர்கள் (அப்துல் ரகுமான்):
    • "விடிந்ததென்பாய் நீ அனுதினமும்"
    • "கற்றேன் என்பாய் கற்றாயா?"
    • "நான் என்பாய் அது நீ இல்லை"
  2. வில்லிபாரதம்:
    • "நன்றுஎன நகைத்துத் தர தகுபொருள் நீ நவில்க"
    • "ஒன்றிய படிநின் புண்ணியம் அனைத்தும் உதவுக"
    • "ஓவிஇலாது பயன் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன்"
    • "ஏழ்எழு பிறப்பும் இல்லையென்று இரப்போர்க்கு"
  3. திருமந்திரம்:
    • "ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
    • "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"
    • "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
    • "ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை"
    • "துணையாய் வருவது தூயநற் கல்வி"
  4. புறநானூறு:
    • "யாதும் ஊரே யாவரும் கேளிர்"
    • "உண்டால் அம்ம இவ்வுலகம்"
    • "வறிது நிலைஇய காயமும்"
    • "செஞ்ஞா யிற்றுச் செலவும்"
    • "அறிவு அறிவு ஆகாச் செறிவினை ஆகி"
    • "ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்"
    • "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்"
    • "அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்"
  5. நற்றிணை:
    • "வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி"
    • "கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்"
    • "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்"
    • "நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று"
  6. அகநானூறு:
    • "ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த"
    • "பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ"
    • "முறைபுரிந்து அறன்நெறி பிழையாத்"
    • "குறமகள் காக்கும் ஏனல் புறமும்"
  7. குறுந்தொகை:
    • "நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்"
    • "அம்ம வாழி தோழி நம்மூர்ப்"
    • "தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்"
  8. கலித்தொகை:
    • "காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்"
    • "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்"
  9. தொல்காப்பியம்:
    • "சேயோன் மேய மைவரை உலகம்"
    • "வழக்கின் இலக்கணம் இழுக்கின்றி அறிதல்"
    • "ஆசாற் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல்"
    • "வினாதல் வினாயவை விடுத்தல்"
    • "ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்"
    • "முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்"
  10. பிற நூல்கள்:
    • திருமுருகாற்றுப்படை: "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ"
    • மணிமேகலை: "பட்டிமண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்"
    • நீலகேசி: "யாதினு மாழ்கும் அம் மாழ்கியும்", "மரங்களும் மன்னுயிர் எய்தின என்ன"
    • நாலடியார்: "கல்வி அழகே அழகு"
    • திரிகடுகம்: "கணக்காயர் இல்லாத ஊரும்"
-----ஆசிரியர்களும் - அவர்கள் பிறந்த ஊர்களும்:
ஆசிரியர்/புலவர்பிறந்த ஊர்மாவட்டம்/பகுதி
சு.வில்வரத்தினம்புங்குடுதீவுயாழ்ப்பாணம்
அ.முத்துலிங்கம்கொக்குவில்யாழ்ப்பாணம்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்அதவத்தூர்திருச்சிராப்பள்ளி
அழகிய பெரியவன்பேரணாம்பேட்டைவேலூர்
ஆபிரகாம் பண்டிதர்சாம்பவர்வடகரைதென்காசி
பெ.நா.அப்புசாமிபெருங்குளம்நெல்லை
இளையராஜாபண்ணைப்புரம்தேனி
மாணிக்கவாசகர்திருவாதவூர்
பேராசிரியர் சுந்தரனார்ஆலப்புழைதிருவிதாங்கூர் (கேரளா)
ஜெயமோகன்நாகர்கோவில்
பிரபஞ்சன்புதுச்சேரி
-----நூல்களின் அமைப்பு மற்றும் பாடல்களின் எண்ணிக்கை:
நூல்பாடல்களின் எண்ணிக்கைபிற தகவல்கள்
குறுந்தொகை401 பாடல்கள்
ஐங்குறுநூறு500 பாடல்கள்
நற்றிணை400 பாடல்கள்
அகநானூறு400 பாடல்கள்பகுதிகள்: களிற்றியானை நிரை (1-120), மணிமிடை பவளம் (121-300), நித்திலக்கோவை (301-400)
நீலகேசி894 பாடல்கள்11 பகுதிகள்
சீறாப்புராணம்5027 பாடல்கள்3 காண்டங்கள், 92 படலங்கள்
வில்லிபாரதம்4351 பாடல்கள்10 பருவங்கள்
திருவாசகம்658 பாடல்கள்51 திருப்பதிகங்கள்
தொல்காப்பியம்3 அதிகாரங்கள், 27 இயல்கள்
நன்னூல்2 அதிகாரங்கள்
-----ஐங்குறுநூறு - திணை பாடிய புலவர்கள்:
திணைபாடியவர்
குறிஞ்சிகபிலர்
முல்லைபேயனார்
மருதம்ஓரம்போகியார்
நெய்தல்அம்மூவனார்
பாலைஓதலாந்தையார்
-----இதழ்களும் - ஆசிரியர்களும்:
இதழ்ஆசிரியர்
எழுத்துகி.அ.சச்சிதானந்தன்
ஆத்மநாம்
அன்னம் விடு தூதுமீரா (மீ.இராசேந்திரன்)
கவிமீரா (மீ.இராசேந்திரன்)
வெளிச்சம்இந்திரன்
நுண்கலைஇந்திரன்
குயில்பாரதிதாசன்
தேசபக்தன்திரு.வி.க
நவசக்திதிரு.வி.க
-----நூல்களும் - ஆசிரியர்களும்:
நூல்ஆசிரியர்
தமிழின் கவிதையியல்கா.சிவத்தம்பி
பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம்மனோரமா பிஸ்வாஸ்
கடல்புறாசாண்டில்யன்
நல்ல தமிழ் எழுத வேண்டுமா?அ.கி.பரந்தாமனார்
ஒற்றை வைக்கோல் புரட்சிமசானபு ஃபுகோகா
பண்பாட்டு அசைவுகள்தோ.பரமசிவன்
கருணாமிர்த சாகரம்ஆபிரகாம் பண்டிதர்
இயற்கை வேளாண்மைகோ.நம்மாழ்வார்
பனைமரமே பனைமரமேஆ.சிவசுப்பிரமணியன்
பறவை உலகம்சலீம் அலி
அன்புள்ள அம்மாஆர்.பாலகிருஷ்ணன்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement