வினா விடைத் தொகுப்பு 9: (11-ம் வகுப்பு தமிழ் - முக்கிய வினாக்கள்)
கூற்றுகளும் நூலாசிரியர்களும்
- "நன்றுஎன நகைத்துத் தர தகுபொருள் நீ நவில்க" என்று கர்ணன் யாரிடம் கூறினான்?
விடை: கிருஷ்ணனிடம் - "ஒன்றிய படிநின் புண்ணியம் அனைத்தும் உதவுக" என்று கர்ணனிடம் கேட்டவர் யார்?
விடை: கிருஷ்ணன் - "ஓவிஇலாது பயன் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன்" என்று கூறியவர் யார்?
விடை: கர்ணன் - "ஏழ்எழு பிறப்பும் இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று உரையாக இதயம் நீ அளித்தருள்" என்று வேண்டியவர் யார்?
விடை: கர்ணன் - "நமது தேசப்பற்று புத்தக மூட்டையால் உருவானது" என்று கூறியவர் யார்?
விடை: ரவீந்திரநாத் தாகூர் - "பெயரில்லா மலர்களின் நாட்டில் கவிஞர் நிலை எவ்வளவு மோசமானது" என்று கூறியவர் யார்?
விடை: ரவீந்திரநாத் தாகூர் - "பாரத நாட்டினர் மனிதன் விலங்காக மாறுவதையும் விலங்கு மனிதனாக மாறுவது பற்றி எதுவும் தவறாக எண்ணுவது இல்லை" என்றவர் யார்?
விடை: ரவீந்திரநாத் தாகூர் - "நாம் பிறக்கும் போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம்" என்று கூறியவர் யார்?
விடை: நோம் சோம்ஸ்கி - "உலகின் அதிவிரைவு கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட மனித மூளை சிறந்தது" என்றவர் யார்?
விடை: க்வாபெனா போஹென் - "சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் விளங்கியது" என்று கூறியவர் யார்?
விடை: மா.ராசமாணிக்கனார் - "அந்த காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் சித்திரகுப்தன் எழுதிவரும் பதிவை போல எழுதியவர் ஆனந்தரங்கர்" என்று கூறியவர் யார்?
விடை: வ.வே.சு (வ.வே.சுப்பிரமணியம்) - "தமிழ்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் பாரிசில் பாதுகாக்கப்படுகின்றன" என்றவர் யார்?
விடை: உ.வே.சா - "எப்போதும் மத்தாப்பு கொளுத்தி விளையாடுகிறது மலையருவி" என்றவர் யார்?
விடை: கழனியூரன் - "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்" என்றவர் யார்?
விடை: அகத்தியர் - "ஒன்றிலிருந் தொன்றென்னும் உலக நிலை அறிந்தேன்" என்றவர் யார்?
விடை: சுரதா - "தமிழன் திருநாள் பொங்கல் என்றால் அதில் தமிழன் பண்புகள் பொங்குமன்றோ" என்றவர் யார்?
விடை: பெ.தூரன் - "மனித சிந்தனையே கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே" என்று கூறியவர் யார்?
விடை: ஜீவானந்தம் - "தாய்மொழியிலேயே பயின்று யாதும் ஊரென உலகின் உறவாகவே விரும்புகிறேன்" என்றவர் யார்?
விடை: இ.ரா.மீனாட்சி - "ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும்" என்று கூறியவர் யார்?
விடை: ஹென்றி ஆடம்ஸ் - "விஞ்ஞானி பரப்பும் வெளிச்சம் இல்லை என்றால் அஞ்ஞான இருளை அகற்ற வழியில்லை" என்றவர் யார்?
விடை: மீரா - "விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை திகழும்" என்றவர் யார்?
விடை: மசானபு ஃபுகோகா - "இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய்" என்று கூறியவர் யார்?
விடை: மசானபு ஃபுகோகா - "விரல்முனையைத் தீயிலே தோய்த்து திசைகளின் சுவரெல்லாம் எழுதத்தான் வேண்டும்" என்றவர் யார்?
விடை: சு.வில்வரத்தினம் - "உலகை மொழி கட்டி எழுப்பியது என்று சொல்கிறபோது" என்று கூறியவர் யார்?
விடை: இந்திரன் - "மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாகப் பிரிந்து" என்றவர் யார்?
விடை: எர்னஸ்ட் காசிரர் - "நேரடி மொழி தான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" என்றவர் யார்?
விடை: ஆற்றூர் ரவிவர்மா
- "உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்" என்று பாடியவர் யார்?
விடை: பேராசிரியர் சுந்தரனார் - "பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ\!" என்று பாடியவர் யார்?
விடை: வீரை வெளியன் தித்தனார் - "முறைபுரிந்து அறன்நெறி பிழையாத் திறன்அறி மன்னர்" என்று பாடியவர் யார்?
விடை: வீரை வெளியன் தித்தனார் - "குறமகள் காக்கும் ஏனல் புறமும் தருதியோ?" என்று பாடியவர் யார்?
விடை: வீரை வெளியன் தித்தனார் - "பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்" என்று பாடியவர் யார்?
விடை: தொண்டரடிப்பொடி ஆழ்வார் - "கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை" என்று பாடியவர் யார்?
விடை: மாணிக்கவாசகர் - "ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த" என்று பாடியவர் யார்?
விடை: பெருங்குன்றூர் கிழார் - "ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்" என்று பாடியவர் யார்?
விடை: அவ்வையார் - "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்" என்று பாடியவர் யார்?
விடை: போதனார் - "கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்" என்று பாடியவர் யார்?
விடை: போதனார் - "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்" என்று பாடியவர் யார்?
விடை: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் - "ஆயிரம் வண்ணம் காட்டும் அடிவான முகில்கள்" என்று பாடியவர் யார்?
விடை: வாணிதாசன் - "வறிது நிலைஇய காயமும்" என்று பாடியவர் யார்?
விடை: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - "அறிவு அறிவு ஆகாச் செறிவினை ஆகி" என்று பாடியவர் யார்?
விடை: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - "உண்டால் அம்ம இவ்வுலகம்" என்று பாடியவர் யார்?
விடை: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி - "பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர்" என்று பாடியவர் யார்?
விடை: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி - "தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்" என்று பாடியவர் யார்?
விடை: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி - "தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்" என்று பாடியவர் யார்?
விடை: வெள்ளிவீதியார் - "அம்ம வாழி தோழி நம்மூர்ப்" என்று பாடியவர் யார்?
விடை: வெள்ளிவீதியார் - "வன்ன மயில்முரு கேசன்" என்று பாடியவர் யார்?
விடை: சென்னிகுளம் அண்ணாமலையார் - "அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம்" என்று பாடியவர் யார்?
விடை: சென்னிகுளம் அண்ணாமலையார் - "மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே" என்று பாடியவர் யார்?
விடை: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - "காயா கொன்றை நெய்தல் முல்லை" என்று பாடியவர் யார்?
விடை: பேயனார் - "மலரில் ஆரளி இந்துளம் பாடும்" என்று பாடியவர் யார்?
விடை: பெரியவன் கவிராயர் - "சலச வாவியில் செங்கயல் பாயும்" என்று பாடியவர் யார்?
விடை: பெரியவன் கவிராயர் - "குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும்" என்று பாடியவர் யார்?
விடை: பெரியவன் கவிராயர் - "வளருங் காவில் முகில்தொகை ஏறும்" என்று பாடியவர் யார்?
விடை: பெரியவன் கவிராயர் - "இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும்" என்று பாடியவர் யார்?
விடை: பெரியவன் கவிராயர் - "கரையெல்லாம் நெடு மரங்கள் கரைகின்ற பறவை குரல்கள்" என்று பாடியவர் யார்?
விடை: அழகிய பெரியவன் - "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்று பாடியவர் யார்?
விடை: பாரதியார் - "வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி" என்று பாடியவர் யார்?
விடை: தனிமகனார் (நற்றிணை) - "வழிவழி நினதடி தொழுதவர், உழுதுவர்" என்று பாடியவர் யார்?
விடை: சு.வில்வரத்தினம் - "கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும்" என்று பாடியவர் யார்?
விடை: சு.வில்வரத்தினம் - "ஏடு தொடக்கி வைத்து என்னம்மை மண்ணிலே" என்று பாடியவர் யார்?
விடை: சு.வில்வரத்தினம்
- "எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் இலக்கு வேண்டும்" எனக் கூறும் நூல் எது?
விடை: மனோன்மணீயம் - "நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்" என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?
விடை: மனோன்மணீயம் - "கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும்" எனக் கூறும் நூல் எது?
விடை: திரிகடுகம் - "மரங்களும் மன்னுயிர் எய்தின என்ன" எனக் கூறும் நூல் எது?
விடை: நீலகேசி - "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" எனக் கூறும் நூல் எது?
விடை: கலித்தொகை - "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ" எனக் கூறும் நூல் எது?
விடை: திருமுருகாற்றுப்படை - "சேயோன் மேய மைவரை உலகம்" எனக் கூறும் நூல் எது?
விடை: தொல்காப்பியம் - "காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்" எனக் கூறும் நூல் எது?
விடை: கலித்தொகை - "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" எனக் கூறும் நூல் எது?
விடை: பிங்கல நிகண்டு - "ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்களின் நூல்களை எரித்தால் போதும்" எனக் கூறும் நூல் எது?
விடை: பாரன்ஹீட் 451 - "முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்" என்று பாயிரத்திற்குரிய பெயர்களைக் கூறும் நூல் எது?
விடை: நன்னூல் - "நூலே நுவில்வோன் நுவலும் திறனே" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது?
விடை: நன்னூல் - "ஆக்கியோன் பெயரே வழியே எல்லை" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது?
விடை: நன்னூல் - "காலம் களனே காரணம் என்று இம் மூவகை" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது?
விடை: நன்னூல் - "மாடக்குச் சித்திரமும் மாநகர்க்கு கோபுரமும்" எனக் கூறும் நூல் எது?
விடை: நன்னூல் - "நாடிமுன் ஐதுரையா நின்ற அணிந்துரையை" எனக் கூறும் நூல் எது?
விடை: நன்னூல்
- "அன்புள்ள அம்மா" நூலின் ஆசிரியர் யார்?
விடை: ஆர்.பாலகிருஷ்ணன் - "என் வாழ்க்கை என் கையில்" நூலின் ஆசிரியர் யார்?
விடை: ஞாநி - "ஜீவா வாழ்க்கை வரலாறு" நூலின் ஆசிரியர் யார்?
விடை: கே.பாலதண்டாயுதம் - "சொல்லாக்கம்" நூலின் ஆசிரியர் யார்?
விடை: இ.மறைமலை - "தாமரை நெஞ்சம்" நூலின் ஆசிரியர் யார்?
விடை: அகிலன் - "நான் வித்யா" நூலின் ஆசிரியர் யார்?
விடை: லிவிங் ஸ்மைல் வித்யா - "அக்னிச் சிறகுகள்" நூலின் ஆசிரியர் யார்?
விடை: அப்துல் கலாம் - "அறிவியல் தமிழ்" நூலின் ஆசிரியர் யார்?
விடை: வா.செ.குழந்தைசாமி - "பிரமிள் கவிதைகள்" நூலின் ஆசிரியர் யார்?
விடை: பிரமிள் - "தகப்பன் கொடி" என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
விடை: அழகிய பெரியவன் - "பண்பாட்டு அசைவுகள்" நூலின் ஆசிரியர் யார்?
விடை: தோ.பரமசிவன் - "முப்பட்டை நகரம்" நூலின் ஆசிரியர் யார்?
விடை: இந்திரன் - "சாம்பல் வார்த்தைகள்" நூலின் ஆசிரியர் யார்?
விடை: இந்திரன் - "சேக்கிழார் பிள்ளைத்தமிழ்" நூலின் ஆசிரியர் யார்?
விடை: மீனாட்சிசுந்தரனார்
- நன்னூல் எழுத்ததிகாரம் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?
விடை: 5 பகுதிகள் - நன்னூல் சொல்லதிகாரம் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?
விடை: 5 பகுதிகள் - ஐங்குறுநூறு திணைக்கு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
விடை: 100 பாடல்கள் - நீலகேசி எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?
விடை: 11 பகுதிகள் - நீலகேசி எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
விடை: 894 பாடல்கள் - சீறாப்புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது?
விடை: 3 காண்டங்கள் - சீறாப்புராணம் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது?
விடை: 92 படலங்கள் - அகநானூற்றின் "களிற்றியானை நிரை" பகுதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
விடை: 120 பாடல்கள் - அகநானூற்றின் "மணிமிடை பவளம்" பகுதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
விடை: 180 பாடல்கள் - அகநானூற்றின் "நித்திலக்கோவை" பகுதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
விடை: 100 பாடல்கள்


0 Comments