Ad Code

Responsive Advertisement

6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-20


1901. "மெத்த வணிகலன்" என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது எது? விடை: ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்

1902. "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்" நிலத்துக்கு நல்ல உரங்கள் - இதில் கோடிட்ட பகுதி குறிப்பிடுவது? விடை: சருகும் சண்டும்

1903. "எந்தமிழ்நா" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: எம் + தமிழ் + நா

1904. "கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது" - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே? விடை: பாடல், கேட்டவர்

1905. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை எது? விடை: மணி வகை

1906. "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம், உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - பாரதியின் இவ்வடிகளில் உள்ள நயங்கள்? விடை: மோனை, எதுகை

1907. உலகம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளை உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறது? விடை: ஜூன் 15

1908. "பாடு இமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி? விடை: கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

1909. "பெரிய மீசை" சிரித்தார் - இதில் வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது? விடை: அன்மொழித்தொகை

1910. கொண்டல் என்பது எத்திசையிலிருந்து வீசும் காற்று? விடை: கிழக்கு

1911. கோடை என்பது எத்திசையிலிருந்து வீசும் காற்று? விடை: மேற்கு

1912. வாடை என்பது எத்திசையிலிருந்து வீசும் காற்று? விடை: வடக்கு

1913. தென்றல் என்பது எத்திசையிலிருந்து வீசும் காற்று? விடை: தெற்கு

1914. "சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் 'பாக்கம்' என்பது எதனைக் குறிக்கும்? விடை: சிற்றூர்

1915. "அறிஞருக்கு நூல்", "அறிஞரது நூல்" ஆகிய சொற்றொடர்களில் பொருள் வேறுபடக் காரணமாக அமைவது? விடை: வேற்றுமை உருபு

1916. காசிக்காண்டம் என்பது எதனைக் குறிக்கும்? விடை: காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

1917. "விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான்" - எனக் கூறும் நூல்? விடை: புறநானூறு

1918. "உன் அருளே பார்ப்பன் அடியேனே" - என்று இறைவனிடம் வேண்டியவர் யார்? விடை: குலசேகர ஆழ்வார்

1919. பரிபாடல் அடியில் "விசும்பும் இசையும்" என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது? விடை: வானத்தையும் பேரொலியையும்

1920. "வித்துவக்கோட்டம்மா" என்று குலசேகர ஆழ்வார் யாரை விளித்துப் பாடுகிறார்? விடை: வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை (உய்யவந்த பெருமாள்)

1921. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் (Chatbot) எது? விடை: இலா (ELA)

1922. "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" என்னும் செப்பேடு எது? விடை: சின்னமனூர்ச் செப்பேடு

1923. "அருந்துணை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: அருமை + துணை

1924. "இங்கு நகரப் பேருந்து நிற்குமா?" என்று கேட்பது எவ்வகை வினா? விடை: அறியா வினா

1925. "அதோ, அங்கே நிற்கும்" என்று கூறுவது எவ்வகை விடை? விடை: சுட்டு விடை

1926. "அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை" - எனப் போற்றப்படுவது எது? விடை: கல்வி

1927. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்த மன்னன் யார்? விடை: குசேல பாண்டியன்

1928. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் எவை? விடை: குறிஞ்சி, மருதம், நெய்தல்

1929. "ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர்" - இதனின் செயப்பாட்டு வினைத் தொடர் எது? விடை: ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

1930. கோசல நாட்டில் கொடை இல்லாததற்குக் காரணம் என்ன? விடை: அங்கு வறுமை இல்லாததால்

1931. "மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்" - இதில் மாலவன் குன்றம் என்பது? விடை: திருப்பதி

1932. "வேலவன் குன்றம்" என்பது எதனைக் குறிக்கும்? விடை: திருத்தணி

1933. "தன்நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்" - என்று மெய்க்கீர்த்தி யாரைக் குறிப்பிடுகிறது? விடை: நெறிமுறை தவறாது காக்கும் மன்னனை

1934. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் நோக்கம் என்ன? விடை: வலிமையை நிலைநாட்டல்

1935. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது எது? விடை: சிலப்பதிகாரம்

1936. மேன்மை தரும் அறம் என்பது எது? விடை: கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

1937. "வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்" என்று கவிஞர் குறிப்பிடுவது எதனை? விடை: இடைவிடாது அறப்பணி செய்தலை

1938. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருட்களின் இருப்பை அறியாது கொடுப்பவன் என்றும் புகழப்படுபவர்கள்? விடை: அதியன் மற்றும் பெருஞ்சாத்தன்

1939. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்துள்ள பாவினம் எது? விடை: ஆசிரியப்பா (அகவற்பா)

1940. "இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும்" - இதில் கற்காலம் என்பது? விடை: தலைவிதி

1941. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது? விடை: பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

1942. "வாய்மையே மழைநீராகி" - இத்தொடரில் வெளிப்படும் அணி எது? விடை: உருவக அணி

1943. சந்தக்கவிமணி எனப் புகழப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன? விடை: சண்முக சிகாமணி

1944. தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்? விடை: 12

1945. "வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்" - என்று பாடியவர்? விடை: ஔவையார்

1946. "கட்டிய சூழி முச்சியும்" - இதில் 'சூழி' என்பது எங்கு அணியும் அணிகலன்? விடை: தலையில்

1947. "குறங்கு இசை விழாவின் உறந்தை" என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்? விடை: அகநானூறு

1948. கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் எவ்வாறு உருவாகின்றன? விடை: பெயரெச்சங்களுடன் 'செய்ய' என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தைச் சேர்ப்பதன் மூலம்

1949. சீனாவிலுள்ள 'காண்டன்' நகருக்கு வடக்கே அமைந்துள்ள துறைமுக நகர் எது? விடை: சூவன்சௌ

1950. குப்லாய்கானின் ஆணையின்கீழ் சீனாவில் கட்டப்பட்ட கோவில் எது? விடை: சிவன் கோவில்

1951. "கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை..." - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்? விடை: அகநானூறு

1952. "வாடா ராசா, வாடா கண்ணா" என்று தாய் தன் மகளைப் பார்த்து அழைப்பது எவ்வகை வழுவமைதி? விடை: பால் வழுவமைதி

1953. "ஆலத்து மேல குவளை குளத்துள வாலியின் நெடிய குரங்கு" - இதில் பயின்று வரும் பொருள்கோள் எது? விடை: கொண்டு கூட்டுப் பொருள்கோள்

1954. 'தேம்பாவணி' நூலின் ஆசிரியர் யார்? விடை: வீரமாமுனிவர்

1955. வீரமாமுனிவர் இயற்றிய வேறு நூல்கள் யாவை? விடை: சதுரகராதி, தொன்னூல் விளக்கம்

1956. 'தேம்பாவணி' எத்தனை காண்டங்களைக் கொண்டது? விடை: மூன்று

1957. தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை? விடை: 3615

1958. 'இஸ்மத் சந்நியாசி' என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு வழங்கியவர்? விடை: சந்தா சாகிப்

1959. 'இஸ்மத் சந்நியாசி' என்பதன் பொருள் என்ன? விடை: தூய துறவி

1960. "ஒருவன் இருக்கிறான்" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? விடை: கு. அழகிரிசாமி

1961. கு. அழகிரிசாமி எந்த இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்? விடை: சக்தி

1962. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? விடை: கி. ராஜநாராயணன்

1963. வட்டார வழக்கிலான சொற்களைக் கொண்டு 'கரிசல் வட்டார அகராதி'யை உருவாக்கியவர்? விடை: கி. ராஜநாராயணன்

1964. 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற நூலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்? விடை: கி. ராஜநாராயணன்

1965. "பூக்கையைப் குவித்துப் பூவே புரிவோடு காக்க" என்று வேண்டிக்கொண்டவர்? விடை: கருணையன்

1966. கருணையன் என்பது யாரைக் குறிக்கும்? விடை: வீரமாமுனிவரின் காப்பியத் தலைவன் (சூசையப்பர் / வளன்)

1967. "உம்பர்" என்னும் சொல்லின் பொருள்? விடை: தேவர்

1968. "மணி" என்னும் சொல்லின் பொருள் (செய்யுளில்)? விடை: முத்து

1969. "படலை" என்பதன் பொருள்? விடை: மாலை

1970. "துகிர்" என்பதன் பொருள் என்ன? விடை: பவளம்

1971. "வெறுக்கை" என்பதன் பொருள் என்ன? விடை: செல்வம்

1972. "காருகர்" என்பதன் பொருள் என்ன? விடை: நெய்பவர்

1973. "பாசவர்" என்பதன் பொருள் என்ன? விடை: வெற்றிலை விற்போர்

1974. "ஓசுநர்" என்பதன் பொருள் என்ன? விடை: எண்ணெய் விற்போர்

1975. "மண்ணீட்டாளர்" என்பதன் பொருள் என்ன? விடை: சிற்பி

1976. "கிழி" என்பதன் பொருள் என்ன? விடை: துணி

1977. சிலப்பதிகாரத்தின் "புகார்க் காண்டம்" எத்தனை காதைகளைக் கொண்டது? விடை: 10

1978. சிலப்பதிகாரத்தின் "மதுரைக் காண்டம்" எத்தனை காதைகளைக் கொண்டது? விடை: 13

1979. சிலப்பதிகாரத்தின் "வஞ்சிக் காண்டம்" எத்தனை காதைகளைக் கொண்டது? விடை: 7

1980. சிலப்பதிகாரத்தின் மொத்தக் காதைகள் எத்தனை? விடை: 30

1981. "அடிகள் நீரே அருளுக" என்று இளங்கோவடிகளிடம் கூறியவர்? விடை: சீத்தலைச் சாத்தனார்

1982. "நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர்? விடை: இளங்கோவடிகள்

1983. இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்? விடை: சேர மரபு

1984. "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்று போற்றியவர்? விடை: பாரதியார்

1985. "இரட்டைக் காப்பியங்கள்" என அழைக்கப்படுபவை? விடை: சிலப்பதிகாரம், மணிமேகலை

1986. "குடிமக்கள் காப்பியம்" என்று போற்றப்படுவது எது? விடை: சிலப்பதிகாரம்

1987. ம.பொ. சிவஞானத்தின் சிறப்புப் பெயர் என்ன? விடை: சிலம்புச் செல்வர்

1988. ம.பொ. சிவஞானம் தொடங்கிய கட்சியின் பெயர்? விடை: தமிழரசுக்கழகம்

1989. "எனது போராட்டம்" என்பது யாருடைய தன்வரலாற்று நூல்? விடை: ம.பொ. சிவஞானம்

1990. "வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு" நூலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்? விடை: ம.பொ. சிவஞானம்

1991. மொழிவாரி ஆணையம் (சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்கு கொடுத்தது) எவர் தலைமையில் அமைக்கப்பட்டது? விடை: சர்தார் கே.எம். பணிக்கர்

1992. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கியவர்? விடை: ம.பொ. சிவஞானம்

1993. திருத்தணி தமிழகத்தோடு இணையக் காரணமானவர் யார்? விடை: ம.பொ. சிவஞானம்

1994. குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணையப் போராடியவர் யார்? விடை: மார்ஷல் நேசமணி

1995. "வித்யா பாஸ்கர்" என்ற பட்டம் பெற்றவர்? விடை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

1996. முத்துராமலிங்கத் தேவரை "தென்னாட்டுச் சிங்கம்" என்று போற்றியவர்? விடை: அறிஞர் அண்ணா

1997. இந்திய அரசு முத்துராமலிங்கத் தேவருக்குத் தபால் தலை வெளியிட்ட ஆண்டு? விடை: 1995

1998. முத்துராமலிங்கத் தேவர் தன் பேச்சால் யாரைப் போன்றவர் என்று போற்றப்பட்டார்? விடை: விவேகானந்தர்

1999. "தேசியம் உடல், தெய்வீகம் உயிர்" என்று கருதியவர்? விடை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

2000. இந்தியப் பாராளுமன்றத்தில் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படம் திறக்கப்பட்ட ஆண்டு? விடை: 1994


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement