6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-6


501. "சங்க இலக்கியம் நம் பாட்டனார் தோட்டம்; இடைக்கால இலக்கியம் நம் தந்தையார் தோட்டம்; இக்கால இலக்கியம் நம் பூங்கா" என்று கூறியவர்? விடை: எழில்முதல்வன்

502. எழில்முதல்வன் எழுதிய புதிய உரைநடை என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை? விடை: உரைநடையின் அணிநலன்கள்

503. "குறிஞ்சி மலர்" என்னும் நூலின் ஆசிரியர் யார்? விடை: நா. பார்த்தசாரதி

504. "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழித்து ஒன்றென மாட்டினது உருவகம்" என்று எழுதியவர்? விடை: தண்டி முனிவர்

505. உவம உருபு மறைந்து வந்தால் அதற்கு _____ என்று பெயர்? விடை: எடுத்துக்காட்டு உவமையணி

506. உரைநடையில் எடுத்துக்காட்டு உவமையணியைப் பயன்படுத்துவதை _____ என்கிறோம்? விடை: இணை ஒப்பு (Analogy)

507. "மழையும் புயலும்" என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை: வ. ராமசாமி

508. "ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருட்களிடம் சொல்வது போல் எழுதுவது" எது? விடை: இலக்கணை

509. முரண்படுவது போல இருக்கும்; ஆனால் உண்மையில் முரண்படாத மெய்ம்மையைச் சொல்வது? விடை: முரண்படு மெய்ம்மை (Paradox)

510. "கலப்பில்லாத பொய்" என்பது எவ்வகைத் தொடர்? விடை: சொல் முரண் (Oxymoron)

511. எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுவது? விடை: எதிரிணை இசைப்பு (Antithesis)

512. எழில்முதல்வனின் இயற்பெயர் என்ன? விடை: மா. ராமலிங்கம்

513. எழில்முதல்வன் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் எது? விடை: புதிய உரைநடை

514. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்? விடை: ம.பொ. சிவஞானம்

515. ம.பொ. சிவஞானத்தின் தன்வரலாற்று நூல் எது? விடை: எனது போராட்டம்

516. ம.பொ. சிவஞானம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது? விடை: வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

517. ம.பொ. சிவஞானம் தொடங்கிய கட்சி எது? விடை: தமிழரசுக்கழகம்

518. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கியவர்? விடை: ம.பொ. சிவஞானம்

519. ஆஸ்திரியா நாட்டுத் தலைநகர் எது? விடை: வியன்னா

520. ம.பொ. சிவஞானம் 1942-ல் எந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்? விடை: ஆகஸ்ட் புரட்சி (வெள்ளையனே வெளியேறு)

521. வடக்கெல்லைப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் யார்? விடை: மங்களங்கிழார்

522. தெற்கெல்லைப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் யார்? விடை: மார்ஷல் நேசமணி

523. மொழிவாரி ஆணையம் (Sardar K.M. Panikkar Commission) சித்தூர் மாவட்டத்தை எந்த மாநிலத்துடன் இணைத்தது? விடை: ஆந்திரா

524. திருத்தணி தமிழகத்தோடு இணையக் காரணமாக இருந்தவர்? விடை: ம.பொ. சிவஞானம்

525. குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணையக் காரணமாக இருந்தவர்? விடை: மார்ஷல் நேசமணி

526. சிலப்பதிகார விழாவை முன்னெடுத்தவர் யார்? விடை: ம.பொ. சிவஞானம்

527. "தமிழா துள்ளி எழு" என்ற துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டவர்? விடை: ம.பொ. சிவஞானம்

528. ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் என்ன? விடை: ஞானப்பிரகாசம்

529. சிவஞானம் என்ற பெயரை ம.பொ.சி.க்கு இட்டவர் யார்? விடை: சரபையர் (முதியவர்)

530. தற்காலத்தின் ஐன்ஸ்டீன் என்று புகழப்படுபவர் யார்? விடை: ஸ்டீபன் ஹாக்கிங்

531. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல் எது? விடை: காலத்தின் சுருக்கமான வரலாறு

532. கருந்துளை (Black Hole) பற்றிய ஆய்வை வெளியிட்டவர்? விடை: ஸ்டீபன் ஹாக்கிங்

533. ஸ்டீபன் ஹாக்கிங் பாதிக்கப்பட்ட நோய் எது? விடை: நரம்புத் தளர்ச்சி நோய் (பக்கவாதம்)

534. "அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன்" என்று கூறியவர்? விடை: ஐன்ஸ்டீன்

535. "வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது" என்றவர்? விடை: ஸ்டீபன் ஹாக்கிங்

536. 1985-ல் ஸ்டீபன் ஹாக்கிங் பேசுவதற்கு உதவிய கருவி? விடை: கணினிப் பேச்சுத் தொகுப்பி (Voice Synthesizer)

537. "புதிய நம்பிக்கை" என்ற துணைப்பாடத்தின் ஆசிரியர்? விடை: கமலாலயன்

538. கமலாலயனின் இயற்பெயர் என்ன? விடை: வே. குணசேகரன்

539. "உனக்குப் படிக்கத் தெரியாது" என்ற நூலை எழுதியவர்? விடை: கமலாலயன்

540. மேரி மெக்லியோட் பெத்யூன் (Mary McLeod Bethune) என்பவர் யார்? விடை: அமெரிக்கக் கருப்பினப் பெண்மணி (கல்வியாளர்)

541. "பாய்ச்சல்" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? விடை: சா. கந்தசாமி

542. சா. கந்தசாமி சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினம் எது? விடை: விசாரணை கமிஷன்

543. சா. கந்தசாமியின் புகழ்பெற்ற புதினம் எது? விடை: சாயாவனம்

544. "தக்கையின் மீது நான்கு கண்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்? விடை: சா. கந்தசாமி

545. "சுடுமண் சிலைகள்" என்ற குறும்படத்தை இயக்கியவர்? விடை: சா. கந்தசாமி

546. பாய்ச்சல் கதையில் வரும் அனுமன் வேடமிட்டவரின் பெயர்? விடை: அழகு

547. ஐ.நா. அவையில் பாடிய முதல் இந்தியப் பாடகர் யார்? விடை: எம்.எஸ். சுப்புலட்சுமி

548. எம்.எஸ். சுப்புலட்சுமியை "இசைப் பேரரசி" என்று அழைத்தவர்? விடை: ஜவஹர்லால் நேரு

549. எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த திரைப்படங்கள்? விடை: மீரா, சகுந்தலை

550. எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய விருது? விடை: பாரத ரத்னா

551. ஆசியாவிலேயே நோபல் பரிசான மகசேசே விருது பெற்ற முதல் இசைக் கலைஞர்? விடை: எம்.எஸ். சுப்புலட்சுமி

552. பொதுவெளியில் நாட்டியமாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டிருந்த போது மேடையேறியவர்? விடை: பாலசரஸ்வதி

553. "தாமரைச் செவ்விகள்" என்ற நூலில் பாலசரஸ்வதியைப் பாராட்டியவர்? விடை: திரு.வி.க

554. வேருக்கு நீர் என்ற புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்? விடை: ராஜம் கிருஷ்ணன்

555. பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியவர்? விடை: ராஜம் கிருஷ்ணன்

556. நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து ராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினம்? விடை: குறிஞ்சித்தேன்

557. மீனவர் வாழ்க்கையை மையமாக வைத்து ராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினம்? விடை: அலைவாய்க்கரையில்

558. தீப்பெட்டித் தொழிலில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் நிலையை விவரிக்கும் ராஜம் கிருஷ்ணனின் நூல்? விடை: கூட்டுக்குஞ்சுகள்

559. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தொடங்கிய இயக்கம்? விடை: உழுபவருக்கே நிலம் உரிமை இயக்கம் (LAFTI)

560. "மதுரை சின்னப்பிள்ளை" எதனுடன் தொடர்புடையவர்? விடை: களஞ்சியம் (பெண்கள் சுயஉதவிக் குழு)

561. தமிழக அரசின் அவ்வை விருதைப் பெற்றவர் யார்? விடை: சின்னப்பிள்ளை

562. அகப்பொருள் திணைகள் எத்தனை வகைப்படும்? விடை: ஏழு (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை)

563. அன்பின் ஐந்திணைகள் என்பவை யாவை? விடை: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

564. முதற்பொருள் என்பது எதைக் குறிக்கும்? விடை: நிலமும் பொழுதும்

565. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது? விடை: முருகன்

566. முல்லை நிலத்திற்குரிய தெய்வம் எது? விடை: திருமால்

567. மருத நிலத்திற்குரிய தெய்வம் எது? விடை: இந்திரன்

568. நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் எது? விடை: வருணன்

569. பாலை நிலத்திற்குரிய தெய்வம் எது? விடை: கொற்றவை

570. குறிஞ்சி நில மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்? விடை: வெற்பன், குறவர், குறத்தியர்

571. முல்லை நில மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்? விடை: தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்

572. மருத நில மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்? விடை: ஊரன், உழவர், உழத்தியர்

573. நெய்தல் நில மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்? விடை: சேர்ப்பன், பரதன், பரத்தியர்

574. பாலை நில மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்? விடை: எயினர், எயிற்றியர்

575. குறிஞ்சி நிலத்திற்குரிய பூக்கள் யாவை? விடை: குறிஞ்சி, காந்தள்

576. முல்லை நிலத்திற்குரிய பூக்கள் யாவை? விடை: முல்லை, தோன்றி

577. மருத நிலத்திற்குரிய பூக்கள் யாவை? விடை: செங்கழுநீர், தாமரை

578. நெய்தல் நிலத்திற்குரிய பூக்கள் யாவை? விடை: தாழை, நெய்தல்

579. பாலை நிலத்திற்குரிய பூக்கள் யாவை? விடை: குரவம், பாதிரி

580. குறிஞ்சி நிலத்திற்குரிய விலங்குகள்? விடை: புலி, கரடி, சிங்கம்

581. முல்லை நிலத்திற்குரிய விலங்குகள்? விடை: முயல், மான், புலி

582. மருத நிலத்திற்குரிய விலங்குகள்? விடை: எருமை, நீர்நாய்

583. நெய்தல் நிலத்திற்குரிய விலங்குகள்? விடை: முதலை, சுறா

584. பாலை நிலத்திற்குரிய விலங்குகள்? விடை: வலியிழந்த யானை

585. குறிஞ்சி நிலத்தின் பெரும்பொழுது? விடை: குளிர்காலம், முன்பனிக்காலம்

586. முல்லை நிலத்தின் பெரும்பொழுது? விடை: கார்காலம்

587. மருதம் மற்றும் நெய்தல் நிலங்களின் பெரும்பொழுது? விடை: ஆறு பெரும்பொழுதுகளும்

588. பாலை நிலத்தின் பெரும்பொழுது? விடை: இளவேனில், முதுவேனில், பின்பனி

589. குறிஞ்சி நிலத்தின் சிறுபொழுது? விடை: யாமம்

590. முல்லை நிலத்தின் சிறுபொழுது? விடை: மாலை

591. மருத நிலத்தின் சிறுபொழுது? விடை: வைகறை

592. நெய்தல் நிலத்தின் சிறுபொழுது? விடை: ஏற்பாடு

593. பாலை நிலத்தின் சிறுபொழுது? விடை: நண்பகல்

594. "ஏற்பாடு" என்பதைப் பிரித்து எழுதுக? விடை: எல் + பாடு (எல் - ஞாயிறு, பாடு - மறையும் நேரம்)

595. குறிஞ்சி நிலத்திற்குரிய உரிப்பொருள்? விடை: புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

596. முல்லை நிலத்திற்குரிய உரிப்பொருள்? விடை: இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

597. மருத நிலத்திற்குரிய உரிப்பொருள்? விடை: ஊடலும் ஊடல் நிமித்தமும்

598. நெய்தல் நிலத்திற்குரிய உரிப்பொருள்? விடை: இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

599. பாலை நிலத்திற்குரிய உரிப்பொருள்? விடை: பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

600. பெரும் பொழுதில் ஒரு ஆண்டை எத்தனை கூறுகளாகப் பிரித்துள்ளனர்? விடை: ஆறு (கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்)


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement