Ad Code

Responsive Advertisement

6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-7


601. தமிழரின் கப்பல் கட்டும் கலையை வியந்து பாராட்டிய இத்தாலியப் பயணி? விடை: மார்கோபோலோ

602. முன்னீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்று கூறும் நூல்? விடை: தொல்காப்பியம்

603. "கடலோடா கால்வல் நெடுந்தேர்" என்று பெரிய கப்பல் பற்றிக் கூறும் நூல்? விடை: திருக்குறள்

604. பூம்புகார் துறைமுகத்தில் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்றதைக் கூறும் நூல்? விடை: பட்டினப்பாலை

605. "உலகுகிளர்ந்தன்ன உருகெழு வங்கம்" என்று பாடிய நூல்? விடை: அகநானூறு

606. "அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்" என்று கப்பல் பற்றிக் கூறும் நூல்? விடை: பதிற்றுப்பத்து

607. பலவகையான கப்பல்களின் பெயர்களைக் குறிப்பிடும் நிகண்டு நூல் எது? விடை: சேந்தன் திவாகரம்

608. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியவை எவை? விடை: தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்

609. தமிழர்கள் கடல் பயணம் மேற்கொள்ளப் பயன்படுத்திய பெரியவை எவை? விடை: கலம், வங்கம், நாவாய்

610. கப்பல் கட்டும் கலைஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? விடை: கம்மியர்

611. "கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்" என்று கூறும் நூல்? விடை: மணிமேகலை

612. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மரத் தொகுதிகளை எவ்வாறு அழைப்பர்? விடை: தொகுதி

613. இரும்ப ஆணிகள் துருப்பிடிக்கும் என்பதால் தமிழர்கள் எதனைப் பயன்படுத்தினர்? விடை: மர ஆணி

614. கப்பலின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை எந்த அளவையால் அளந்தனர்? விடை: தச்சுமுழம்

615. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால் எதனைக்கொண்டு சரிசெய்தனர்? விடை: மரப்பிசின்

616. பாய்மரக் கப்பலின் பழுது பார்க்கும் முறை பற்றிக் கூறும் நூல்? விடை: பரிபாடல்

617. கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் எவ்வாறு அழைக்கப்படும்? விடை: எரா

618. கப்பலின் குறுக்கு மரம் எவ்வாறு அழைக்கப்படும்? விடை: பருமல்

619. கப்பலைச் செலுத்தவும் உரிய திசையில் திருப்பவும் பயன்படும் கருவி? விடை: சுக்கான்

620. கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு? விடை: நங்கூரம்

621. தமிழர்கள் பயன்படுத்திய திசைகாட்டும் கருவி எவ்வாறு அழைக்கப்பட்டது? விடை: சமுக்கு

622. சமுக்கு என்ற கருவியைக் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கூறும் நூல்? விடை: கப்பல் சாத்திரம்

623. கப்பல் செலுத்துபவரை அழைக்கும் பெயர்கள் யாவை? விடை: மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி

624. "நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி" என்று காற்றின் துணை கொண்டு கப்பலைச் செலுத்தியவர்? விடை: வெண்ணிக்குயத்தியார்

625. யானை நாளொன்றுக்கு எவ்வளவு உணவு உட்கொள்ளும்? விடை: 250 கிலோ புல், இலை தழைகள்

626. யானைக்குக் குடிக்க எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? விடை: 65 லிட்டர்

627. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது? விடை: மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)

628. ஆசிய யானைகளில் ஆண், பெண் யானைகளை வேறுபடுத்துவது? விடை: தந்தம்

629. நன்கு வளர்ந்த கரடி எத்தனை கிலோ எடை இருக்கும்? விடை: 160 கிலோ

630. கரடிக்கு மிகவும் பிடித்த உணவு எது? விடை: கரையான்

631. கருவுற்ற புலியானது எத்தனை நாட்களில் குட்டி ஈனும்? விடை: 90 நாட்களில்

632. இந்தியாவில் ஆசியச் சிங்கங்கள் எங்கு மட்டும் உள்ளன? விடை: கிர் சரணாலயம் (குஜராத்)

633. இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசன் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? விடை: புலி

634. ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படுவது? விடை: புலி

635. இந்தியாவில் உள்ள மான் வகைகளில் அழகானது எது? விடை: புள்ளிமான்

636. ஆறு கூறுகளைக் கொண்ட பெரும் பொழுதுகள் யாவை? விடை: கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

637. கார்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: ஆவணி, புரட்டாசி

638. குளிர்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: ஐப்பசி, கார்த்திகை

639. முன்பனிக்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: மார்கழி, தை

640. பின்பனிக்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: மாசி, பங்குனி

641. இளவேனிற்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: சித்திரை, வைகாசி

642. முதுவேனிற்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: ஆனி, ஆடி

643. ஒரு நாளின் ஆறு கூறுகள் எவ்வாறு அழைக்கப்படும்? விடை: சிறுபொழுது

644. காலை 6 மணி முதல் 10 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: காலை

645. காலை 10 மணி முதல் 2 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: நண்பகல்

646. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: ஏற்பாடு

647. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: மாலை

648. இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: யாமம்

649. இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: வைகறை

650. குறிஞ்சி நிலத்திற்குரிய சிறுபொழுது எது? விடை: யாமம்

651. முல்லை நிலத்திற்குரிய சிறுபொழுது எது? விடை: மாலை

652. மருத நிலத்திற்குரிய சிறுபொழுது எது? விடை: வைகறை

653. நெய்தல் நிலத்திற்குரிய சிறுபொழுது எது? விடை: ஏற்பாடு

654. பாலை நிலத்திற்குரிய சிறுபொழுது எது? விடை: நண்பகல்

655. மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்குரிய பெரும்பொழுதுகள் யாவை? விடை: ஆறு பெரும்பொழுதுகளும்

656. குறிஞ்சி நிலத்திற்குரிய மரம் எது? விடை: அகில், வேங்கை

657. முல்லை நிலத்திற்குரிய மரம் எது? விடை: கொன்றை, காயா

658. மருத நிலத்திற்குரிய மரம் எது? விடை: காஞ்சி, மருதம்

659. நெய்தல் நிலத்திற்குரிய மரம் எது? விடை: புன்னை, ஞாழல்

660. பாலை நிலத்திற்குரிய மரம் எது? விடை: இலுப்பை, பாலை

661. குறிஞ்சி நிலத்திற்குரிய பறவை? விடை: கிளி, மயில்

662. முல்லை நிலத்திற்குரிய பறவை? விடை: காட்டுக்கோழி, மயில்

663. மருத நிலத்திற்குரிய பறவை? விடை: நாரை, நீர்உாழி, அன்னம்

664. நெய்தல் நிலத்திற்குரிய பறவை? விடை: கடற்காகம்

665. பாலை நிலத்திற்குரிய பறவை? விடை: புறா, பருந்து, கழுகு

666. குறிஞ்சி நிலத்திற்குரிய தொழில்? விடை: தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்

667. முல்லை நிலத்திற்குரிய தொழில்? விடை: ஏறுதழுவல், நிரை மேய்த்தல்

668. மருத நிலத்திற்குரிய தொழில்? விடை: நெல்லரிதல், களைபறித்தல்

669. நெய்தல் நிலத்திற்குரிய தொழில்? விடை: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

670. பாலை நிலத்திற்குரிய தொழில்? விடை: வழிப்பறி, நிரை கவர்தல்

671. குறிஞ்சி நிலத்திற்குரிய பறை? விடை: தொண்டகம்

672. முல்லை நிலத்திற்குரிய பறை? விடை: ஏறுகோட்பறை

673. மருத நிலத்திற்குரிய பறை? விடை: மணமுழா, நெல்லரிக்கிணை

674. நெய்தல் நிலத்திற்குரிய பறை? விடை: மீன்கோட்பறை

675. பாலை நிலத்திற்குரிய பறை? விடை: துடி

676. குறிஞ்சி நிலத்திற்குரிய யாழ்? விடை: குறிஞ்சி யாழ்

677. குறிஞ்சி நிலத்திற்குரிய பண்? விடை: குறிஞ்சிப் பண்

678. முல்லை நிலத்திற்குரிய பண்? விடை: முல்லைப் பண் (சாதாரிப்பண்)

679. மருத நிலத்திற்குரிய பண்? விடை: மருதப் பண்

680. நெய்தல் நிலத்திற்குரிய பண்? விடை: செவ்வழிப் பண்

681. பாலை நிலத்திற்குரிய பண்? விடை: பஞ்சுரப் பண்

682. யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது? விடை: ஆறு (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை)

683. பா எத்தனை வகைப்படும்? விடை: நான்கு

684. வெண்பா எவ்வகை ஓசையைப் பெற்றது? விடை: செப்பலோசை

685. அறம் கூறும் நூல்களான திருக்குறள், நாலடியார் எப்பாவால் ஆனவை? விடை: வெண்பா

686. ஆசிரியப்பா எவ்வகை ஓசையைப் பெற்றது? விடை: அகவலோசை

687. சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும் எப்பாவால் ஆனவை? விடை: அகவற்பா (ஆசிரியப்பா)

688. கலிப்பா எவ்வகை ஓசையைப் பெற்றது? விடை: துள்ளலோசை

689. வஞ்சிப்பா எவ்வகை ஓசையைப் பெற்றது? விடை: தூங்கலோசை

690. தாழ்ந்து வரும் ஓசை எது? விடை: தூங்கலோசை

691. சீர் தோறும் துள்ளி வரும் ஓசை எது? விடை: துள்ளலோசை

692. வெண்பா எத்தனை வகைப்படும்? விடை: ஐந்து (குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா)

693. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? விடை: நான்கு

694. வெண்பாவின் ஈற்றுச்சீர் எதனுள் ஒன்றாக முடியும்? விடை: நாள், மலர், காசு, பிறப்பு

695. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் எதனால் முடியும்? விடை: ஏகாரத்தில்

696. "காய்முன் நிரை" வருவது எத்தளை? விடை: கலித்தளை

697. "கனிமுன் நிரை" வருவது எத்தளை? விடை: வஞ்சித்தளை

698. "மாமுன் நிரை" வருவது எத்தளை? விடை: இயற்சீர் வெண்டளை

699. "விளம்முன் நேர்" வருவது எத்தளை? விடை: இயற்சீர் வெண்டளை

700. தீவக அணி எத்தனை வகைப்படும்? விடை: மூன்று (முதல் நிலை, இடை நிலை, கடை நிலை)


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement