TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-51
இராமலிங்க அடிகளார் பற்றிய தகவல்கள்:
- "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்" என்ற வாழ்த்துப் பாடலை இயற்றியவர்: இராமலிங்க அடிகளார்
- திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்புப் பெயர் கொண்டவர்: இராமலிங்க அடிகளார்
- இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்: இராமையா, சின்னம்மையார்
- அவர் இயற்றிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம், திருவருட்பா
- பசித்தோருக்கு உணவளிக்க அவர் அமைத்தது: அறச்சாலை
- அறிவு நெறிக்காக அவர் நிறுவிய சபை: ஞானசபை
- திருக்குறளை இயற்றியவர்: திருவள்ளுவர்
- திருவள்ளுவர் வாழ்ந்த காலம்: கி.மு. 31 என்று கூறுவர்
- திருவள்ளுவரின் வேறு பெயர்கள்: செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார்
- திருக்குறளின் பிரிவுகள்: மூன்று பிரிவுகள் (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
- திருக்குறளில் உள்ள குறட்பாக்கள்: 1330
- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்: 133
- திருக்குறள் இடம்பெறும் நூல் வகை: பதினெண்கீழ்க்கணக்கு
- திருக்குறளின் வேறு பெயர்கள்: முப்பால், பொதுமறை, தமிழ்மறை
- திருக்குறள் உலக மக்களால் போற்றப்படும் விதம்: உலகப் பொதுமறை
- திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி.) + 31
- "முயற்சி திருவினை ஆக்கும்" என்று கூறியவர்: திருவள்ளுவர்
- தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுபவர்: உ.வே.சா (உ.வே.சாமிநாதய்யர்)
- உ.வே.சாமிநாதர் பிறந்த ஊர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
- உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்: வேங்கடரத்தினம்
- உ.வே.சா.வின் ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
- ஆசிரியர் உ.வே.சா.வுக்கு வைத்த பெயர்: சாமிநாதன்
- உ.வே.சா. பிறந்த ஆண்டு: 19.2.1855
- ஓலைச் சுவடியை அவர் எடுத்த ஊர்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி
- நமக்காகத் தாளில் எழுதி, அச்சிட்டுப் புத்தகத்தை வழங்கியவர்: உ.வே.சாமிநாதய்யர்
- அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்: என்சரிதம்
- வாழ்க்கை வரலாற்றை அவர் தொடராக எழுதிய இதழ்: ஆனந்த விகடன்
- உ.வே.சா. நூல் நிலையம் செயல்படும் இடம்: சென்னையில் உள்ள பெசன்ட்நகர்
- அவரின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்: ஜி.யு.போப், சூலியஸ் வின்சோன்
- பழங்காலத்தில் பனைஓலையில் எழுதப் பயன்படுத்தியது: எழுத்தாணி
- பழங்காலத்தில் செய்யுள், இலக்கணம் எழுதப்பட்ட சுவடி: ஓலைச்சுவடி
- எழுத்தாணி கொண்டு எழுதும் ஓலை: ஓலைச்சுவடி
- குறிஞ்சிப்பாட்டு என்னும் சுவடியில் இருந்த பூக்களின் பெயர்கள்: 99 வகைகள்
- குறிஞ்சிப்பாட்டு நூலின் ஆசிரியர்: கபிலர்
- சங்க நூல்கள்: பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்
- சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு: பதினெண் கீழ்க்கணக்கு
- "நாய்க்கால் சிறுவிரல் போல்" என்னும் நாலடியார் பாடலைப் பாடியவர்: சமணமுனிவர்
- நாலடியார் இடம்பெறும் நூல் வகை: பதினெண்கீழ்க்கணக்கு
- நாலடியாரில் உள்ள பாடல்கள்: 400
- நாலடியாரின் மற்றொரு சிறப்புப் பெயர்: நாலடி நானூறு
- நாலடியாரை இயற்றியவர்: சமண முனிவர்
- "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம்" என்ற பாரததேசம் பாடலைப் பாடியவர்: மகாகவி பாரதியார்
- தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்: பாரதியார்
- பாரதியார் கொண்டாடப்பட்ட விதம்: பாட்டுக்கொரு புலவன் பாரதி
- மகாகவி பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 முதல் 11.9.1921 வரை
- "மழையே மழையே வா வா" என்ற இசையமுது பாடலை எழுதியவர்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
- "புரட்சிக் கவிஞர்" என்றும் பாவேந்தர் என்றும் புகழப்படுபவர்: பாரதிதாசன்
- பாரதிதாசன் என்பவரின் இயற்பெயர்: கனகசுப்புரத்தினம்
- பாரதியின் கவிதை மீது கொண்ட காதலால் தம் பெயரை மாற்றிக்கொண்டவர்: பாரதிதாசன்
- "ஆற்றவும் கற்றார் அறிவுடையார்" என்ற பழமொழிநானூறு பாடலைப் பாடியவர்: முன்றுறை அரையனார்
- நானூறு பாடல்களைக் கொண்ட நூல்: பழமொழி நானூறு
- ஆற்றுணா வேண்டுவது இல் என்பதன் பொருள்: கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம்
- பழமொழி நானூற்றின் ஆசிரியர்: முன்றுறை அரையனார்
- "மனைக்கு விளக்கம் மடவாள்" என்னும் நான்மணிக்கடிகைப் பாடலை பாடியவர்: விளம்பிநாகனார்
- நான்மணிக்கடிகை இடம்பெறும் நூல் வகை: பதினெண் கீழ்க்கணக்கு
- குடும்பத்தின் விளக்கு: பெண்
- நான்மணிக்கடிகை என்பதன் பொருள்: நான்கு மணிகள் கொண்ட அணிகலன்
- நான்மணிக்கடிகையின் ஆசிரியர்: விளம்பிநாகனார்
- "வைதோரை கூட வையாதே" என்ற சித்தர் பாடலைப் பாடியவர்: கடுவெளிச்சித்தர்
- உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர்: கடுவெளிச்சித்தர்
- "நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ" என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர்: ஒளவையார்
- ஒளவையார் அரிய நெல்லிக்கனியைப் பெற்றவர்: அதியமானிடம்
- உட்கார் நண்பா, நலந்தானா? நீ ஒதுங்கி வாழ்வது சரிதானா? என்ற பாடலின் ஆசிரியர்: தாராபாரதி
- அமெரிக்கா குண்டு வீசிய ஜப்பானின் இரண்டு இடங்கள்: ஹிரோசிமா, நாகசாகி
- சடகோ எந்த நாட்டுச் சிறுமி: ஜப்பான்
- ஜப்பானியர் வணங்கும் பறவை: கொக்கு
- காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் கூறுவது: ஒரிகாமி
- அரவிந்த குப்தா எழுதிய நூல்: டென் லிட்டில் பிங்கர்ஸ்
- பட்டாசு வெடிக்காத ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் கூந்தன்குளம்
- பறவைகள் வெயில் மற்றும் பனி அதிகமாக இருக்கும்போது வேறு இடத்திற்குச் செல்வது: வலசை போதல்
- பழைய காலத்தில் மழை வரும் என்று முன்னோர்கள் கணித்தது: பறவைகள் இடம் மாறுவதை வைத்து
- பாம்புப் பண்ணை உள்ள இடம்: சென்னை கிண்டி
- உலகத்தில் உள்ள பாம்பு வகைகள்: இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது
- நச்சுத்தன்மை கொண்ட பாம்பு வகைகள்: ஐம்பத்திரண்டு
- உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு: இராஜநாகம்
- கூடுகட்டி வாழும் ஒரே வகைப் பாம்பு: இராஜ நாகம்
- பாம்பு எச்சிலில் நஞ்சு வைத்திருப்பதன் காரணம்: இரையைக் கொல்லவும், செரிமானத்திற்காகவும்
- பாம்பு யாருக்கு நண்பன்: விவசாயிகளுக்கு
- நல்ல பாம்பின் நஞ்சு வலிநீக்கி மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது, அதன் பெயர்: கோப்ராக்சின் (Cobrozin)
- தமிழின் முதல் எழுத்து: அ
- உயிர் எழுத்துக்கள்: பன்னிரண்டு (அ, ஆ, இ, ஈ...)
- மெய் எழுத்துக்கள்: பதினெட்டு
- தமிழிலுள்ள முதல் எழுத்துகள் மொத்தம்: முப்பது (உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18)
- குறில் எழுத்துகள் மெய் எழுத்துக்களோடு சேரும்போது உண்டாவது: உயிர் மெய்க்குறில் எழுத்துகள்
- தமிழ்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்: நான்கு வகைப்படும் (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)
- எழுத்து வழியாக வராமல் பாடிப் பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு: நாட்டுப்புறப் பாட்டு
- குழந்தையைத் தாய் தொட்டிலிலிட்டுப் பாடும் பாட்டு: தாலாட்டுப்பாடல்
- களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடுவது: தொழில் பாடல்
- இறந்தோருக்குப் பாடும் பாடல்: ஒப்பாரிப்பாடல்கள்
- வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போலப் பாய்ந்து சாலைக்கு வந்தவர்: விவேகானந்தர்
- விவேகானந்தரின் மறுபெயர்: நரேந்திரநாத்
- நம் நாடு விடுதலை பெற்றபின் முதல் பிரதமர்: ஜவகர்லால் நேரு
- ஜவகர்லால் நேருவின் அன்பு மகள்: இந்திரா காந்தி
- இந்திராகாந்தி நேருவிடம் வாசிக்கப் போவதாகச் சொன்ன நாவல்: டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்"
- தமிழகத்தின் மிகப்பெரிய சிந்தனையாளர் பெரியாரின் ஊர்: ஈரோடு
- பெரியார் அமைத்த சங்கம்: பகுத்தறிவாளர் சங்கம்
- பெரியார் அகற்ற முற்பட்ட வேறுபாடுகள்: பிறப்பினால் வரும் கீழ்ச்சாதி- மேல்சாதி வேறுபாடுகளை
- கேரளாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத்தெருவில் நடப்பதற்குத் தடை இருந்த ஊர்: வைக்கம்
- "பெண் விடுதலைக்குப் பின் பெண்கள் கல்வி கற்கவேண்டும்" என்று வலியுறுத்தியவர்: பெரியார்
- 1970 ஆம் ஆண்டு சமூகச்சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையில் பெரியாருக்கு வழங்கப்பட்ட விருது: "யுனெஸ்கோ விருது"


0 Comments