6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-52


TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-52
முக்கியமான தமிழ் வினா விடைகள் (101 - 200)

தேவர் பற்றிய வினாக்கள்:
101. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த மாவட்டம் எது? விடை: இராமநாதபுரம்
102. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர் எது? விடை: பசும்பொன்
103. முத்துராமலிங்கத் தேவரின் ஆசிரியர் யார்? விடை: குறைவற வாசித்தான் பிள்ளை
104. முத்துராமலிங்கத் தேவர் வல்லமை பெற்ற மொழிகள் யாவை? விடை: தமிழ், ஆங்கிலம்

திரு.வி.கலியாணசுந்தரனார் பற்றிய வினாக்கள்:
105. "பண்ணினை இயற்கை வைத்த" எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் யார்? விடை: திரு.வி.கலியாணசுந்தரனார்
106. திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் எது? விடை: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம் (தண்டலம்)
107. திரு.வி.க எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்? விடை: தமிழ்த்தென்றல்
108. திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம்பெற்றுள்ளது? விடை: பொதுமை வேட்டல்

திருவள்ளுவர் பற்றிய வினாக்கள்:
109. திருவள்ளுவர் யாரால் வளர்க்கப்பட்டார்? விடை: வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டார்
110. திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன? விடை: வாசுகி

தமிழ் மொழி, நிலவியல் மற்றும் பெயர்ச்சொல் வினாக்கள்:
111. உலக மொழிகளில் சிறந்தது என அறிஞர்கள் குறிப்பிடும் மொழி எது? விடை: தமிழ் மொழியே
112. தமிழைச் செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகள் எவை? விடை: தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை உள்ளிட்ட செவ்வியல் இலக்கியங்கள்
113. உலகின் மிகப்பழமையான நிலப்பகுதி எது? விடை: குமரிக்கண்டம்
114. குன்றை அடுத்துள்ள ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? விடை: குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி
115. வடசொல்லில் மலையைக் குறிக்கும் சொல் எது? விடை: கிரி
116. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? விடை: பட்டினம்
117. மீனவர் வாழுமிடங்களின் பெயர்கள் எந்தப் பெயரைச் சேர்த்துப் பெருகி வருகின்றன? விடை: குப்பம்
118. முதலெழுத்துகளைச் சார்ந்துவரும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? விடை: சார்பெழுத்துகள்
119. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? விடை: 10 வகைப்படும்
139. பெயரைக் குறித்து வரும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்? விடை: பெயர்ச்சொல்
140. ஒரு பொருளின் செயலைக் குறிக்கும் சொல் எது? விடை: வினைச்சொல்
145. ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயர் என்னவென்று அழைக்கப்படுகிறது? விடை: இடுகுறிப்பெயர்
146. காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? விடை: காரணப்பெயர்கள்
158. பெயர்ச்சொற்களை இலக்கண நூலார் எத்தனை வகைப்படுத்துவர்? விடை: ஆறு வகைப்படும்
159. படித்தல், கற்பித்தல் என்பன எவ்வகைப் பெயர்கள்? விடை: தொழிற்பெயர்கள்
179. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது என்னவென்று அழைக்கப்படும்? விடை: வேற்றுமை
180. வேற்றுமைகள் எத்தனை வகைப்படும்? விடை: எட்டு வகைப்படும்
181. எட்டாம் வேற்றுமையை வேறு எவ்வாறு அழைப்பர்? விடை: விளி வேற்றுமை
186. ஒரு சொல்லின் எழுத்து வேறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பதை எவ்வாறு கூறுவர்? விடை: போலி
191. பகுக்க இயலும் சொற்களை எவ்வாறு அழைப்பர்? விடை: பகுபதம்

இலக்கியம் மற்றும் புலவர்கள் பற்றிய வினாக்கள்:
120. இந்திய விடுதலைக்குத் தென்னகத்திலிருந்து அந்நியரை எதிர்த்த சிறந்த வீரன் யார்? விடை: புலித்தேவன்
121. "நெல்லும் உயிரன்றே: நீரும் உயிரன்றே" எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்? விடை: மோசிகீரனார்
122. அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கிய போது மோசிகீரனாருக்குக் கவரி வீசிய மன்னர் யார்? விடை: சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
123. "முதுமொழிக்காஞ்சி" என்ற நூலை இயற்றியவர் யார்? விடை: மதுரைக் கூடலூர்கிழார்
124. முதுமொழிக்காஞ்சியில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? விடை: 10 அதிகாரங்கள்
125. உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் பெயர் என்ன? விடை: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
126. நோய்க்கு எது மருந்து என்று மீனாட்சி சுந்தரனார் கூறுகிறார்? விடை: இலக்கியம்
130. எந்தப் புலவரைக் கோவூர்கிழார் நெடுங்கிள்ளி சிறையில் இருந்து விடுவித்தார்? விடை: இளந்தத்தனார்
132. இரட்டுறமொழிதல் என்ற பாடலைப் பாடியவர் யார்? விடை: காளமேகப் புலவர்
133. காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன? விடை: வரதன்
134. "கற்றதுகைம் மண்ணளவு கல்லாது உலகளவென்று" கூறியவர் யார்? விடை: ஔவையார்
141. திரிகடுகம் என்ற நூலை இயற்றியவர் யார்? விடை: நல்லாதனார்
142. திரிகடுகம் எத்தனை வெண்பாக்களை உடையது? விடை: நூறு
147. திருவாரூர் நான்மணிமாலை என்னும் நூலை இயற்றியவர் யார்? விடை: குமரகுருபரர்
148. நீதிநெறி விளக்கம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? விடை: குமரகுருபரர்
149. நான்மணிமாலை எத்தனை செய்யுள்களைக் கொண்டது? விடை: நாற்பது
150. மெய்ப்பொருள் கல்வி என்னும் பாடலை இயற்றியவர் யார்? விடை: வாணிதாசன்
151. வாணிதாசன் என்பவரின் இயற்பெயர் என்ன? விடை: எத்திராசலு (எ) அரங்கசாமி
152. தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் எனப் புகழப்படுபவர் யார்? விடை: வாணிதாசன்
160. கவியரசு கண்ணதாசனின் இயற்பெயர் என்ன? விடை: முத்தையா
161. ஏர்முனை என்ற பாடலை எழுதியவர் யார்? விடை: மருதகாசி
162. திரைக்கவித் திலகம் எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்? விடை: மருதகாசி
163. பொங்கல் வழிபாடு என்ற பாடலை எழுதியவர் யார்? விடை: ந.பிச்சமூர்த்தி
174. முக்கூடற்பள்ளு என்னும் நூலை இயற்றியவர் யார்? விடை: என்னயினாப் புலவர்
175. பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் கூறுவதாக அமைந்த நூல் எது? விடை: முக்கூடற்பள்ளு
182. அந்தகக்கவி வீரராகவர் எழுதிய தனிப்பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? விடை: தனிப்பாடல் திரட்டு
183. தாலாட்டுப் பாடல்கள் எந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன? விடை: மலையருவி (நாடோடிப் பாடல்கள்)
187. சீவகசிந்தாமணி என்னும் நூலை இயற்றியவர் யார்? விடை: திருத்தக்க தேவர்
188. சீவகசிந்தாமணி நூலுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? விடை: மணநூல்
189. "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாடலைப் பாடியவர் யார்? விடை: பாரதியார்
192. "எங்கள் தமிழ்" எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்? விடை: பாரதிதாசன்
193. "உழவின் சிறப்பு" என்ற பாடலின் ஆசிரியர் யார்? விடை: கம்பர்
194. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்? விடை: சடையப்ப வள்ளல்
199. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்னும் நூலை எழுதியவர் யார்? விடை: தாயுமானவர்
200. எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைந்தமையால் உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது? விடை: திருக்குறள்

மன்னர்கள் மற்றும் வரலாற்று வினாக்கள்:
127. பனம்பூ மாலையணிந்த மன்னன் யார்? விடை: சேரன்
128. வேப்பம்பூ மாலையணிந்த மன்னன் யார்? விடை: பாண்டியன்
129. ஆத்திபூ மாலை யாருக்கு உரியது? விடை: சோழருக்குரியது
131. போர் செய்யப் புறப்படுவதற்கு முன்பாக அரசன் தன் வீரர்களுக்கு அளிக்கும் பெருவிருந்தின் பெயர் என்ன? விடை: பெருஞ்சோறு அளித்தல்
138. மருது பாண்டிக்குச் சாப்பிடப் பழைய சோறு கொடுத்த கிழவி வசித்த ஊருக்கு என்ன பெயர்? விடை: பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்
153. தமிழகத்திலுள்ள "தூங்கா நகர்" எது? விடை: மதுரை
154. மதுரை என்னும் சொல்லுக்கு என்ன பொருள்? விடை: இனிமை
155. பாண்டிய நாடு எதற்குப் பெயர் பெற்றது? விடை: முத்து
156. சோழநாடு எதற்குப் பெயர் பெற்றது? விடை: சோறு
157. நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்? விடை: பாண்டித்துரையார்
165. உலகிலேயே கைத்தறி நெசவின் முன்னோடி எது? விடை: தமிழகம்
166. கண்டாங்கிச் சேலைகளுக்குப் பெயர் பெற்ற ஊர் எது? விடை: உறையூர்
167. சுங்குடிப்புடவைகள் எந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றன? விடை: மதுரையில்
168. பட்டாடைகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன? விடை: காஞ்சிபுரத்தில்
184. தமிழகத்தின் அன்னிபெசண்ட் என அறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர் யார்? விடை: மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
185. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எந்த முறையை ஒழிப்பதற்காகப் பாடுபட்டவர்? விடை: தேவதாசி முறை

கணிதம் மற்றும் அறிவியல் வினாக்கள்:
135. கணிதமேதை எனப் போற்றப்படும் இராமானுஜம் எங்கு வாழ்ந்து வந்தார்? விடை: ஈரோட்டில்
136. எதற்கு மதிப்பு உண்டு என இராமானுஜம் தனது ஆசிரியரிடம் கூறினார்? விடை: சுழியத்திற்கு (0)
137. இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்த்தவர் யார்? விடை: ஹார்டி
176. வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? விடை: கோவை
177. வள்ளுவர் நிலத்தை எப்படி உழ வேண்டும் என்று கூறுகிறார்? விடை: அகல உழுவதைவிட ஆழ உழுதல் நன்று
178. புன்செய் நிலத்தை நம் வேளாண் மக்கள் எவ்வாறு கூறுவர்? விடை: வானம் பார்த்த பூமி
164. உழவர்கள் செல்வமாகக் கருதுவது எதனை? விடை: நெல்மணிகளை

கலை மற்றும் பிற வினாக்கள்:
143. காந்தியடிகள் எந்த மாநிலத்தில் ஆற்றிய உரையைக் கடித வடிவில் அமைத்துள்ளார்? விடை: குஜராத்
144. முனிவர் பொய் சொல்வார் மனையில் எதைச் செய்யமாட்டார்? விடை: உணவு உண்ண மாட்டார்
169. கண்ணுக்கும் காதுக்கும் மனத்துக்கும் இன்பம் பயக்கும் கலை எது? விடை: நாடக்கலை
170. சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைத் தூய தமிழில் எவ்வாறு மாற்றிக்கொண்டார்? விடை: பரிதிமாற் கலைஞர்
171. நாடகத்தமிழ் உலகின் இமயமலை எனப் பாராட்டப்படுவர் யார்? விடை: சங்கரதாசு சுவாமிகள்
172. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்று போற்றப்படுபவர் யார்? விடை: சங்கரதாசு சுவாமிகள்
173. தமிழ் நாடகத் தந்தை என்று நாடக உலகம் யாரைப் போற்றுகிறது? விடை: பம்மல் சம்பந்தனார்
190. தமிழரின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்றாக வளர்ந்து வருவது எது? விடை: சிலம்பாட்டம்
195. தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் முன்னணியில் நிற்பது எது? விடை: ஓவியக்கலை
196. ஓவியக்கலைஞர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? விடை: கண்ணுள் வினைஞன்
197. அவனிப சேகர வல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் ஓவியங்களை வரைந்த ஆசிரியர் யார்? விடை: இளம் கௌதமன்
198. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளவாறு கூறுவது எவ்வகை அணி? விடை: இயல்பு நவிற்சியணி

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement