TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-55
உணவும் மருத்துவமும்
- மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு.
- தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கும் சஞ்சீவி மருந்தாகக் கருதப்படுகிறது.
- "பசிப்பிணி என்னும் பாவி" என்று பசியின் கொடுமையைக் கூறும் காப்பியம் மணிமேகலை.
- "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" எனக் கூறும் நூல்கள் புறநானூறும், மணிமேகலையும்.
- திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
- "முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது" என்பது திருவள்ளுவர் வாக்கு.
- "நீரின்றமையாது உலகு" எனக் கூறியவர் திருவள்ளுவர்.
- "மீதூண் விரும்பேல்" என்றவர் ஔவையார்.
- உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியவர் திருமூலர்.
- இனிப்புச் சுவையின் பயன்: வளம்
- துவர்ப்புச் சுவையின் பயன்: ஆற்றல்
- கைப்பு (கசப்பு) சுவையின் பயன்: மென்மை
- கார்ப்புச் சுவையின் பயன்: உணர்வு
- உவர்ப்புச் சுவையின் பயன்: தெளிவு
- புளிப்புச் சுவையின் பயன்: இனிமை
- நோய்க்கு முதல் காரணம்: உப்பு
- கீழாநெல்லியின் வேறு பெயர்கள்: கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய்நெல்லி
- தூதுவளையின் வேறு பெயர்கள்: சிங்கவல்லி, தூதுளை
- ஞானப்பச்சிலை என வள்ளலார் போற்றும் மூலிகை: தூதுவளை
- கரிசலாங்கண்ணியின் வேறு பெயர்கள்: கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்
- மார்புச்சளி, நீர்க்கோவை, தலைவலி ஆகிய நோய்களைக் குணமாக்கும் மூலிகை: துளசி
- மஞ்சட் காமாலையைக் குணமாக்கும் மூலிகைச் செடி: கீழாநெல்லி
- சுவாசகாசம் அகலப் பயன்படும் மூலிகை: தூதுவளை
- படுக்கைப் புண், சிரங்கு ஆகியவற்றை நீக்கப் பயன்படும் மூலிகை: குப்பைமேனி
- முரிந்த எலும்பு விரைவில் கூடவும், கண்பார்வையை ஒழுங்குபடுத்தவும் பயன்படுவது: முருங்கை கீரை
- நரையைப் போக்கும் மூலிகை: கரிசலாங்கண்ணி
- வாய்ப்புண், குடற்புண்ணைக் குணமாக்கும் கீரை: மணித்தக்காளிக்கீரை
- நினைவாற்றலைப் பெருக்கும் கீரை: வல்லாரைக் கீரை
- ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ளும் முறை: பொருள்கோள்
- பொருள்கோள் எட்டு வகைப்படும்.
- இடையறாது செல்லும் ஆற்று நீரைப் போலப் பாடலின் சொற்கள் முன்பின் மாறாது நேரே சென்று பொருள் கொள்வது: ஆற்று நீர்ப் பொருள்கோள்
- ஓரடியுள் உள்ள சொற்களை, அவை தரும் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கூறுதல்: மொழி மாற்றுப் பொருள்கோள்
- செய்யுளில் இருக்கின்ற சொற்களை முறை மாறாமல் வரிசையாக அமைத்துப் பொருள் கொள்வது: நிரல் நிறைப் பொருள்கோள்
- செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும் இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது: விற் பூட்டுப் பொருள்கோள் (அல்லது பூட்டுவிற் பொருள்கோள்)
- செய்யுளின் நடுவில் அமைந்திருக்கும் சொல், முதலிலும் இறுதியிலும் உள்ள சொற்களுடன் பொருந்திப் பொருளைத் தருவது: தாப்பிசைப் பொருள்கோள்
- செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது: அளைமறி பாப்புப் பொருள்கோள்
- செய்யுளின் பல அடிகளிலும் உள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள் கொள்வது: கொண்டு கூட்டுப் பொருள்கோள்
- செய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது: அடிமறிமாற்றுப் பொருள்கோள்
- அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
- வினைத் தொகையில் வல்லினம் மிகாது (எ.கா: ஊறுகாய்).
- உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது (எ.கா: இரவுபகல்).
- பழங்காலப் பண்பாட்டின் எச்சம் எனக் கருதப்படும் ஏட்டில் எழுதாக் கவிதைகள்: நாட்டுப்புறப் பாடல்கள்
- நாட்டுப்புற இலக்கியத்துள் அடங்குபவை: பழமொழிகள், விடுகதைகள், கதைப் பாடல்கள், தொழிற்பாடல்கள்
- காய்ச்சீர் நான்கு வகைப்படும் (தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்).
- வெண்பாவிற்கு உரிய சீர்: காய்ச்சீர் (வெண்பா உரிச்சீர்)
- கனிச்சீர் நான்கு வகைப்படும் (தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி).
- வஞ்சிப்பாவிற்கு உரிய சீர்: கனிச்சீர் (வஞ்சியுரிச்சீர்)
- நாலசைச்சீர் இவ்வாறு அழைக்கப்படும்: பொதுச்சீர்
- நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது: தளை
- தளை ஏழு வகைப்படும்.
- மாமுன் நேர் வருவது: நேரொன்றாசிரியத்தளை
- விளம்முன் நிரை வருவது: நிரையொன்றாசிரியத்தளை
- மாமுன் நிரையும், விளம்முன் நேரும் வருவது: இயற்சீர் வெண்டளை
- காய்முன் நேர் வருவது: வெண்சீர் வெண்டளை
- வெண்பாவிற்கு உரிய தளைகள்: இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும்
- காய்முன் நிரை வருவது: கலித்தளை
- சீர்கள் பல அடுத்து நடப்பது: அடி
- ஓர் அடியுள் முதல், இரண்டு, நான்காம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது: கீழ்க்கதுவாய் எதுகை
- ஓர் அடியுள் உள்ள நாற்சீர்களிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது: முற்றெதுகை
- தொடை எட்டு வகைப்படும்.
- அளவடிக்கு வழங்கும் வேறு பெயர்: நேரடி
- இரட்சணிய யாத்திரிக நூலாசிரியர்: எச்.ஏ. கிருட்டினனார்
- எச்.ஏ. கிருட்டினனார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு
- எச்.ஏ. கிருட்டினனார் இயற்றிய பிற நூல்கள்: இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக் குறள்
- 'கிறித்துவக் கம்பர்' எனப் புகழப்பெற்ற பெருங்கவிஞர்: எச்.ஏ. கிருட்டினனார்
- இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்: இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்
- இரட்சணிய யாத்திரிகம் தழுவி எழுதப்பட்ட நூல்: ஜான் பன்யன் இயற்றிய 'பில்கிரிம்ஸ் புரோகிரஸ்' (Pilgrim's Progress)
- "ஓய்வாக இருக்கையில் தம்பி - நீ ஓவியம் வரைந்து பழகு" என்ற பாடலை இயற்றியவர்: பெருஞ்சித்திரனார்
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்: துரை. மாணிக்கம்
- பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர்: சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்
- பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் சில: கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக் கொத்து, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம்
- உலகத் தமிழரிடையே தமிழுணர்வை பெருஞ்சித்திரனார் பரப்பிய இதழ்கள்: தென் மொழி, தமிழ்ச் சிட்டு, தமிழ் நிலம்
- பெருஞ்சித்திரனாரின் "பள்ளிப் பறவைகள்" நூல் மூன்று பிரிவுகளாக (குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை) அமைந்துள்ளது.
- "எதிர்காலம் யாருக்கு" என்ற பாடலை பாடியவர்: மீரா
- மீரா என்னும் பெயர் எதன் சுருக்கம்: மீ. இராசேந்திரன்
- "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" எனத் தொடங்கும் திருவருட்பா பாடலை எழுதியவர்: இராமலிங்க அடிகளார்
- வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமச்சாலை ஆகியவற்றை நிறுவியவர்: இராமலிங்க அடிகளார் (வள்ளலார்)
- திருவருட்பா என்பதைப் பிரித்து எழுதுக: திரு + அருள் + பா
- திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை: 5818 (ஐயாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டு)
- "வான் பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்" என்ற பாடலை எழுதியவர்: வில்லிபுத்தூரார்
- வில்லிபுத்தூராரின் தந்தை பெயர்: வீரராகவர்
- வில்லிபுத்தூராரை ஆதரித்தவர்: வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
- வில்லிபாரதம் பத்து பருவங்களைக் கொண்டது.
- 'யார் கவிஞன்' பாடலின் ஆசிரியர்: முடியரசன்
- கவிஞர் முடியரசரின் இயற்பெயர்: துரைராசு
- உலகில் இல்லாத பொருளை ஒன்றிற்கு உவமையாக்கிக் கூறுவது: இல் பொருள் உவமையணி
- தான் கருதிய பொருளை நேரடியாகச் சொல்லாமல், அதனோடு தொடர்புடையனவற்றைச் சொல்லி விளங்கவைப்பது: பிறிது மொழிதல் அணி
- இருபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையைக் கூறிய பின்னர் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது: வேற்றுமையணி
- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, நேரே பொருள் கொள்வது: நிரல் நிறை அணி
- உலகில் தோன்றிய பல்வேறு அறிவியல் கல்விகளில் மிகத் தொன்மையானது, பழைமையானது: வானியல் கல்வி
- உலகம் நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களை உள்ளடக்கியது எனக் குறிப்பிடும் நூல்: தொல்காப்பியம்
- உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று கண்டறிந்த போலந்து நாட்டைச் சார்ந்த அறிஞர்: நிக்கோலஸ் கோபர்நிகஸ்
- உலகம் உருண்டையானது என்பதைத் தொலைநோக்கியால் கண்டுபிடித்துச் சொன்னவர்: கலிலியோ
- படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்கப் பயன்படும் வேற்றுமை: விளி வேற்றுமை
- கருவி இரண்டு வகைப்படும்: முதற்கருவி, துணைக்கருவி
- கருத்தா இரண்டு வகைப்படும்: இயற்றுதல் கருத்தா, ஏவுதல் கருத்தா
- தமிழினத்தின் தனி விழா, பண்பாட்டுப் பெருவிழா என்று போற்றப்படுவது: பொங்கல் விழா (தைத்திங்கள் நாள் விழா)
- வீடும் நாடும் தூய்மைப்படுகிற சுற்றுப்புறச் சூழலைப் போற்றுகின்ற திருநாள்: போகித்திருநாள்
- ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் விதம்: மகர சங்கராந்தி
- ஜப்பான், ஜாவா ஆகிய நாடுகளில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் விதம்: அறுவடைத் திருவிழா


0 Comments