TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-54
மாணிக்கவாசகர்
- 301. "மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து" என்னும் பாடலை இயற்றியவர்: மாணிக்கவாசகர்.
- 302. பிறந்த ஊர்: மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூர்.
- 303. அரசவைப் பணி: அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.
- 304. சிறப்புப் பெயர்: "அழுது அடியடைந்த அன்பர்".
- 305. இயற்றிய நூல்கள்: திருவாசகம், திருக்கோவையார்.
- 306. கோவில் எழுப்பியவர்: ஆவுடையார் கோவில் (திருப்பெருந்துறை கோவில்).
- 307. வாழ்ந்த காலம்: கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
- 308. சைவத் திருமுறையில் இடம்: எட்டாம் திருமுறை.
- 309. திருவாசகப் பாடல்கள்: 658 பாடல்கள்.
- 310. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஜி.யு.போப்.
- 311. "சதகம்" பொருள்: நூறு பாடல்கள்.
- 312. திருவள்ளுவர் நாள்: தைத் திங்கள் இரண்டாம் நாள் (தமிழக அரசு அறிவிப்பு).
- 313. திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்தவர் (1812): மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் (தஞ்சையில்).
- 314. திருக்குறளைப் புகழ்ந்தவர் ("இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே"): பாரதிதாசன்.
- 315. ஆசிரியர்: கணிமேதாவியார்.
- 316. சமயம்: சமண சமயம்.
- 317. வாழ்ந்த காலம்: கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு.
- 318. மற்றொரு நூல்: திணைமாலை நூற்றைம்பது.
- 319. வெண்பாக்கள்: 81 வெண்பாக்கள்.
- 320. மருந்துப் பொருள்கள்: இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி.
- 321. தமிழின் சிறப்புப் பாடல் ("வீறுடை செம்மொழி..."): பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
- 322. செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் ("திருந்திய பண்பும்..."): பரிதிமாற்கலைஞர்.
- 323. செம்மொழியின் தன்மைகள்: பதினாறு.
- 324. தமிழின் சிறப்பைப் பாடியவர் ("என்றுமுள தென்தமிழ்"): கம்பர்.
- 325. தமிழ் தாய்மொழியாகத் திகழும் மொழிகள்: கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம்.
- 326. சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள்: 26,350.
- 327. "கமில் சுவலபில்" நாட்டைச் சேர்ந்த மொழியியல் அறிஞர்: செக் நாடு.
- 328. தமிழைப் பாராட்டியவர் (பண்பட்ட மொழி, இலக்கியச் செல்வம்): மாக்சுமுல்லர்.
- 329. சங்க இலக்கியங்களின் வேறு பெயர்: மக்கள் இலக்கியம்.
- 330. தமிழ் இலக்கணத்தைப் புகழ்ந்தவர் ("படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது"): கெல்லட்.
- 331. அகத்தியர் எழுதிய ஐந்து இலக்கண நூல்: அகத்தியம் (தொல்காப்பியரின் ஆசிரியர்).
- 332. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" நூல்: புறநானூறு.
- 333. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" நூல்: திருக்குறள்.
- 334. மக்கட் பண்பு இல்லாதவரை திருவள்ளுவர் ஒப்பிடுவது: மரம்.
- 335. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" காப்பியம்: சிலப்பதிகாரம்.
- 336. தொல்காப்பியத்தைப் புகழ்ந்தவர் (மொழியியல் வழிமுறைகள்): முனைவர் எமினோ.
- 337. இயற்பெயர் மாற்றியவர்: சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டார்).
- 338. பிறந்த ஊர்: மதுரையை அடுத்த விளாச்சேரி.
- 339. தமிழ் கற்ற மாணவர்களை அழைத்த விதம்: இயற்றமிழ் மாணவர்.
- 340. மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்படக் காரணமாக இருந்தவர்: பாசுகர சேதுபதி (பாண்டித்துரையார் மேற்பார்வையில்).
- 341. 'திராவிட சாஸ்திரி' பட்டம் வழங்கியவர்: சி.வை. தாமோதரனார்.
- 342. இயற்றிய நூல்: தனிப்பாசுரத் தொகை.
- 343. "விடுநனி கடிது" இடம்பெற்ற நூல்: கம்பராமாயணம் (குகப்படலம்).
- 344. இயற்றிய நற்றமிழ் நாடகங்கள்: ரூபாவதி, கலாவதி.
- 345. இயற்றிய நூல்: சித்திரக்கவி.
- 346. உரையெழுதிய பாடல்கள்: நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்கள் (குமரகுருபரர்).
- 347. நடத்திய இதழ்: ஞானபோதினி (மு.சி. பூர்ணலிங்கம் தொடங்கி வைத்தது).
- 348. குறுக்கங்கள் வகைகள்: நான்கு வகைப்படும் (ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்).
- 349. இளங்கோவடிகள் மரபு: சேர மரபு.
- 350. பெற்றோர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோணை.
- 351. தமையன்: சேரன் செங்குட்டுவன்.
- 352. காண்டங்கள்: மூன்று காண்டங்கள் (புகார், மதுரை, வஞ்சி).
- 353. காதைகள்: 30 காதைகள்.
- 354. வேறு பெயர்: "உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்".
- 355. உணர்த்தும் உண்மை: ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
- 356. பெற்றோர்: கனகசபை, இலக்குமி.
- 357. படைப்புகள்: குடும்பவிளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு.
- 358. பெரியார் சமூக முரண்களையும் மூடக் கருத்துகளையும் அறுத்த விதம்: முட்டறுத்தவர்.
- 359. தனித்து நின்று பொருள் தரும் சொல்: தனிமொழி.
- 360. தந்தை பெயர்: ஆதித்தன்.
- 361. ஆறு காண்டங்கள்: பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்.
- 362. குகப்படலம் இடம்பெற்ற காண்டம்: அயோத்தியா காண்டம்.
- 363. குகப்படலத்தின் வேறு பெயர்: கங்கைப்படலம்.
- 364. பிறந்த ஊர்: மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே.
- 365. இயற்பெயர்: பீமாராவ் ராம்ஜி.
- 366. லண்டனில் பெற்ற பட்டங்கள்: அறிவியல் முதுகலைப் பட்டமும், பாரிஸ்டர் பட்டமும்.
- 367. மனித உரிமைக்காக முதலில் நடத்திய போராட்டம் (1924): கேரளாவில் உள்ள வைக்கம்.
- 368. மக்கள் கல்விக் கழகம் தோற்றுவித்த ஆண்டு: 1946.
- 369. எழுதிய நூல்: "இந்தியாவின் தேசியப் பங்குவீதம்".
- 370. 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்ட ஆண்டு: 1990.
- 371. அரசியல் சாசனத்தின் 19(1) பிரிவின்படி குடிமக்களின் உரிமை: பேச்சுரிமை, எழுத்துரிமை.
- 372. தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2005.
- 373. "நல்" என்னும் அடைமொழியால் போற்றப்படும் எட்டுத்தொகை நூல்: நற்றிணை.
- 374. தொகுப்பித்த மன்னன்: பன்னாடு தந்த மாறன் வழுதி.
- 375. பாடல்களைப் பாடிய புலவர்கள்: 275 பேர்.
- 376. அடிச் சிற்றெல்லை, பேரெல்லை: 9 அடிச் சிற்றெல்லை, 12 அடிப் பேரெல்லை.
- 377. "அரி" என்னும் சொல்லின் பொருள்: நெற்கதிர்.
- 378. கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்: கண்ணகனார்.
- 379. வினா வகைகள்: ஆறு வகைப்படும்.
- 380. விடை வகைகள்: எட்டு வகைப்படும்.
- 381. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை: பேச்சுக்கலை.
- 382. மேடைப்பேச்சில் மக்களை பெரிதும் ஈர்த்தவர்: பேரறிஞர் அண்ணா.
- 383. 'உடைமை' என்னும் சொல்லில் முடியும் அதிகாரப் பெயர்கள்: பத்து அதிகாரங்கள்.
- 384. அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை இடம்பெற்ற நூல்: திருக்குறள்.
- 385. திருக்குறளுக்கும் பெரிதும் தொடர்புள்ள எண்: ஏழு.
- 386. ஏழு என்னும் எண்ணுப்பெயர் இடம்பெற்ற குறட்பாக்கள்: எட்டுக் குறட்பாக்கள்.
- 387. "ஏடாயிரங் கோடி எழுதாது என்..." எனத் தொடங்கும் சீட்டுக்கவிப் பாடலைப் பாடியவர்: அந்தகக்கவி வீரராகவர்.
- 388. பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டத்துப் பூதூர்.
- 389. வாழ்ந்த ஊர்: பொன்விளைந்த களத்தூர்.
- 390. தந்தையார் பெயர்: வடுகநாதர்.
- 391. இலங்கை சென்று புகழ்ந்து பாடிய மன்னன்: பரராச சேகர மன்னன்.
- 392. பரராச சேகர மன்னனிடம் பெற்ற பரிசுகள்: ஒரு யானை, பொற்பந்தம், ஓர் ஊர்.
- 393. மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல்: முத்தொள்ளாயிரம்.
- 394. புறத்திரட்டு நூல் வாயிலாகக் கிடைத்த வெண்பாக்கள்: நூற்றெட்டு (108) வெண்பாக்கள்.
- 395. பழைய உரை நூல்களில் மேற்கோள்களாகக் கிடைத்த வெண்பாக்கள்: இருபத்திரண்டு (22) வெண்பாக்கள்.
- 396. ஆசிரியர் பெயர்: தெரியவில்லை.
- 397. இயற்றியவர்: சயங்கொண்டார்.
- 398. ஊர்: திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி.
- 399. அரசவைப் புலவர்: முதல் குலோத்துங்கச் சோழன்.
- 400. சயங்கொண்டாரைப் பாராட்டியவர் ("பரணிக்கோர் சயங்கொண்டார்"): பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.


0 Comments