6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-61


TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-61
கணித மேதை இராமானுஜம் பற்றிய தகவல்கள்:
  • 1001. பேராசிரியர் இராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு சென்னையில் அமைக்கப்பட்ட ஆண்டு: 1971
  • 1002. சென்னையில் இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் திறந்து வைக்கப்பட்ட நாள்: 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள்
  • 1003. சென்னைத் துறைமுகம் புதிதாக வாங்கிய குடிநீர்க்கப்பலுக்கு சூட்டப்பட்ட பெயர்: சீனிவாச இராமானுஜம்
  • 1004. ரிச்சர்ட்டும் ஆஸ்கேயும் இணைந்து இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்குக் கொண்டு வந்து வழங்கிய ஆண்டு: 1984 ஆம் ஆண்டு
  • 1005. இராமானுஜம் விட்டுச் சென்ற கணிதக் குறிப்புகள் அடங்கிய குறிப்பேடுகள்: 3
  • 1006. இராமானுஜத்தின் குறிப்பேடுகளில் இருந்த தேற்றங்களின் எண்ணிக்கை: 3000 முதல் 4000 வரை
  • 1007. இராமானுஜத்தின் தேற்றங்களை ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிட்ட நிறுவனம்: டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் (1957)
இலக்கணம் மற்றும் மொழித்திறன்:
  • 1008. 'தவச்சிறிது' என்பதில் இடம்பெற்றுள்ள உரிச்சொல்: தவ
  • 1009. 'எட்டுக்கால்', 'பத்துப்பேர்' ஆகிய எண்ணுப் பெயர்களுக்குப் பின்: வல்லொற்று மிகும்
  • 1010. 'பாடாக்குயில்' என்பதில் பாடா என்பது: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • 1011. சுவர் இருந்தால் தானே வரைய முடியும்: சித்திரம்
  • 1012. பாடாத, கேளாத, ஆடாத என்பன: எதிர்மறைப் பெயரெச்சங்கள்
  • 1013. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம்: மிகும்
  • 1014. பெயரெச்சச் சொற்களின் முன் வல்லினம்: மிகாது
  • 1027. ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயர்: இடுகுறிப்பெயர்
  • 1028. காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள்: காரணப்பெயர்கள்
  • 1029. தமிழில் மிகுதியாக உள்ள பெயர்கள்: காரணப்பெயர்களே
  • 1030. மலை, காடு, மாடு என்பன: இடுகுறிப் பெயர்கள்
  • 1031. காகம், குயில், புறா, கிளி ஆகிய அனைத்தையும் 'பறவை' என அழைப்பது: காரணப் பொதுப் பெயர்
  • 1032. 'வளையல்' என்பது: காரணச் சிறப்புப் பெயர்
  • 1034. ஒரு சொற்றொடரிலுள்ள எழுவாய் அதன் பயனிலையோடு பொருத்தமாக அமைய வேண்டிய இடங்கள்: திணை, பால், எண்
  • 1084. பெயர்ச்சொற்களை இலக்கண நூலார் வகைப்படுத்துவது: ஆறு வகைப்படும்
  • 1085. முழுமையான ஒன்றின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர்கள்: சினைப் பெயர்கள்
  • 1086. ஆடல், பாடல், வட்டம், அழகு ஆகியன: தொழிற் பெயர்கள் மற்றும் பண்புப் பெயர்கள்
  • 1087. வீடு, தெரு, பள்ளி, கோவில் என இடங்களைக் குறிப்பன: இடப் பெயர்கள்
  • 1088. ஆண்டு, கிழமை, திங்கள் என்பன: காலப் பெயர்கள்
  • 1093. எதிரான கருத்தைக் கூறும்பொழுது எதிர்ப்பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்துதல்: எதிர் இணைச் சொற்கள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்: திரிகடுகம்
  • 1015. "திரிகடுகம்" என்ற நூலை இயற்றியவர்: நல்லாதனார்
  • 1016. நல்லாதனார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்து
  • 1017. செரு அடுதோள் நல்லாதன் எனப் பாயிரம் குறிப்பிடுவது: நல்லாதனாரை
  • 1018. திரிகடுகம் எந்த நூல்களுள் ஒன்று: பதினெண்கீழ்க்கணக்கு
  • 1019. திரிகடுகம் உடைய வெண்பாக்கள்: நூறு
  • 1020. திரிகடுகப் பாடலில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துகள்: மூன்று
  • 1021. திரிகடுகம் பாடலில் 'வனப்பு' என்னும் சொல்லின் பொருள்: அழகு
  • 1022. திரிகடுகம் பாடலில் 'தூறு' என்னும் சொல்லின் பொருள்: புதர்
கல்வி மற்றும் அறக்கருத்துகள்:
  • 1023. காந்தியடிகள் புரோச் நகரில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய மாநாடு: இரண்டாவது கல்வி மாநாட்டில்
  • 1024. முனிவர் அதிகமாக வெறுப்பவர்: பொய் சொல்வாரை
  • 1025. பெரியவரின் நற்குணங்களைக் கண்டு முனிவர் முகம் மலர்ந்தது, அந்த நற்குணங்கள்: அன்பு, அடக்கம், பணிவு
  • 1026. "தொன்மை மிக்க உலக மொழிகள்" எனத் தொடங்கும் பாடலை எழுதியவர்: தேவநேயப் பாவாணர்
குமரகுருபரர் பற்றிய தகவல்கள்:
  • 1035. "திருவாரூர் நான்மணிமாலை" என்னும் நூலை இயற்றியவர்: குமரகுருபரர்
  • 1036. குமரகுருபரரின் பெற்றோர்: சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமசுந்தரி அம்மையார்
  • 1037. குமரகுருபரர் பிறந்த ஊர்: திருவைகுண்டம்
  • 1038. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை இயற்றியவர்: குமரகுருபரர்
  • 1039. குமரகுருபரர் வாழ்ந்த காலம்: கி.பி. பதினாறாம் நூற்றாண்டு
  • 1040. நான்மணிமாலை என்பது எவ்வகை இலக்கியங்களுள் ஒன்று: சிற்றிலக்கியங்களுள்
  • 1041. நான்மணிமாலை உடைய செய்யுள்கள்: நாற்பது
  • 1042. இறைவன் சிவபெருமான் யாருக்காக மண்சுமந்து பாண்டியனிடம் அடிபட்டார்: வந்தி
வாணிதாசன் பற்றிய தகவல்கள்:
  • 1043. மெய்ப்பொருள் கல்வி என்னும் பாடலை இயற்றியவர்: வாணிதாசன்
  • 1044. வாணிதாசன் என்பவரின் இயற்பெயர்: எத்திராசலு (எ) அரங்கசாமி
  • 1045. வாணிதாசன் பிறந்த ஊர்: புதுவையை அடுத்த வில்லியனூர்
  • 1046. வாணிதாசனின் பெற்றோர்: அரங்க திருக்காமு, துளசியம்மாள்
  • 1047. கவிஞரேறு, பாவலர்மணி என்னும் பட்டங்களைப் பெற்றவர்: வாணிதாசன்
  • 1048. தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் எனத் தமிழுலகம் புகழும் கவிஞர்: வாணிதாசன்
  • 1049. வாணிதாசனின் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்: உருசியம், ஆங்கிலம்
  • 1050. மெய்ப்பொருள் கல்வி என்னும் பாடல் எடுக்கப்பட்ட பாடல் தொகுப்பு: குழந்தை இலக்கியம்
மதுரை பற்றிய தகவல்கள்:
  • 1051. ஆண்டின் எல்லா நாளிலும் விழாக்கள் கொண்டாடுவதால் "திருவிழா நகர்" என்னும் பெருமை பெற்ற நகர்: மதுரை
  • 1052. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படுவது: மதுரை
  • 1053. பாண்டி நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கியது: மதுரை
  • 1054. மதுரை என்னும் சொல்லுக்குப் பொருள்: இனிமை
  • 1055. மதுரையை "தமிழ் கெழு கூடல்" எனப் போற்றிய நூல்: புறநானூறு
  • 1056. "ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர்" என மதுரைக்குப் புகழ்மாலை சூட்டியவர்: இளங்கோவடிகள்
  • 1057. சேர நாடு எதற்குப் பெயர் பெற்றது: வேழமுடைத்து (யானை)
  • 1058. சோழநாடு எதற்குப் பெயர் பெற்றது: சோறுடைத்து
  • 1059. பாண்டியநாடு எதற்குப் பெயர் பெற்றது: முத்துடைத்து
  • 1060. தொண்டைநாடு எதற்குப் பெயர் பெற்றது: சான்றோருடைத்து
  • 1061. மதுரைக்கு வழங்கும் வேறு பெயர்கள்: கூடல், ஆலவாய், நான்மாடக்கூடல்
  • 1062. நான்மாடக்கூடல் என்று மதுரைக்குப் பெயர் வரக் காரணமான நான்கு மாடங்கள்: திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்
  • 1063. மதுரைக்குக் காவலாக அமைந்த நான்கு திருக்கோவில்கள்: கன்னிகோவில், கரியமால் கோவில், காளிகோவில், ஆலவாய்க் கோவில்
  • 1064. மதுரையை அழிக்க வருணன் அனுப்பிய மேகங்கள்: ஏழு
  • 1065. மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதிக்குப் பெயர்: அறுவை வீதி
  • 1066. தானியங்கள் விற்கப்படும் வீதியின் பெயர்: கூலவீதி
  • 1067. அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகத் திகழ்ந்தவர்: மாணிக்கவாசகர்
  • 1068. கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தைக் காத்தவர்: திருஞானசம்பந்தர்
  • 1069. திருமலை நாயக்கர் எதைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்: மதுரையை
  • 1070. மதுரையில் தமுக்கம் மற்றும் பெரிய தெப்பக் குளத்தை அமைத்தவர்: திருமலை நாயக்கர்
  • 1071. நாயக்கர் மகாலில் உள்ள ஒவ்வொரு தூணின் உயரம் மற்றும் சுற்றளவு: 82 அடி உயரம், 19 அடி சுற்றளவு
  • 1072. மதுரையில் சத்திரங்களும் சாலைகளும் அமைத்து அழகுபடுத்தியவர்: இராணி மங்கம்மாள்
  • 1073. தருமிக்கு இறைவன் பாடல் தந்தமை பற்றிக் கூறும் நூல்: திருவிளையாடற்புராணம்
  • 1074. நாலடியார் மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் வாழ்ந்த யாரால் இயற்றப் பெற்றது: சமண முனிவர்களால்
  • 1075. குமரகுருபரருக்கு மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து பரிசளித்தது: முத்துமணி மாலையை
  • 1076. கோவலன் கொலைக்களப்பட்ட இடம் மதுரையில் எவ்வாறு வழங்கப்படுகிறது: கோவலன் பொட்டல்
  • 1077. மதுரையில் கையிற் சிலம்புடன் உட்கார்ந்திருக்கும் உருவச்சிலை அமைந்த கோவில்: செல்லத்தம்மன் கோவில்
  • 1078. மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழைமையான கோபுரம்: கிழக்குக் கோபுரம்
  • 1079. மீனாட்சியம்மன் கோவிலின் உயரமான கோபுரம்: தெற்குக் கோபுரம்
  • 1080. மீனாட்சியம்மன் கோவிலின் தெற்குக் கோபுரம் எத்தனை அடி உயரமும், எத்தனை சுதை உருவங்களையும் உடையது: 160.9 அடி உயரம், 1511 சுதை உருவங்கள்
  • 1081. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரம் மதுரையை எவ்வாறு குறிப்பிடுகிறது: மூதூர்
  • 1082. மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்ட கட்டடம்: நாயக்கர் மகால்
  • 1083. நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்: பாண்டித்துரையார்
கவியரசு கண்ணதாசன் பற்றிய தகவல்கள்:
  • 1089. கவியரசு கண்ணதாசன் பிறந்த இடம் மற்றும் ஆண்டு: சிறுகூடல்பட்டி என்னும் சிற்றூரில் 1927 இல்
  • 1090. கண்ணதாசனின் புனைப்பெயர்கள் சில: காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா
  • 1091. கவியரசு கண்ணதாசன் இயற்றிய திரைப்படப் பாடல்கள்: ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட
  • 1092. கவியரசு கண்ணதாசன் மறைந்த ஆண்டு: 1981
வரலாற்றுத் தகவல்கள்:
  • 1094. ஜெர்மனி நாட்டின் கொடுங்கோலராகக் கருதப்பட்டவர்: ஹிட்லர்
  • 1095. ஹிட்லருக்கு எதிராக வாதாடி, எழுத்து மூலம் மன்னிப்புக் கேட்கச் செய்தவர்: செண்பகராமன்
  • 1096. மருதகாசி பிறந்த ஊர்: திருச்சி மாவட்டத்திலுள்ள மேலக்குடிகாடு
ஆடைகள் மற்றும் நெசவுத் தகவல்கள்:
  • 1097. பருத்தி நூலினை அதன் மென்மைத் தன்மைக்கு ஏற்ப பெயரிட்டு அழைப்பது: நூல் எண் 10, எண் 20, எண் 60 என
  • 1098. அண்ணல் காந்தியடிகள், பெருந்தலைவர் காமராசர், பெரியார், அண்ணா ஆகியோர் அணிந்த ஆடைகள்: கைத்தறி ஆடைகளை
  • 1099. நகர்ப்புறங்களில் நடைபெறும் நெசவு: இயந்திர நெசவு
  • 1100. திருப்பூர் பெயர் பெற்றது: பின்னலாடை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement