6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-60


TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-60
பழமொழி நானூறு - ஆசிரியர் குறிப்பு
எண்வினாவிடை
901'பழமொழி நானூறு' நூலின் ஆசிரியர் யார்?முன்றுறை அரையனார்
902முன்றுறை அரையனார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?முன்றுறை
903அரையன் என்ற சொல் எதனைக் குறிக்கும்?அரசன்
904'ஆற்றுணா' என்பதைப் பிரித்து எழுதுக?ஆறு + உணா
ஜவஹர்லால் நேரு பற்றிய தகவல்கள்
எண்வினாவிடை
905நேரு இந்திய நாட்டின் விடுதலைக்காக எந்த ஆண்டில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்?1921 ஆம் ஆண்டு
907நேரு இந்திராகாந்திக்கு எந்தச் சிறைச்சாலையிலிருந்து கடிதம் எழுதினார்?அல்மோரா சிறைச்சாலை
915அல்மோரா சிறை எந்த மாநிலத்தில் உள்ளது?உத்தராஞ்சல் மாநிலம்
917நேருவின் மனைவியின் பெயர் என்ன?கமலா நேரு
918சிறைச்சாலையில் நேருவின் உற்ற நண்பனாய் இருந்தது எது?புத்தகம்
906இந்திராகாந்தி எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தார்?ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
உலகப் பிரபலங்கள் - அறிமுகம்
எண்வினாவிடை
908சேக்ஸ்பியர் என்பவர் யார்?ஆங்கில நாடக ஆசிரியர்
909மில்டன் என்பவர் யார்?சிறந்த ஆங்கிலக் கவிஞர்
910பிளேட்டோ என்பவர் யார்?கிரேக்கச் சிந்தனையாளர்
911காளிதாசர் எந்த மொழியின் நாடக ஆசிரியர்?வடமொழி
912பெர்னார்ட்ஷா என்பவர் யார்?ஆங்கில நாடக ஆசிரியர்
913டால்ஸ்டாய் எந்த நாட்டு எழுத்தாளர்?இரஷ்ய நாடு
914பெட்ரண்ட் ரஸ்ஸல் என்பவர் யார்?சிந்தனையாளர் மற்றும் கல்வியாளர்
விசுவபாரதி கல்லூரி
எண்வினாவிடை
916விசுவபாரதி கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் யார்?கிருபளானி
சித்தர்கள் பற்றிய தகவல்
எண்வினாவிடை
919கடுவெளிச்சித்தர் எந்த இறைவனை வழிபட்டார்?வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டார்
920சித்தர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள்?சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்
பெரியார் பற்றிய விவரங்கள்
எண்வினாவிடை
921பெரியார் எங்குப் பிறந்தார்?ஈரோடு
922பெரியாரின் பெற்றோர் யாவர்?வெங்கடப்பர், சின்னத்தாயம்மாள்
923பெரியாரின் இயற்பெயர் என்ன?இராமசாமி
930பெரியார் பிறந்த ஆண்டு என்ன?17.09.1879
931பெரியார் மறைந்த ஆண்டு என்ன?24.12.1973
924சொந்தமாகச் சிந்தித்துப் புரிந்து கொள்ள நினைக்கிறவர் யார்?பெரியார்
925பெரியார் வாழ்ந்த காலம் முழுவதும் எதற்கு முதலிடம் கொடுத்தார்?அறிவுக்கே
929பெண்களுக்கு முக்கியம் என்று பெரியார் எவற்றைக் கூறினார்?அறிவும், சுயமரியாதையும்
926மக்கள் அனைவரும் எந்த ஓர் இனமாக எண்ணவேண்டும் என்றார் பெரியார்?மனிதசாதி
927வைக்கம் எந்த மாநிலத்தில் உள்ளது?கேரளா
928வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார்?பெரியார்
932பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தார்?13,12,000 கிலோ மீட்டர்
933சமூகத் தொண்டிற்காகப் பெரியார் எத்தனை கூட்டங்களில் உரையாற்றினார்?10,700 கூட்டங்கள்
934நடுவண் அரசு எந்த ஆண்டு பெரியாரின் அஞ்சல் தலையை வெளியிட்டது?1978 ஆம் ஆண்டு
சொற்பொருள்
எண்சொல்பொருள்
935"அவல்" என்பதன் பொருள் என்ன?பள்ளம்
936"மிசை" என்பதன் பொருள் என்ன?மேடு
937"நல்லை" என்பதன் பொருள் என்ன?நன்றாக இருப்பாய்
புறநானூறு - தகவல்கள்
எண்வினாவிடை
938புறநானூறு எவ்வகை நூல்களுள் ஒன்று?எட்டுத்தொகை நூல்கள்
939தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல் எது?புறநானூறு
ஔவையார் பற்றிய குறிப்பு
எண்வினாவிடை
940ஆத்திசூடி பாடிய ஔவையாரும் சங்கப்பாடல் பாடிய ஔவையாரும் ஒருவரா?இல்லை, இருவரும் வேறு வேறானவர்
கவிஞர் தாராபாரதி
எண்வினாவிடை
941தாராபாரதி தமிழக அரசின் எந்த விருதைப் பெற்றார்?நல்லாசிரியர் விருது
942புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?கவிஞர் தாராபாரதி
மற்ற தலைவர்கள் பற்றிய குறிப்புகள்
எண்வினாவிடை
943கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் யார்?வ.உ.சிதம்பரனார்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
எண்வினாவிடை
944பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு எது?1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30
945முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர் யாவர்?உக்கிரபாண்டித்தேவர், இந்திராணி அம்மையார்
946முத்துராமலிங்கத்தேவர் எந்தப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார்?கமுதியிலுள்ள தொடக்கப் பள்ளி
947முத்துராமலிங்கத்தேவர் உயர்நிலைப் படிப்பை எங்கு பயின்றார்?பசுமலை மற்றும் இராமநாதபுரம்
தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார்
எண்வினாவிடை
948திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் எது?காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம்
949துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?தண்டலம்
950திரு.வி.க வின் பெற்றோர் யாவர்?விருத்தாசலனார், சின்னம்மையார்
953திரு.வி.க வாழ்ந்த காலம் என்ன?26.08.1883 முதல் 17.09.1953 வரை
955திரு.வி.க பணியாற்றிய பள்ளி எது?சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி
951திரு.வி.க வின் தமிழ் நடையைப் போற்றி அவர் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்?தமிழ்த்தென்றல்
952மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?திரு.வி.கலியாணசுந்தரனார்
954பொதுமை வேட்டல் நூலில் எத்தனை பாக்கள் உள்ளன?430 பாக்கள்
திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்
எண்வினாவிடை
956திருவள்ளுவரின் தாயார் பெயர் என்ன?ஆதி
957திருவள்ளுவரின் தந்தை பெயர் என்ன?பகவன்
958திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?நெசவுத் தொழில்
959"தேவர்", "முதற்பாவலர்", "பொய்யில் புலவர்" ஆகிய சிறப்புப் பெயர்களைக் கொண்டவர் யார்?திருவள்ளுவர்
960திருக்குறளில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை எத்தனை?1330
961திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?107 மொழிகளில்
செம்மொழிகள் மற்றும் தமிழ்மொழிச் சிறப்பு
எண்வினாவிடை
962உலகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன?6000-த்திற்கும் மேற்பட்ட மொழிகள்
963திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் எவ்வாறு அழைக்கப்படும்?செம்மொழிகள்
964கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம் போன்ற மொழிகளைச் செம்மொழிகள் எனப் பட்டியலிட்டவர் யார்?ச.அகத்தியலிங்கம்
965இன்று பேச்சு வழக்கில் இல்லாத செம்மொழிகள் எவை?கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
966"தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு" எனக் கூறியவர் யார்?டாக்டர் கிரௌல்
967"தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர் யார்?கால்டுவெல்
968'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது எந்த நூலின் நூற்பா?தொல்காப்பியம்
தமிழில் இலக்கணம்
எண்வினாவிடை
969வடமொழியில் எத்தனை வகையான எண்கள் உள்ளன?மூன்று (ஒருமை, இருமை, பன்மை)
தமிழர்களின் குடியிருப்புகளின் பெயர்கள்
எண்வினாவிடை
970தமிழர்கள் தம் குடியிருப்புகளைப் பொதுவாக எந்தப் பெயரால் குறித்தனர்?ஊர்
971மலையின் உயரத்திற்குக் குறைவான நிலப்பகுதியை எவ்வாறு கூறினர்?குன்று
972குன்றிலும் உயரத்தில் குறைந்ததைக் குறிக்கும் சொற்கள் எவை?கரடு, பாறை
973மரங்கள் பெயரில் அமைந்த ஊர்களுக்கு எடுத்துக்காட்டு தருக?ஆற்காடு, ஆலங்காடு
974ஆடு மாடுகள் அடைக்கப்படும் இடத்திற்கு என்ன பெயர்?பட்டி
975ஆறுகள் பாயும் இடங்களில் அமைந்த ஊர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?ஆற்றூர் (ஆத்தூர்)
976பரதவர் வாழ்ந்த ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை
977நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாகப் பிரித்தனர்?72 பாளையங்கள்
978"மதிரை" என்ற சொல் கல்வெட்டுகளில் காணப்பட்டு காலப்போக்கில் எவ்வாறு மருவியது?மதுரை
979"கோவன்புத்தூர்" என்ற சொல் தற்போது எவ்வாறு வழங்கப்படுகிறது?கோயமுத்தூர் (கோவை)
சுட்டெழுத்து
எண்வினாவிடை
980எந்தச் சுட்டெழுத்து தற்போது வழக்கத்தில் இல்லை?
புலவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
எண்வினாவிடை
981"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே" என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்?மோசிகீரனார்
982மோசிகீரனார் வாழ்ந்த ஊர் எது?தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி
983முரசுக் கட்டிலில் உறங்கிய மோசிகீரனாருக்குக் கவரி வீசிய மன்னன் யார்?சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
984முதுமொழிக்காஞ்சி என்ற நூலை இயற்றியவர் யார்?மதுரைக் கூடலூர்கிழார்
985மதுரைக் கூடலூர்கிழார் எங்குப் பிறந்தார்?கூடலூர்
986முதுமொழிக்காஞ்சி எந்தத் திணையின் துறைகளுள் ஒன்று?காஞ்சித்திணை
987உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் யார்?மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
988மீனாட்சிசுந்தரனார் பிறந்த ஊர் எது?திருச்சி மாவட்டத்திலுள்ள எண்ணெய்க் கிராமம்
989மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்?எண்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்
990மீனாட்சிசுந்தரனாரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள் யாவர்?குலாம்காதர் நாவலர், சவரிராயலு, உ.வே.சாமிநாதர்
991கோவூர்கிழார் எங்குப் பிறந்தார்?உறையூருக்கு அருகிலுள்ள கோவூர்
992நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இருந்த பகையை நீக்கியவர் யார்?கோவூர்கிழார்
993கடையேழு வள்ளல்களுள் ஒருவரான திருமுடிக்காரி எந்தப் பகுதியை ஆண்டார்?மலையமான் நாடு
கணிதமேதை இராமானுஜம்
எண்வினாவிடை
994கணிதமேதை இராமானுஜம் பிறந்த ஆண்டு எது?1887 டிசம்பர் 22
995இராமானுஜத்தின் பெற்றோர் யாவர்?சீனிவாசன், கோமளம்
996எந்த எண்ணிற்கு மதிப்பு உண்டு என்று இராமானுஜம் தன் ஆசிரியரிடம் கூறினார்?சுழியத்திற்கு (0)
997இராமானுஜம் எந்தத் துறைமுகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்?சென்னைத் துறைமுகம்
998இராமானுஜத்தின் கணிதத் திறமையைக் கண்டறிந்த இங்கிலாந்துப் பேராசிரியர் யார்?ஹார்டி
999இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் இராமானுஜத்திற்கு எந்த உயரிய பட்டத்தை வழங்கியது?எஃப்.ஆர்.எஸ் (F.R.S)
1000நடுவண் அரசு 1962-இல் இராமானுஜத்தின் 75-ஆவது பிறந்த நாளன்று எதை வெளியிட்டது?அஞ்சல் தலை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement