TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-63
கணினி மற்றும் இணையம் பற்றிய கேள்விகள்-விடைகள்:
- தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் உருவாக்கப் போட்டியிடும் கணினி எது?
விடை: மீத்திறன் கணினி (Supercomputer) - கணினியின் வகைகள் யாவை?
விடை: பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி - ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்திய ஆண்டு எது?
விடை: 1960 ஆம் ஆண்டு - ஒரு கட்டத்திற்குள் உள்ள கணினிகளை கம்பிச் சுருளுடன் இணைக்கப் பயன்படுத்தப்படும் சிறுபலகை எது?
விடை: ஈதர்நெட் அட்டை (Ethernet Card) - ஈதர்நெட் அட்டை என்னும் இணைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை: குறும்பரப்பு வலைப்பின்னல் (Local Area Network - LAN) - ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைப்பதற்குப் பயன்படும் வலைப்பின்னல் எது?
விடை: அகன்ற பரப்பு வலைப்பின்னல் (Wide Area Network - WAN) - உலகளாவிய வலைப்பின்னல் எனப் பெயரிட்டவர் யார், எந்த ஆண்டு?
விடை: சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த இயற்பியல் வல்லுநர் பிம்பெர்னர் லீ, 1989 ஆம் ஆண்டு. - உலகளாவிய வலைப்பின்னலை வேறு எவ்வாறு அழைக்கிறார்கள்?
விடை: வையக விரிவு வலை (World Wide Web - WWW) - இணையத்தளச் சேவையைப் பயன்படுத்தத் தேவையான பொருள்கள் யாவை?
விடை: கணினி, தொலைபேசி, இணையச்சேவை, மாற்றி (Modem), தொடர்பு மென்பொருள் - தொலைபேசி வழியாகக் கணினியையும் மாற்றியையும் இணைத்துப்பயன்படுத்தும் முறை என்ன சேவை?
விடை: தொலைபேசி இணைப்புச் சேவை (Dial-up Connection) - கணினியைப் பயன்படுத்திக் கற்கும் கல்வி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: கணினி வழிக்கல்வி (Computer-Aided Education) - தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத்தரும் இணையத்தளம் எது?
விடை: தமிழம் - "கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்" எனக் கூறியவர் யார்?
விடை: பில்கேட்ஸ்
- நம் முன்னோர் எந்தச் சொல்லால் வழங்கி வந்தார்களோ அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு என்ன பெயர்?
விடை: வழக்கு - வழக்கு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
விடை: இரண்டு (இயல்பு வழக்கு, தகுதி வழக்கு) - எந்தச் சொல் தனது இயல்பு பொருள் மாறாமல் ஒரே பொருளைச் சுட்டுகிறதோ அதற்கு என்ன பெயர்?
விடை: இயல்பு வழக்கு - இயல்பு வழக்கின் வகைகள் யாவை?
விடை: இலக்கணமுடையது, இலக்கணப் போலி, மரூஉ - தஞ்சாவூர் 'தஞ்சை' எனவும், கோயம்புத்தூர் 'கோவை' எனவும் சிதைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மரூஉ - தகுதி வழக்கின் வகைகள் யாவை?
விடை: இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி - ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு பொருளுக்குக் குறிப்பாக வழங்கும் பெயர் எவ்வாறு கூறப்படும்?
விடை: குழுஉக்குறி - நாயின் இளமைப் பெயர் என்ன?
விடை: நாய்க்குட்டி - குதிரையின் இளமைப் பெயர் என்ன?
விடை: குதிரைக்குட்டி - புலியின் இளமைப் பெயர் என்ன?
விடை: புலிப்பறழ் - யானையின் இளமைப் பெயர் என்ன?
விடை: யானைக்கன்று - ஆந்தை எவ்வாறு ஒலிக்கும்?
விடை: அலறும் - குதிரை எவ்வாறு ஒலிக்கும்?
விடை: கனைக்கும் - சிங்கம் எவ்வாறு ஒலிக்கும்?
விடை: முழங்கும் - மயில் எவ்வாறு ஒலிக்கும்?
விடை: அகவும் - யானை எவ்வாறு ஒலிக்கும்?
விடை: பிளிறும் - தென்னையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: தென்னங்குரும்பை - முருங்கையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: முருங்கைப்பிஞ்சு - மாமரத்தின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: மாவடு - ஆடுகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: ஆட்டு மந்தை - பசுக்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: பசுநிரை
- "சம்புவின் கனி" எனக் குறிக்கப்படுவது எது?
விடை: நாவற்பழம் - விவேகசிந்தாமணி என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
விடை: ஆசிரியர் பெயர் தெரியவில்லை - "பாரதத்தாய்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
விடை: அசலாம்பிகை அம்மையார் - அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது?
விடை: திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை - அசலாம்பிகை அம்மையார் இயற்றிய நூல்கள் யாவை?
விடை: ஆத்திசூடி வெண்பா, திலகர் புராணம், காந்தி புராணம், இராமலிங்க சுவாமிகள் சரிதம் - அசலாம்பிகை அம்மையாரை "இக்கால ஔவையார்" என்று பாராட்டியவர் யார்?
விடை: திரு.வி.க - காந்திபுராணம் எத்தனைப் பாடல்களைக் கொண்டது?
விடை: ஈராயிரத்து முப்பத்து நான்கு (2034)
- வேலுநாச்சியாரின் பெற்றோர் பெயர் என்ன?
விடை: செல்லமுத்து சேதுபதி, சக்கந்தி முத்தாத்தாள் - வேலுநாச்சியாரின் தந்தை எந்த நாட்டை ஆண்ட மன்னர்?
விடை: இராமநாதபுரம் - வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
விடை: கி.பி. 1730 ஆம் ஆண்டு - வேலுநாச்சியாரின் கணவர் யார்?
விடை: சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் - ஆங்கிலேயர் எந்த ஆண்டில் சிவகங்கைச் சீமையின் மீது படையெடுத்தார்?
விடை: 1772 ஆம் ஆண்டு - முத்துவடுகநாதர் யாருடன் போர் செய்து வீரமரணமடைந்தார்?
விடை: ஆங்கிலேயர் - வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்ப்பதைக் குறித்து யாருடன் கலந்து பேசினார்?
விடை: மைசூர் மன்னர் ஐதர் அலி - வேலுநாச்சியாருக்கு உதவ விரும்பிய ஐதர் அலி எத்தனை படைவீரர்களை அவருடன் அனுப்பினார்?
விடை: ஐயாயிரம் (5000) - வேலுநாச்சியார் தன் கணவரைக் கொன்ற ஆங்கிலேயரை வென்று எந்த ஆண்டில் சிவகங்கையை மீட்டார்?
விடை: 1780 ஆம் ஆண்டு
- கடலூர் அஞ்சலையம்மாள் பிறந்த ஆண்டு எது?
விடை: 1890 ஆம் ஆண்டு - அஞ்சலையம்மாள் கலந்து கொண்டு சிறையில் வாடிய போராட்டங்கள் யாவை?
விடை: நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் - அஞ்சலையம்மாளின் மகள் பெயர் என்ன?
விடை: அம்மாக்கண்ணு - காந்தியடிகள் சிறையில் அஞ்சலையம்மாளின் மகளைப் பார்த்து தன்னுடன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று என்ன பெயரிட்டுப் படிக்க வைத்தார்?
விடை: லீலாவதி - அஞ்சலையம்மாள் பர்தா வேடமணிந்து எந்த வண்டியில் காந்தியடிகளை ஏற்றிச் சென்றார்?
விடை: குதிரைவண்டி - அம்புஜத்தம்மாள் வீட்டை விட்டு வெளியேறி யாருடைய பாடலைப் பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்?
விடை: மகாகவி பாரதியார் - காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?
விடை: அம்புஜத்தம்மாள் - அம்புஜத்தம்மாள் நிறுவிய தொண்டு நிறுவனத்தின் பெயர் என்ன?
விடை: சீனிவாச காந்தி நிலையம் - 1964 ஆம் ஆண்டு அம்புஜத்தம்மாள் பெற்ற விருது யாது?
விடை: தாமரைத்திரு (பத்மஸ்ரீ) - அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக எழுதிய அரிய நூல் எது?
விடை: நான் கண்ட பாரதம்
- ஓர் ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் எத்தனை பேர்களுக்கு ஓர் ஆண்டிற்குத் தேவையான உயிர்வளியைக் கொடுக்கின்றன?
விடை: பதினெட்டுப் பேர்களுக்கு (18) - சொற்கள் தொடராகும் போது இரு சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: தொகைநிலைத்தொடர்கள் - தொகைநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?
விடை: ஆறு வகைப்படும் - "பவளவாய் பேசினாள்" என்பது எவ்வகைத் தொடர்?
விடை: அன்மொழித்தொகை - "ஆடுகொடி, பாய்புலி, அலைகடல்" ஆகிய தொடர்கள் எதற்கு எடுத்துக்காட்டுகள்?
விடை: வினைத்தொகை
- "காவடிச்சிந்து" பாடலை இயற்றியவர் யார்?
விடை: அண்ணாமலையார் - அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
விடை: திருநெல்வேலி மாவட்டத்துச் சென்னிகுளம் - அண்ணாமலையாரின் பெற்றோர் யார்?
விடை: சென்னவர், ஓவுஅம்மாள் - காவடிச்சிந்து எந்த ஊரில் உள்ள முருகனின் சிறப்பைப் போற்றிப் பாடப்பட்டது?
விடை: கழுகுமலை - அண்ணாமலையார் இயற்றிய நூல்கள் யாவை?
விடை: காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ் - "விக்கிரம சோழன் உலா" என்ற பாடலை இயற்றியவர் யார்?
விடை: ஒட்டக்கூத்தர் - ஒட்டக்கூத்தரின் சிறப்புப்பெயர் யாது?
விடை: கவிச்சக்கரவர்த்தி - உலா என்பது எத்தனை வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று?
விடை: தொண்ணூற்றாறு (96) - "உலா" என்பதற்குப் பொருள் யாது?
விடை: ஊர்வலம் வருதல் - விக்கிரம சோழன் முதற்குலோத்துங்க சோழனுக்கு எத்தனையாவது மகன் ஆவார்?
விடை: நான்காவது மகன் - விக்கிரம சோழனின் தாய் பெயர் என்ன?
விடை: மதுராந்தகி - மேரு மலையின் உச்சியில் புலிக் கொடி நாட்டி காவிரியின் இருகரைகளையும் உயர்த்திக் கட்டியவர் யார்?
விடை: சோழன் கரிகாலன் - பொய்கையாரின் களவழி நாற்பது பாடலுக்குப் பரிசாகச் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறைவீடு செய்த சோழன் யார்?
விடை: செங்கணான் - பதினெட்டுச் சிற்றூர்களையும் கைப்பற்றி மலைநாடு வென்ற சோழன் யார்?
விடை: முதல் இராசராசன் - வடக்கே படையெடுத்துக் கங்கையும் கிழக்கில் கடாரமும் வென்று கைக்கொண்டு, சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்த சோழன் யார்?
விடை: இராசேந்திரன் - கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்ற சோழன் யார்?
விடை: இராசேந்திரன் - சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்ற சோழன் யார்?
விடை: இராசாதிராசன்
- உலகில் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் சிறிய நிகழ்வும் என்னவாக மாறுகிறது?
விடை: செய்தி - ஆறு வினாக்களுக்கும் உரிய விடைகளும் செய்தியின் எந்தப் பக்கத்தில் இடம் பெற வேண்டும்?
விடை: முகப்புப் பக்கம் - செய்தியைப் பெறுதல் எதைப் போன்றது?
விடை: துப்பறிதல் - ஆறு வினாக்களுக்கும் உரிய விடையைக் காண்பது எதைப் போன்ற அரிய பணி?
விடை: கடலில் மூழ்கி முத்தெடுப்பது - செய்தியாளர்கள் அறிவியல் ஆய்வு முறைகளையும் அவற்றைப் பயன்படுத்துவது என்பதையும் அறிய உதவுவது எது?
விடை: புள்ளியியல் - பொதுமக்களின் கருத்துகளை எதன் வாயிலாக நடத்துவார்கள்?
விடை: கூறெடுப்பு ஆய்வு (Sampling Survey) - ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து இரண்டிற்கும் இடையில் உருபுகள் மறையாமல் நின்று பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: தொகாநிலைத் தொடர் - தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
விடை: ஒன்பது வகைப்படும் - "காற்று வீசியது" என்பது எவ்வகைத் தொடர்?
விடை: எழுவாய்த் தொடர் - "வாழ்க தமிழ்" என்பது எவ்வகைத் தொடர்?
விடை: முற்றுத் தொடர் - "கேட்ட பாடல்" என்பது எவ்வகைத் தொடர்?
விடை: பெயரெச்சத் தொடர் - "பாடி மகிழ்ந்தனர்" என்பது எவ்வகைத் தொடர்?
விடை: வினையெச்சத் தொடர் - "நன்று நன்று நன்று" என்பது எவ்வகைத் தொடர்?
விடை: அடுக்குத் தொடர் - "மற்றொன்று" என்பதில் உள்ள மற்று என்பது எவ்வகைச் சொல்?
விடை: இடைச்சொல் - "சாலப்பேசினான்" என்பது எவ்வகைத் தொடர்?
விடை: உரிச்சொல் தொடர்
- "உமர்கய்யாம் பாடல்கள்" என்ற பாடலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?
விடை: கவிமணி தேசிக விநாயகனார் - கவிமணி தேசிக விநாயகனார் எங்குப் பிறந்தார்?
விடை: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூர் - உமர்கய்யாம் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர்?
விடை: பதினோராம் நூற்றாண்டு


0 Comments