TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-64
நந்திக்கலம்பகம் குறித்த தகவல்கள்:| கேள்வி எண் | கேள்வி | விடை |
|---|
| 1301 | நந்திவர்மனின் பெருமையைப் போற்றும் நூல் | நந்திக்கலம்பகம் |
| 1302 | பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல் | நந்திக்கலம்பகம் |
| 1303 | கலம்பக நூல்களில் முதல் நூல் | நந்திக்கலம்பகம் |
| 1304 | நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட நூற்றாண்டு | கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு |
| 1305 | கலம்பகம் என்பது எவ்வகை இலக்கியம் | தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று |
| 1306 | கலம்பகம் என்பதனைப் பிரிக்கும் முறை | கலம் + பகம் |
| 1307 | கலம் மற்றும் பகம் என்பனவற்றின் பொருள் | கலம் - பன்னிரண்டு, பகம் - ஆறு (மொத்தம் 18 உறுப்புகள்) |
| 1308 | கலம்பகம் எத்தனை உறுப்புகளைக் கொண்டது | பதினெட்டு உறுப்புகள் |
குலசேகர ஆழ்வார் குறித்த தகவல்கள்:| கேள்வி எண் | கேள்வி | விடை |
|---|
| 1309 | நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழியைப் பாடியவர் | குலசேகர ஆழ்வார் |
| 1310 | குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் | கேரள மாநிலத்தில் உள்ள திருவஞ்சைக்களம் |
| 1311 | குலசேகர ஆழ்வார் பக்தி மிகுதியாகக் கொண்டிருந்த கடவுள் | இராமபிரான் |
| 1312 | குலசேகர ஆழ்வார் எவ்வாறு அழைக்கப்பட்டார் | குலசேகரப் பெருமாள் |
| 1313 | குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி இடம்பெற்றுள்ளது | நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதலாயிரத்தில் |
| 1314 | பெருமாள் திருமொழியில் உள்ள பாசுரங்கள் | 105 பாசுரங்கள் |
| 1315 | குலசேகர ஆழ்வார் வடமொழியில் இயற்றிய நூல் | முகுந்தமாலை |
| 1316 | திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியவர் | குலசேகர ஆழ்வார் |
| 1317 | திருவரங்கத்தின் மூன்றாவது வீதியின் பெயர் | குலசேகரன் வீதி |
| 1318 | குலசேகர ஆழ்வாரின் காலம் | கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு |
| 1319 | திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு போற்றும் சமயம் | வைணவம் |
| 1320 | பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு | நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் |
மற்ற இலக்கியத் தகவல்கள்:| கேள்வி எண் | கேள்வி | விடை |
|---|
| 1321 | தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என அறிஞர்கள் போற்றும் நூற்றாண்டு | பத்தொன்பதாம் நூற்றாண்டு |
| 1322 | "அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்" எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் | மணிமேகலை |
| 1329 | பாண்டியன் பரிசைப் பாடியவர் | பாரதிதாசன் |
| 1330 | தமிழ்நாட்டின் தாகூர் எனப் புகழப்படுபவர் | வாணிதாசன் |
சுரதா குறித்த தகவல்கள்:| கேள்வி எண் | கேள்வி | விடை |
|---|
| 1323 | "பழந்தமிழ் கற்றல் இன்பம்" என்ற பாடலின் ஆசிரியர் | சுரதா |
| 1324 | சுரதாவின் இயற்பெயர் | இராசகோபாலன் |
| 1325 | இராசகோபாலன் தன் பெயரை மாற்றிக்கொண்டமைக்குக் காரணம் | பாரதிதாசன் (சுப்புரத்தினம்) கவிதைகள் மீது கொண்ட பற்று |
| 1326 | சுரதா என்பதன் விரிவாக்கம் | சுப்புரத்தினதாசன் |
| 1327 | சுரதா சிறப்பிக்கப்படும் பெயர் | உவமைக் கவிஞர் |
| 1328 | சுரதா இயற்றிய நூல்கள் சில | தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும் |
| 1331 | "பழந்தமிழ் கற்றல் இன்பம்" என்ற பாடல் எடுக்கப்பட்ட நூல் | சுரதா கவிதைகள் |
சொல் மற்றும் இலக்கணத் தகவல்கள்:| கேள்வி எண் | கேள்வி | விடை |
|---|
| 1332 | "கயவர்" என்பதன் பொருள் | கீழ்க்குணமுடையோர் |
| 1333 | "இசை பட" என்பதன் பொருள் | புகழுடன் |
| 1334 | புணர்ச்சி என்றால் என்ன | நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவது |
| 1335 | அணி என்றால் என்ன | அழகு |
மோனை மற்றும் தொடை வகைகள்:| கேள்வி எண் | கேள்வி | விடை |
|---|
| 1336 | அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது | அடிமோனைத் தொடை |
| 1337 | அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது | அடியெதுகைத் தொடை |
| 1338 | அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது | அடிஇயைபுத் தொடை |
| 1339 | அடிதோறும் முதற்சீர் முரண்படத் தொடுப்பது | அடிமுரண் தொடை |
| 1340 | அடிதோறும் முதல் சீர் அளபெடுத்து வருவது | அடியளபெடைத் தொடை |
| 1341 | நாலடி கொண்ட சீருள் முதலிரு சீர்களில் முதலெழுத்து ஒன்றி வரத்தொடுப்பது | இணைமோனை |
| 1342 | ஓர் அடியுள் முதற்சீரிலும், மூன்றாம் சீரிலும் முதலெழுத்து ஒத்து வருவது | பொழிப்பு மோனை |
| 1343 | ஓர் அடியுள் முதற் சீரிலும், நான்காம் சீரிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது | ஒரூஉ மோனை |
| 1344 | ஓர் அடியுள் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வருவது | கூழை மோனை |
| 1345 | ஓர் அடியுள் முதல், மூன்று, நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது | மேற்கதுவாய் மோனை |
இளமைப் பெயர்கள்:| கேள்வி எண் | விலங்கு/பறவை | இளமைப் பெயர் |
|---|
| 1346 | அணில் | அணிற்பிள்ளை |
| 1347 | கீரி | கீரிப்பிள்ளை |
| 1348 | சிங்கம் | சிங்கக்குருளை |
| 1349 | பன்றி | பன்றிக்குட்டி |
| 1350 | எருமை | எருமைக்கன்று |
| 1351 | குரங்கு | குரங்குக்குட்டி |
| 1352 | மான் | மான்கன்று |
வாழிடப் பெயர்கள்:| கேள்வி எண் | விலங்கு | வாழிடம் |
|---|
| 1353 | ஆடு | ஆட்டுப்பட்டி |
| 1354 | குதிரை | குதிரைக்கொட்டில் |
| 1355 | மாடு | மாட்டுத்தொழுவம் |
| 1356 | யானை | யானைக்கூடம் |
| 1357 | கோழி | கோழிப்பண்ணை |
ஒலி மரபுச் சொற்கள்:| கேள்வி எண் | விலங்கு/பறவை | ஒலிக்கும் முறை |
|---|
| 1358 | கழுதை | கத்தும் |
| 1359 | காக்கை | கரையும் |
| 1360 | கிளி | கொஞ்சும் |
| 1361 | நரி | ஊளையிடும் |
| 1362 | குயில் | கூவும் |
| 1363 | கோழி | கொக்கரிக்கும் |
தாவரங்களின் உறுப்புப் பெயர்கள் (இலை/தண்டு):| கேள்வி எண் | தாவரம் | இலை/தண்டுப் பெயர் |
|---|
| 1364 | ஈச்ச மரம் | ஈச்ச ஓலை |
| 1365 | சோளம் | சோளத்தட்டை |
| 1366 | பனை | பனையோலை |
| 1367 | தாழை | தாழை மடல் |
| 1368 | கமுகு (பாக்கு) | கமுகங்கூந்தல் |
| 1369 | நெல் | நெற்றாள் |
இளநிலை காய்கறிப் பெயர்கள்:| கேள்வி எண் | காய்கறி | இளநிலைப் பெயர் |
|---|
| 1370 | அவரை | அவரைப்பிஞ்சு |
| 1371 | வாழை | வாழைக்கச்சல் |
| 1372 | வெள்ளரி | வெள்ளரிப்பிஞ்சு |
தாவரத் தொகுப்பின் பெயர்கள் (காடு/தோட்டம்):| கேள்வி எண் | தாவரம் | தொகுப்பின் பெயர் |
|---|
| 1373 | ஆல மரம் | ஆலங்காடு |
| 1374 | பனை மரம் | பனந்தோப்பு |
| 1375 | தேயிலைச் செடி | தேயிலைத்தோட்டம் |
| 1376 | வேல மரம் | வேலங்காடு |
தொகுப்புப் பெயர்கள்:| கேள்வி எண் | பொருள்/விலங்கு | தொகுப்பின் பெயர் |
|---|
| 1377 | திராட்சை | திராட்சைக்குலை |
| 1378 | வைக்கோல் | வைக்கோற்போர் |
| 1379 | யானைகள் | யானைக்கூட்டம் |
வினை மரபுச் சொற்கள்:| கேள்வி எண் | பொருள் | வினை மரபுச் சொல் |
|---|
| 1380 | தயிர் | தயிர் கடை |
| 1381 | கூரை | கூரை வேய் |
| 1382 | விளக்கு | விளக்கை ஏற்று |
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்:| கேள்வி எண் | பிறமொழிச் சொல் | பிறமொழி | தமிழ்ச் சொல் |
|---|
| 1383 | அகங்காரம் | சமஸ்கிருதம் | செருக்கு |
| 1384 | அதிர்ஷ்டம் | - | நற்பேறு |
| 1385 | அபூர்வம் | - | புதுமை |
| 1386 | ஆராதனை | - | வழிபாடு |
| 1387 | சபதம் | - | சூளுரை |
| 1388 | பஞ்சாயத்து | உருது | ஐம்பேராயம் |
| 1389 | கச்சேரி | உருது | அரங்கம் |
| 1390 | குமாஸ்தா | - | எழுத்தர் |
| 1391 | கைது | - | தளை |
| 1392 | அலமாரி | போர்த்துக்கீசியம் | நெடும்பேழை |
| 1393 | கிராம்பு | - | இலவங்கம் |
| 1394 | சன்னல் | - | பலகணி |
| 1395 | தகவல் | அரபி | செய்தி |
| 1396 | பாக்கி | - | நிலுவை |
| 1397 | காகிதம் | மராத்தி | தாள் |
| 1398 | அட்டவணை | - | பொருட்குறிப்புப்பட்டியல் |
| 1399 | ஜமீன் | பாரசீகம் | நிலபுலம் |
| 1400 | பஜார் | - | கடைத்தெரு |
0 Comments