6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-76


TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-76
வல்லினம் மிகும் இடங்கள்
எண்வினாவிடைஎடுத்துக்காட்டு
2501'அ', 'இ' என்னும் சுட்டெழுத்துகளின் பின் வல்லினம் மிகுமா, மிகாதா?மிகும்-
2502'எ' என்னும் வினா எழுத்தின் பின் வல்லினம் மிகுமா?மிகும்-
2503அந்த, இந்த, எந்த ஆகிய சுட்டு வினாச் சொற்களை அடுத்து வல்லினம் மிகுமா?மிகும்-
2504'ஓரெழுத்து ஒரு மொழி'யின் பின் வல்லினம் மிகுமா?மிகும்பூக்கூடை
2505உவமைத் தொகையில் வல்லினம் மிகுமா?மிகும்மலர்க்கண்
வல்லினம் மிகாத இடங்கள்
எண்வினாவிடைஎடுத்துக்காட்டு
2506அது, இது, எது, அவை, இவை போன்ற சொற்களின் பின் வல்லினம் மிகுமா?மிகாது-
2507வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகுமா?மிகாதுவாழ்க தமிழ்
2508எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகுமா?மிகாதுமலர் பூத்தது
2509இரட்டைக்கிளவி மற்றும் அடுக்குத் தொடர்களில் வல்லினம் மிகுமா?மிகாது-
2510எட்டு, பத்து ஆகிய எண்களைத் தவிர பிற எண்களுக்குப் பின் வல்லினம் மிகுமா?மிகாது-
ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள்
எண்ஆங்கிலப் பழமொழிதமிழ்ப் பழமொழி
2511"Practice makes perfect"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
2512"Misfortune never comes single"பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்
2513"Look no gift horse in the mouth"தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்கலாமா?
2514"One doth the act, another hath the blow"பழி ஓரிடம் பாவம் ஓரிடம்
2515"Every fox must at last pay his skin to the flayer"பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
2516"The day has eyes, the night has ears"பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே
2517"Bend the tree while it is young"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
2518"A friend in need is a friend indeed"ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் (உயிர்காப்பான் தோழன்)
2519"Blood is thicker than water"தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
2520"Union is strength"ஒற்றுமையே வலிமை
2521"Might is right"வல்லான் வகுத்ததே வாய்க்கால்
2522"Many things fall between the cup and the lip"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
பரிதிமாற்கலைஞர் குறித்த செய்திகள்
எண்வினாவிடை
2523பரிதிமாற்கலைஞரின் தந்தையார் பெயர் என்ன?கோவிந்தசிவனார்
2524பரிதிமாற்கலைஞரின் தாயார் பெயர் என்ன?இலட்சுமி அம்மாள்
2525பரிதிமாற்கலைஞர் பிறந்த ஆண்டு எது?1870 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 6 ஆம் நாள்
2526பரிதிமாற்கலைஞர் எந்தக் கல்லூரியில் பி.ஏ. (B.A) பயின்றார்?சென்னைக் கிறித்தவக் கல்லூரியில்
2527பரிதிமாற்கலைஞர் தனது எத்தனையாவது அகவையில் இயற்கை எய்தினார்?33 ஆம் அகவையில் (1903 இல்)
ஜி.யு.போப் குறித்த செய்திகள்
எண்வினாவிடை
2528ஜி.யு.போப்பின் பெற்றோர் யாவர்?ஜான் போப், கெதரின் யுளாப்
2529ஜி.யு.போப் தமிழ், ஆங்கில இலக்கியங்களோடு வேறு எம்மொழிகளையும் கற்பித்தார்?கிரேக்கம், இலத்தீன், எபிரேயம்
2530ஜி.யு.போப் சமயக்கல்லூரியில் என்னென்ன பாடங்களைக் கற்பித்தார்?கணிதம், அறிவாய்வு (தருக்கம்), மெய்யறிவு (தத்துவம்)
2531ஜி.யு.போப் எந்த ஏடுகளில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்?இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு
2532ஜி.யு.போப் எந்த நூலின் திணை விளக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்?புறப்பொருள் வெண்பாமாலை
2533நீதிநூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்து ஜி.யு.போப் தொகுத்த நூல் எது?தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
2534ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்?1900-ஆம் ஆண்டு
2535ஜி.யு.போப் மறைந்த ஆண்டு மற்றும் நாள் என்ன?1908 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 11 ஆம் நாள்
எச்.ஏ. கிருட்டினனார் குறித்த செய்திகள்
எண்வினாவிடை
2536'கிறித்துவக் கம்பர்' என்று அழைக்கப்படும் எச்.ஏ கிருட்டினனாரின் பெற்றோர் யாவர்?சங்கர நாராயணர், தெய்வ நாயகி அம்மாள்
2537எச்.ஏ கிருட்டினனார் யாரிடம் இலக்கணங்களைக் கற்றார்?மாணிக்க வாசகத்தேவரிடம்
2538எச்.ஏ கிருட்டினனார் எந்தப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்?சாயர்புரம் பள்ளியில்
2539'இரட்சணிய சமய நிர்ணயம்', 'இரட்சணிய மனோகரம்' ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?எச்.ஏ. கிருட்டினனார்
2540ஜான் பன்யன் இயற்றிய எந்த நூலைத் தழுவி இரட்சணிய யாத்திரிகம் இயற்றப்பட்டது?பில்கிரிம்ஸ் புரோகிரஸ்
உமறுப்புலவர் குறித்த செய்திகள்
எண்வினாவிடை
2541உமறுப்புலவர் யாருடைய வேண்டுகோளின்படி சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்?வள்ளல் சீதக்காதி
2542சீதக்காதி மறைவுக்குப் பின் உமறுப்புலவருக்கு உதவிய வள்ளல் யார்?அபுல்காசிம்
2543உமறுப்புலவர் இயற்றிய மற்றொரு நூல் எது?முதுமொழி மாலை
2544'சீறா' மற்றும் 'புராணம்' ஆகிய சொற்களின் பொருள் யாது?சீறா - வாழ்க்கை, புராணம் - வரலாறு
2545சீறாப்புராணம் எத்தனை விருத்தப் பாக்களால் ஆனது?5027
பிற செய்திகள்
எண்வினாவிடை
2546திருவருட்பிரகாச வள்ளலார் தமது பெற்றோர்க்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார்?ஐந்தாவது மகனாக
சொற்களின் வகைகள்
எண்வகைவினாவிடைஎடுத்துக்காட்டு
2547இயற்சொல்எல்லாருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் எது?இயற்சொல்-
2548திரிசொல்கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் இருக்கும் சொல் எது?திரிசொல்-
2549பெயர்த் திரிசொல்'களிறு', 'புரவி' என்பன எவ்வகைச் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகள்?பெயர்த் திரிசொல்-
2550வினைத் திரிசொல்'வினவினான்', 'நோக்கினான்' என்பன எவ்வகைச் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகள்?வினைத் திரிசொல்-
திசைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்
எண்திசைச்சொல்தமிழ்ச் சொல்
2551பண்டிகைதிருவிழா
2552வியாபாரம்வணிகம்
2553ஜமக்காளம்விரிப்பு
2554வேடிக்கைகாட்சி
வடசொல்
எண்வினாவிடைஎடுத்துக்காட்டு
2555வடமொழிச் சொற்கள் திரிந்தும் திரியாமலும் தமிழில் வந்து வழங்குவது எவ்வாறு அழைக்கப்படும்?வடசொல்-
2556'கமலம்', 'விஷம்' என்பன எவ்வகைச் சொற்கள்?வடசொற்கள்-
கூற்றுத் தொடர்கள்
எண்வினாவிடை
2557வேல்விழி நன்றாகப் படி என்று ஆசிரியர் கூறினார் - இது எவ்வகைத் தொடர்?நேர்கூற்றுத் தொடர்
2558'நான்', 'நாங்கள்' என்னும் தன்மைப்புெயர்கள் அயற்கூற்றில் எவ்வாறு மாறும்?தான், தாம் (தாங்கள்) என மாறும்
2559'இது', 'இவை' என்னும் சுட்டுப்பெயர்கள் அயற்கூற்றில் எவ்வாறு மாறும்?அது, அவை என மாறும்
2560நேர்கூற்றில் வரும் 'இன்று', 'நேற்று', 'நாளை' என்பன அயற்கூற்றில் எவ்வாறு மாறும்?அன்று, முன்னாள், மறுநாள் என மாறும்
நிறுத்தக்குறியீடுகள்
எண்வினாவிடைகுறியீடு
2561ஓர் எழுத்து அல்லது சொற்றொடரைத் தனியே குறிக்கும் இடத்திலும், நூலின் பெயரைக் குறிக்கும் இடத்திலும் எக்குறியிட வேண்டும்?ஒற்றை மேற்கோள் குறி(' ')
2562ஒருவர் கூறியதை நேர்க்கூற்றாகக் கூறும் போது எக்குறியிட வேண்டும்?இரட்டை மேற்கோள் குறி(" ")
புத்தர் குறித்த செய்தி
எண்வினாவிடை
2563உயிர்களைப் பலியிட வேண்டாம் என்று மன்னர் பிம்பிசாரர்க்கு அறிவுரை கூறியவர் யார்?புத்தர்
நன்னூல் நூற்பாக்கள்
எண்நூற்பாநூல்
2564"ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே" என்னும் நூற்பா இடம்பெற்றுள்ள நூல் எது?நன்னூல்
2582"உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" - இவ்வரி எந்நூலில் வந்துள்ளது?நன்னூல்
2583"தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்" - இந்த வரி எந்நூலில் வந்துள்ளது?நன்னூல்
2574"ஆவி இடைமை இடமிடறு ஆகும்" - இது எந்நூலின் நூற்பா?நன்னூல்
மாத்திரை (ஒலிக்கும் கால அளவு)
எண்எழுத்துமாத்திரை அளவு
2565குறில் எழுத்துஒரு மாத்திரை
2566நெடில் எழுத்துஇரண்டு மாத்திரை
2567மெய்யெழுத்தும் ஆய்த எழுத்தும்அரை மாத்திரை
2568உயிரளபெடைமூன்று மாத்திரை
2569ஒற்றளபெடைஒரு மாத்திரை
அளபெடைகள்
எண்வகைஎடுத்துக்காட்டுகள்
2570செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை)'உழாஅர்', 'படாஅர்'
2571இன்னிசை அளபெடை'கெடுப்பதூஉம்', 'எடுப்பதூஉம்'
2572சொல்லிசை அளபெடை'நசைஇ', 'நிறீஇ'
எழுத்துகளின் பிறப்பு
எண்வினாவிடை
2573எழுத்துகளின் பிறப்பு எத்தனை வகைப்படும்?இருவகைப்படும் (இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு)
2575இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் மெய்யெழுத்துகள் எவை?ப், ம்
அயல்மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்
எண்ஆங்கிலச் சொல்தமிழ்ச் சொல்
2576'சுவிட்ச்' (Switch)மின்பொத்தான்
2577'வாஷிங்மெஷின்' (Washing machine)சலவை இயந்திரம்
2578'கூல்ட்ரிங்ஸ்' (Cool drinks)குளிர்பானம்
2579'கிரைண்டர்' (Grinder)மின் அரைவை
2580'பிரிஜ்' (Fridge)குளிர்சாதனப் பெட்டி
புணர்ச்சி விதிகள்
எண்வினாவிடை
2581புணர்ச்சியில் நிலைமொழி ஈற்று உயிரும் வருமொழி முதல் உயிரும் இணையும் போது 'வ்' அல்லது 'ய்' தோன்றுவது எவ்வாறு அழைக்கப்படும்?உடம்படுமெய்
கவிமணி தேசிக விநாயகனார் குறித்த செய்திகள்
எண்வினாவிடை
2584கவிமணி தேசிக விநாயகனார் இயற்றிய 'ஆசிய ஜோதி' எந்நூலின் தழுவல்?எட்வின் அர்னால்டின் 'லைட் ஆஃப் ஏசியா' (Light of Asia)
2585'மலரும் மாலையும்', 'மருமக்கள்வழி மான்மியம்' ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?கவிமணி தேசிக விநாயகனார்
2586தேசிக விநாயகனாருக்கு 'கவிமணி' என்னும் பட்டத்தை வழங்கிய அமைப்பு எது?சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்
2587நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் எவ்வகை நூல்?நகைச்சுவை நூல்
2588உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?கவிமணி தேசிக விநாயகனார்
2594"அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம்" என்று பாடியவர் யார்?கவிமணி தேசிக விநாயகனார்
உமர்கய்யாம் குறித்த செய்திகள்
எண்வினாவிடை
2589உமர்கய்யாம் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர்?பதினோராம் நூற்றாண்டு
2590உமர்கய்யாமின் முழுப்பெயர் என்ன?கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம்
2591உமர்கய்யாம் எத்துறைகளில் புலமை மிக்கவர்?கணிதம், வானவியல்
2592உமர்கய்யாம் எழுதிய செய்யுள்களின் மொழிபெயர்ப்பான 'ரூபாயத்' என்பதன் பொருள் என்ன?நான்கடிச் செய்யுள் (வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குபவை)
2593உமர்கய்யாம் பாடல்கள் தமிழில் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?115 பாடல்கள்
திருவிளையாடற் புராணம் குறித்த செய்திகள் (பரஞ்சோதி முனிவர்)
எண்வினாவிடை
2595திருவிளையாடற் புராணத்தை இயற்றிய பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது?திருமறைக்காடு (வேதாரண்யம்)
2596பரஞ்சோதி முனிவர் இயற்றிய பிற நூல்கள் யாவை?திருவிளையாடற் போற்றிக்கலி வெண்பா, மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி
2597திருவிளையாடற் புராணத்தின் மதுரைக்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது?பதினெட்டுப் படலம் (18)
2598திருவிளையாடற் புராணத்தின் கூடற்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது?முப்பது படலம் (30)
2599திருவிளையாடற் புராணத்தின் திருவாலவாய்க் காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது?பதினாறு படலம் (16)
2600திருவிளையாடற் புராணம் மொத்தம் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது?64 படலங்கள்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement