TNPSC TRB TET இந்தியா சுதந்திரம் பெற்றது வரை 100 வினா-விடை | History Part-21


TNPSC TRB TET இந்தியா சுதந்திரம் பெற்றது வரை 100 வினா-விடை | History Part-21
ஐரோப்பியரின் வருகை
எண்கேள்விவிடை
1இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையேயான நிலவழி எப்போது, யாரால் மூடப்பட்டது?கி.பி. 1453-ல் துருக்கியர்களால்.
2துருக்கியர்கள் வட ஆப்பிரிக்காவைத் தவிர்த்து நுழைந்த மற்றொரு தீபகற்பம் எது?பால்கன் தீபகற்பம்.
3பார்த்தலோமியா டயஸின் பயணத்திற்கு ஆதரவு அளித்த போர்ச்சுக்கீசிய மன்னர் யார்?மன்னர் இரண்டாம் ஜான்.
4வாஸ்கோடகாமா தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்தப் பகுதி வழியாகத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்?மொசாம்பிக் பகுதி.
5வாஸ்கோடகாமா எந்த நாட்டைச் சேர்ந்த மாலுமியின் உதவியோடு கள்ளிக்கோட்டையை அடைந்தார்?இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு.
6பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் எத்தனை கப்பல்களுடன் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்?13 கப்பல்களில்.
7வாஸ்கோடகாமா 1501-ல் 20 கப்பல்களுடன் வந்தபொழுது தனது வர்த்தக மையத்தை எங்கு நிறுவினார்?கண்ணனுாரில்.
8போர்ச்சுக்கீசியரின் எந்த நடவடிக்கையால் கோபம் கொண்ட மன்னர் சாமரின் அவர்களைத் தாக்கினார்?கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளில் வர்த்தக மையத்தை நிறுவியதால்.
9வாஸ்கோடகாமா எந்த ஆண்டு மூன்றாவது முறையாக இந்தியா வந்தபொழுது நோய்வாய்ப்பட்டார்?1524-ல்.
10பிரான்சிஸ்கோ அல்மெய்டா இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆளுநராக அனுப்பப்பட்ட ஆண்டு எது?1505.
11போர்ச்சுக்கீசிய கப்பற்படையைப் பலப்படுத்துவதற்காக அல்மெய்டா பின்பற்றிய கொள்கை என்ன?நீலநீர்க்கொள்கை.
12பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை அல்புகர்க் கைப்பற்றிய மாதம் மற்றும் ஆண்டு என்ன?நவம்பர் 1510.
13நினோ-டி-குன்கா தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றிய ஆண்டு எது?1530-ல்.
14குஜராத்தின் பகதுார்ஷாவிடமிருந்து போர்ச்சுக்கீசியர் கைப்பற்றிய பகுதி எது?பசீன் பகுதி.
15"இந்திய மருத்துவ தாவரங்கள்" என்ற நுால் கோவாவில் அச்சிடப்பட்ட ஆண்டு எது?1563.
16டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த போதை தரும் பொருள் எது?அபினி.
17போர்ச்சுக்கீசியர்கள் 1502 முதல் எந்தப் பகுதியின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர்?பழவேற்காட்டின் மீது.
18பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் கெல்டிரியா கோட்டையை கட்டிய ஆண்டு எது?1613-ல்.
19ஆங்கிலேயர் வர்த்தகம் செய்ய அனுமதி பட்டயம் வழங்கிய இங்கிலாந்து இராணி யார்?எலிசபெத்.
20ஆங்கிலேயர்கள் 1611-ல் அமைத்த முதல் வணிக மையம் எந்தக் கடற்கரையில் அமைந்திருந்தது?வங்காள விரிகுடா கடற்கரையில்.
21ஆங்கிலேயரின் வணிக மையமான மசூலிப்பட்டினம் எந்த அரசின் முக்கிய துறைமுகம்?கோல்கொண்டா அரசின்.
22ஆங்கில வணிகர் பிரான்சிஸ் டே யாரிடமிருந்து மெட்ராசைக் குத்தகைக்குப் பெற்றார்?சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து.
23ஜாப் சார்னாக் சுதாநுதி என்ற இடத்தில் வர்த்தகமையத்தை நிறுவிய ஆண்டு எது?1690-ஆம் ஆண்டு.
24கிழக்கிந்திய கம்பெனி 1698-ல் ஜமீன்தாரி உரிமையைப் பெற்ற மூன்று கிராமங்கள் யாவை?சுதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர்.
25டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் டென்மார்க் அரசரால் எந்த நாள் உருவாக்கப்பட்டது?1616 மார்ச் 17-ல்.
26தரங்கம்பாடியைத் தவிர்த்து டேனியர்கள் 1676-ல் குடியேற்றத்தை நிறுவிய இடம் எது?செராம்பூரில் (வங்காளம்).
27இந்தியாவிற்கு வியாபாரத்திற்காக வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி நாடு எது?பிரான்சு.
28பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் 1669-ல் நிறுவியவர் யார்?மார்காரா.
29பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே எப்போது நியமிக்கப்பட்டார்?1742-ல்.
நிலவருவாய் திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் புரட்சிகள்
எண்கேள்விவிடை
30ஆங்கில ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையான நில வருவாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?காரன்வாலிஸ் பிரபு.
31ஆங்கில ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட இரயத்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?தாமஸ் மன்றோ.
32ஆங்கில ஆட்சியின் கீழ் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்திய ஆளுநர் யார்?வில்லியம் பெண்டிங் பிரபு.
33சந்தால் கலகம் நடைபெற்ற காலகட்டம் எது?1855-1956.
34இண்டிகோ கலகம் (அவுரி புரட்சி) நடைபெற்ற காலகட்டம் எது?1859-1960.
35தக்காண கலகம் எந்த ஆண்டு வெடித்தது?1875.
வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை மற்றும் போர்கள்
எண்கேள்விவிடை
36வாஸ்கோடகாமா எந்த கண்டத்திலிருந்து புதிய கடல்வழியைக் கண்டுபிடித்தார்?ஐரோப்பாவிலிருந்து.
37பிளாசிப்போர் 1757-ஆம் ஆண்டு எந்த மாதம் மற்றும் தேதியில் நடைபெற்றது?ஜூன்-23.
38பிளாசிப்போரில் சிராஜ்-உத்-தௌலாவுக்கு உதவிய ஐரோப்பிய படை எது?பிரெஞ்ச் கூட்டணி.
39பக்சார் போர் 1764-ஆம் ஆண்டு எந்த மாதம் மற்றும் தேதியில் நடைபெற்றது?அக்டோபர் 22.
40பக்சார் போரை முடிவுக்கு கொண்டுவந்த அலகாபாத் உடன்படிக்கை எந்த நாள் நடந்தது?1765 பிப்ரவரி 20-ல்.
41இராபர்ட் கிளைவ் யார் யாருடன் தனித்தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டார்?அயோத்தி நவாப் சுஜா-உத்-தௌலா உடனும், முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா-ஆலத்துடனும்.
42வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வந்த ஆங்கிலேயர் யார்?இராபர்ட் கிளைவ்.
43கர்நாடகப் போர்கள் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை நடைபெற்றன?1746 முதல் 1763 வரை.
44முதல் கர்நாடகப் போர் எதன் காரணமாக ஏற்பட்டது?ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரால்.
45மூன்றாம் கர்நாடகப் போர் எதன் காரணமாக உருவானது?ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டுப் போரால்.
46முதல் கர்நாடகப் போரை முடித்து வைத்த உடன்படிக்கை எது?அய்-லா-சப்பேல் உடன்படிக்கை.
47அடையாறு போர் நடைபெற்ற இடமான சாந்தோம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?சென்னையின் அடையாறு நதிக்கரையில்.
48இந்தியப் படையை ஐரோப்பிய படை வெற்றி பெற்றுத் தங்கள் மேலாண்மையை நிலைநாட்டிய முதல் நிகழ்வு எது?அடையாறு போர்.
49ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு மற்றும் நாள் என்ன?1749 ஆகஸ்ட் 3.
50ஆம்பூர் போரில் கர்நாடக நவாப் அன்வர்தீன் யாரால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்?பிரெஞ்ச் டியூப்ளே, சந்தா சாகிப், முசாபர் ஜங் ஆகியோரின் கூட்டுப் படைகளால்.
51ஆற்காட்டுப் போரில் பிரெஞ்ச் படை தோல்வியுற்றதால் பிரான்ஸ் அரசாங்கம் யாரைப் பாரிசுக்குத் திரும்ப அழைத்தது?டியூப்ளேவை.
52வந்தவாசிப் போரில் ஜெனரல் அயர் கூட் யாரின் தலைமையிலான பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்தார்?லாலி தலைமையிலான.
53முதல் ஆங்கிலேய மைசூர் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மதராஸ் உடன்படிக்கை எந்த நாள் கையெழுத்தானது?1769 ஏப்ரல் 4-ல்.
54இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரில் ஆங்கிலேயருக்கு எதிராக உருவான முக்கூட்டணியில் இருந்தவர்கள் யார்?ஹைதர் அலி, ஹைதாரபாத் நிஜாம், மராத்தியர்கள்.
55இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரை முடித்த மங்களூர் உடன்படிக்கை எந்த நாள் கையெழுத்தானது?1784 மார்ச் 7-இல்.
56நான்காம் ஆங்கிலேய மைசூர் போரில் ஆங்கிலேயரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது எது?திப்பு சுல்தானின் மரணம்.
57முதல் ஆங்கிலேய மராத்திய போர் எந்தெந்த ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்றது?1775-1782.
58மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போர் எந்தெந்த ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்றது?1817-1818.
இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு
எண்கேள்விவிடை
59ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு இயங்கிய நான்கு முதன்மை நிறுவனங்கள் யாவை?குடிமைப்பணிகள், இராணுவம், காவல் மற்றும் நீதித்துறை.
60'சிவில் சர்வீஸ்' என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்திய நிறுவனம் எது?ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி.
61குடிமைப் பணியின் முதன்மைப் பணிகளாக இருந்தவை யாவை?சட்டங்களை முறையாக செயல்படுத்துதல், வரி வசூலித்தல்.
62காரன்வாலிஸ் தனியார் வணிகத்திற்கு எதிராகச் சட்டங்களை இயற்றிய ஆண்டு என்ன?1786-இல்.
63வெல்லெஸ்லி பிரபு அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கக் கல்லூரியை எங்கு நிறுவினார்?கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில்.
64ஹெய்லிபரியில் இருந்த கிழக்கிந்திய கல்லூரி இங்கிலாந்தில் நிறுவப்பட்ட ஆண்டு என்ன?1806-இல்.
65போட்டித்தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய சட்டம் எது?1833-ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
66திறந்த முறையிலான போட்டித்தேர்வு முறையில் கம்பெனி ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பது எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?1853-ஆம் ஆண்டு.
67ஐ.சி.எஸ் தேர்வு எழுத அதிகபட்ச வயது 22 ஆக எந்த ஆண்டு குறைக்கப்பட்டது?1860-ஆம் ஆண்டு.
68ஐ.சி.எஸ் தேர்விற்கான அதிகபட்ச வயது வரம்பு 1876-இல் எவ்வளவாகக் குறைக்கப்பட்டது?19 ஆக.
69இந்திய ஆட்சிப் பணி சட்டத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றம் எந்த ஆண்டு இயற்றியது?1861-ஆம் ஆண்டு.
70ஐ.சி.எஸ் தேர்வில் 1863-இல் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் யார்?சத்தியேந்திரநாத் தாகூர்.
711892-இல் ஐ.சி.எஸ் தேர்விற்கான வயதுவரம்பு 21-லிருந்து எவ்வளவாக உயர்த்தப்பட்டது?23 ஆக.
721912-ல் அமைக்கப்பட்ட ராயல் கமிஷனில் இடம்பெற்றிருந்த ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை எவ்வளவு?நான்கு ஆங்கிலேயர்கள்.
73இந்திய ஆட்சிப்பணியில் 33% இந்தியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என 1918-ல் பரிந்துரைத்தவர்கள் யார்?மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு.
74லீ பிரபு தலைமையிலான அரச ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?1923-இல்.
75இந்திய ஆட்சிப்பணி, காவல்பணி, காடுகள் பணி ஆகியவை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என லீ பிரபு குழு பரிந்துரைத்தது?இந்தியாவுக்கான அரசு செயலரின் கட்டுப்பாட்டில்.
761935 இந்திய அரசுச் சட்டம் எதனை உருவாக்க வழிவகை செய்தது?கூட்டாட்சி மற்றும் மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் உருவாக.
77ஜமீன்தார்களை காவல் பணிகளிலிருந்து விடுவித்த ஆங்கிலேய ஆளுநர் யார்?காரன்வாலிஸ்.
78மாவட்ட கண்காணிப்பாளர் பதவி எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது?1808-இல்.
79கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் எந்த சட்டத்தின்படி அமைக்கப்பட்டது?1773-ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் படி.
80ஜூரி முறையை வங்காளத்தில் 1832-ல் கொண்டு வந்தவர் யார்?வில்லியம் பெண்டிங் பிரபு.
81வங்காளத்தில் வில்லியம் கோட்டையில் நியமிக்கப்பட்ட முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி யார்?சர் எலிஜா இம்பே.
82வெல்லெஸ்லி பிரபு "இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு" என்பதை எவ்வாறு மாற்றினார்?"இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு" என்று.
83வாரிசு இழப்புக் கொள்கையை பயன்படுத்தி 1849-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் யாவை?ஜெய்த்பூர், சம்பல்பூர்.
84வாரிசு இழப்புக் கொள்கையால் உதய்ப்பூர் எந்த ஆண்டு இணைக்கப்பட்டது?1852.
தலைமை ஆளுநர்களின் சீர்திருத்தங்கள்
எண்கேள்விவிடை
851639-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்த பிரான்சிஸ் டே நிறுவிய நகரம் எது?சென்னை.
86வணிகக் குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்கை எந்த ஆண்டு நியமித்தது?1772-ஆம் ஆண்டு.
87வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் ஒழிக்கப்பட்ட இலவச அனுமதிச் சீட்டுக்கள் யாவை?தஸ்தக்குகள்.
88சால்பாய் உடன்படிக்கை யார் இருவருக்குமிடையே கையெழுத்தானது?வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாஜதி சிந்தியா.
89காரன் வாலிஸ் பிரபு நீதித்துறையை சீரமைக்க யாருடைய உதவியை நாடினார்?நீதிபதி சர் வில்லயம்ஸ் ஜோன்ஸ்.
90துணைப்படைத்திட்டத்தின் மணிமகுடமாகக் கருதப்படும் உடன்படிக்கை எது?பசீன் உடன்படிக்கை.
91கூர்க்கர்களின் கொட்டத்தை நசுக்கிய ஆளுநர் யார்?ஹேஸ்டிங்ஸ் பிரபு.
92சமாச்சார் தாபன் என்ற வங்காள மொழி வார இதழ் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?1818-ல்.
93கீழ்மட்ட நீதிமன்றங்களில் அந்தந்த பகுதியின் மொழிகளிலேயே வழக்குகள் நடைபெற அனுமதித்த ஆளுநர் யார்?வில்லியம் பெண்டிங் பிரபு.
94வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் உயர்மட்ட நீதிமன்றங்களில் எந்த மொழிக்கு பதிலாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது?பாரசீக மொழிக்கு பதிலாக.
95கல்கத்தாவில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?வில்லியம் பெண்டிங் பிரபு.
961852-ஆம் ஆண்டு தந்தி துறையின் முக்கிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்?ஓ ஷாகன்னசே.
தென்னிந்திய கிளர்ச்சிகள் மற்றும் வேலூர் கலகம்
எண்கேள்விவிடை
97விஸ்வநாதர் மூலம் மதுரை நாயக்கர் அரசு எத்தனை பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது?72 பாளையங்களாக.
98கட்டபொம்மன் கட்ட வேண்டிய கப்பம் 1798 மே 31-ஆம் நாள் கணக்குப்படி எவ்வளவு நிலுவையில் இருந்தது?3310 பகோடாக்கள்.
99வேலூர் கலகத்தில் ஈடுபட்ட சிப்பாய்களுக்கு எத்தனை கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டன?500 முதல் 900 கசையடிகள்.
100காலனி ஆதிக்கத்தை எதிர்த்து மருது சகோதரர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியே வேலூர் கலகம் என்று கூறிய வரலாற்று அறிஞர் யார்?கே.ராசய்யன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement