TNPSC TRB TET இந்தியா சுதந்திரம் பெற்றது வரை 100 வினா-விடை | History Part-22
ஐரோப்பியரின் வருகையும் ஆதிக்கமும்
துவக்க கால நிகழ்வுகள்:
- நிலவழி மூடல்: கி.பி. 1453-ல் இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கிடையிலான நிலவழி துருக்கியர்களால் மூடப்பட்டது.
- துருக்கியரின் நுழைவு: வட ஆப்பிரிக்காவைத் தவிர்த்து துருக்கியர்கள் நுழைந்த தீபகற்பம் பால்கன் தீபகற்பம்.
- பார்த்தலோமியா டயஸின் ஆதரவு: இவரது பயணத்திற்கு ஆதரவு அளித்த போர்ச்சுக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்.
- வாஸ்கோடகாமா பயணம்: இவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து மொசாம்பிக் பகுதி வழியாகத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
- கள்ளிக்கோட்டை அடைதல்: வாஸ்கோடகாமா இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு கள்ளிக்கோட்டையை அடைந்தார்.
- பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் வருகை: இவர் 13 கப்பல்களுடன் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
- வாஸ்கோடகாமா வர்த்தக மையம் (1501): இவர் 20 கப்பல்களுடன் வந்தபொழுது கண்ணனூரில் தனது வர்த்தக மையத்தை நிறுவினார்.
- மன்னர் சாமரின் தாக்குதல்: கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளில் வர்த்தக மையத்தை நிறுவியதால் கோபம் கொண்ட மன்னர் சாமரின் போர்ச்சுக்கீசியரைத் தாக்கினார்.
- வாஸ்கோடகாமாவின் மரணம்: இவர் 1524-ல் மூன்றாவது முறையாக இந்தியா வந்தபொழுது நோய்வாய்ப்பட்டார்.
- முதல் ஆளுநர்: பிரான்சிஸ்கோ அல்மெய்டா 1505-ல் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆளுநராக அனுப்பப்பட்டார்.
- நீலநீர்க் கொள்கை: போர்ச்சுக்கீசிய கப்பற்படையைப் பலப்படுத்துவதற்காக அல்மெய்டா பின்பற்றிய கொள்கை நீலநீர்க்கொள்கை.
- கோவா கைப்பற்றல்: பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை அல்புகர்க் கைப்பற்றியது நவம்பர் 1510.
- தலைநகர் மாற்றம்: நினோ-டி-குன்கா தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றியது 1530-ல்.
- பசீன் கைப்பற்றல்: குஜராத்தின் பகதுார்ஷாவிடமிருந்து போர்ச்சுக்கீசியர் கைப்பற்றிய பகுதி பசீன் பகுதி.
- நுால் அச்சிடல்: "இந்திய மருத்துவ தாவரங்கள்" என்ற நுால் கோவாவில் அச்சிடப்பட்ட ஆண்டு 1563.
- வர்த்தகப் பொருள்: டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த போதை தரும் பொருள் அபினி.
- பழவேற்காட்டில் கட்டுப்பாடு: 1502 முதல் பழவேற்காட்டின் மீது போர்ச்சுக்கீசியர்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர்.
- கெல்டிரியா கோட்டை: பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் கட்டிய கெல்டிரியா கோட்டை அமைக்கப்பட்ட ஆண்டு 1613-ல்.
- அனுமதி பட்டயம்: ஆங்கிலேயர் வர்த்தகம் செய்ய அனுமதி பட்டயம் வழங்கிய இங்கிலாந்து இராணி எலிசபெத்.
- முதல் வணிக மையம் (1611): ஆங்கிலேயர்கள் அமைத்த முதல் வணிக மையம் அமைந்திருந்தது வங்காள விரிகுடா கடற்கரையில்.
- மசூலிப்பட்டினம்: ஆங்கிலேயரின் வணிக மையமான மசூலிப்பட்டினம் கோல்கொண்டா அரசின் ஒரு முக்கிய துறைமுகம்.
- மெட்ராஸ் குத்தகை: ஆங்கில வணிகர் பிரான்சிஸ் டே சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து மெட்ராசைக் குத்தகைக்குப் பெற்றார்.
- சுதாநுதியில் வர்த்தக மையம்: ஜாப் சார்னாக் சுதாநுதி என்ற இடத்தில் வர்த்தகமையத்தை நிறுவிய ஆண்டு 1690-ஆம் ஆண்டு.
- ஜமீன்தாரி உரிமை (1698): கிழக்கிந்திய கம்பெனி ஜமீன்தாரி உரிமையைப் பெற்ற மூன்று கிராமங்கள்: சுதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர்.
- நிறுவனம் உருவாக்கம்: டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் டென்மார்க் அரசரால் உருவாக்கப்பட்டது 1616 மார்ச் 17-ல்.
- குடியேற்றம்: தரங்கம்பாடியைத் தவிர்த்து டேனியர்கள் 1676-ல் செராம்பூரில் (வங்காளம்) குடியேற்றத்தை நிறுவினர்.
- கடைசி நாடு: இந்தியாவிற்கு வியாபாரத்திற்காக வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி நாடு பிரான்சு.
- இரண்டாவது வர்த்தக மைய நிறுவனர்: பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் 1669-ல் நிறுவியவர் மார்காரா.
- ஆளுநர் நியமனம்: பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே நியமிக்கப்பட்டது 1742-ல்.
நிலவருவாய் திட்டங்கள்:
- நிலையான நில வருவாய் திட்டம்: இதை அறிமுகப்படுத்தியவர் காரன்வாலிஸ் பிரபு.
- இரயத்வாரி முறை: இதை அறிமுகப்படுத்தியவர் தாமஸ் மன்றோ.
- மகல்வாரி முறை: இதை அறிமுகப்படுத்திய ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு.
- சந்தால் கலகம்: நடைபெற்ற காலகட்டம் 1855-1956.
- இண்டிகோ கலகம் (அவுரி புரட்சி): நடைபெற்ற காலகட்டம் 1859-1960.
- தக்காண கலகம்: வெடித்த ஆண்டு 1875.
முக்கியப் போர்கள்:
- புதிய கடல்வழி: வாஸ்கோடகாமா புதிய கடல்வழியை ஐரோப்பாவிலிருந்து கண்டுபிடித்தார்.
- பிளாசிப்போர்: நடைபெற்ற நாள் 1757, ஜூன்-23.
- சிராஜ்-உத்-தௌலாவுக்கு உதவியது: பிளாசிப்போரில் இவருக்கு உதவிய ஐரோப்பிய படை பிரெஞ்ச் கூட்டணி.
- பக்சார் போர்: நடைபெற்ற நாள் 1764, அக்டோபர் 22.
- அலகாபாத் உடன்படிக்கை: பக்சார் போரை முடிவுக்குக் கொண்டுவந்த இந்த உடன்படிக்கை நடந்த நாள் 1765 பிப்ரவரி 20-ல்.
- இராபர்ட் கிளைவின் ஒப்பந்தங்கள்: இவர் தனித்தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள்: அயோத்தி நவாப் சுஜா-உத்-தௌலா உடனும், முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா-ஆலத்துடனும்.
- இரட்டை ஆட்சி முறை: வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வந்த ஆங்கிலேயர் இராபர்ட் கிளைவ்.
- காலம்: 1746 முதல் 1763 வரை நடைபெற்றன.
- முதல் போர் காரணம்: ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரால் முதல் கர்நாடகப் போர் ஏற்பட்டது.
- மூன்றாம் போர் காரணம்: ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டுப் போரால் மூன்றாம் கர்நாடகப் போர் உருவானது.
- முதல் போர் உடன்படிக்கை: முதல் கர்நாடகப் போரை முடித்து வைத்த உடன்படிக்கை அய்-லா-சப்பேல் உடன்படிக்கை.
- அடையாறு போர் இடம்: அடையாறு போர் நடைபெற்ற இடமான சாந்தோம், சென்னையின் அடையாறு நதிக்கரையில் அமைந்துள்ளது.
- மேலாண்மை நிலைநாட்டிய முதல் நிகழ்வு: இந்தியப் படையை ஐரோப்பிய படை வெற்றி பெற்றுத் தங்கள் மேலாண்மையை நிலைநாட்டிய முதல் நிகழ்வு அடையாறு போர்.
- ஆம்பூர் போர்: நடைபெற்ற ஆண்டு மற்றும் நாள் 1749 ஆகஸ்ட் 3.
- அன்வர்தீன் தோல்வி: ஆம்பூர் போரில் கர்நாடக நவாப் அன்வர்தீன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்: பிரெஞ்ச் டியூப்ளே, சந்தா சாகிப், முசாபர் ஜங் ஆகியோரின் கூட்டுப் படைகளால்.
- டியூப்ளே திரும்ப அழைப்பு: ஆற்காட்டுப் போரில் பிரெஞ்ச் படை தோல்வியுற்றதால் பிரான்ஸ் அரசாங்கம் டியூப்ளேவை பாரிசுக்குத் திரும்ப அழைத்தது.
- வந்தவாசிப் போர்: ஜெனரல் அயர் கூட் லாலி தலைமையிலான பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்தார்.
- முதல் போர் உடன்படிக்கை: மதராஸ் உடன்படிக்கை கையெழுத்தான நாள் 1769 ஏப்ரல் 4-ல்.
- இரண்டாம் போர் முக்கூட்டணி: ஆங்கிலேயருக்கு எதிராக உருவான முக்கூட்டணியில் இருந்தவர்கள்: ஹைதர் அலி, ஹைதராபாத் நிஜாம், மராத்தியர்கள்.
- இரண்டாம் போர் உடன்படிக்கை: மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தான நாள் 1784 மார்ச் 7-இல்.
- நான்காம் போர் வெற்றி காரணம்: ஆங்கிலேயரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது திப்பு சுல்தானின் மரணம்.
- முதல் போர் காலம்: 1775-1782.
- மூன்றாம் போர் காலம்: 1817-1818.
நிறுவனங்கள்:
- நான்கு முதன்மை நிறுவனங்கள்: ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு இயங்கிய நான்கு முதன்மை நிறுவனங்கள்: குடிமைப்பணிகள், இராணுவம், காவல் மற்றும் நீதித்துறை.
- வார்த்தை பயன்பாடு: "சிவில் சர்வீஸ்" என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்திய நிறுவனம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி.
- முதன்மைப் பணிகள்: சட்டங்களை முறையாக செயல்படுத்துதல், வரி வசூலித்தல்.
- தனியார் வணிகத்திற்கு எதிரான சட்டம்: காரன்வாலிஸ் இயற்றியது 1786-இல்.
- பயிற்சிக் கல்லூரி: வெல்லெஸ்லி பிரபு அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கக் கல்லூரியை கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் நிறுவினார்.
- கிழக்கிந்திய கல்லூரி: ஹெய்லிபரியில் இருந்த கிழக்கிந்திய கல்லூரி இங்கிலாந்தில் நிறுவப்பட்டது 1806-இல்.
- போட்டித்தேர்வு அறிமுகம்: போட்டித்தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய சட்டம் 1833-ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
- திறந்த போட்டித்தேர்வு முறை: கம்பெனி ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பது அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1853-ஆம் ஆண்டு.
- வயது குறைப்பு (22): ஐ.சி.எஸ் தேர்வு எழுத அதிகபட்ச வயது 22 ஆகக் குறைக்கப்பட்டது 1860-ஆம் ஆண்டு.
- வயது குறைப்பு (19): 1876-இல் அதிகபட்ச வயது வரம்பு 19 ஆகக் குறைக்கப்பட்டது.
- ஆட்சிப் பணி சட்டம்: இந்திய ஆட்சிப் பணி சட்டத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றம் இயற்றிய ஆண்டு 1861-ஆம் ஆண்டு.
- முதல் இந்தியர்: ஐ.சி.எஸ் தேர்வில் 1863-இல் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் சத்தியேந்திரநாத் தாகூர்.
- வயது உயர்வு (23): 1892-இல் ஐ.சி.எஸ் தேர்விற்கான வயதுவரம்பு 21-லிருந்து 23 ஆக உயர்த்தப்பட்டது.
- ராயல் கமிஷன்: 1912-ல் அமைக்கப்பட்ட ராயல் கமிஷனில் இடம்பெற்றிருந்த ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை நான்கு.
- இந்தியர் தேர்வு பரிந்துரை (33%): 1918-ல் பரிந்துரைத்தவர்கள்: மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு.
- லீ பிரபு அரச ஆணையம்: ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1923-இல்.
- லீ பிரபு குழு பரிந்துரை: ஆட்சிப்பணி, காவல்பணி, காடுகள் பணி ஆகியவை இந்தியாவுக்கான அரசு செயலரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
- தேர்வாணையங்கள்: 1935 இந்திய அரசுச் சட்டம் உருவாக வழிவகை செய்தது: கூட்டாட்சி மற்றும் மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள்.
- காவல் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜமீன்தார்கள்: விடுவித்த ஆங்கிலேய ஆளுநர் காரன்வாலிஸ்.
- மாவட்ட கண்காணிப்பாளர் பதவி: நியமிக்கப்பட்ட ஆண்டு 1808-இல்.
- உச்சநீதிமன்றம்: கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்ட சட்டம்: 1773-ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டம்.
- ஜூரி முறை: வங்காளத்தில் 1832-ல் கொண்டு வந்தவர் வில்லியம் பெண்டிங் பிரபு.
- முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி: வங்காளத்தில் வில்லியம் கோட்டையில் நியமிக்கப்பட்ட முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி சர் எலிஜா இம்பே.
- வெல்லெஸ்லி பிரபுவின் மாற்றம்: "இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு" என்பதை "இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு" என்று மாற்றினார்.
- வாரிசு இழப்புக் கொள்கை (1849): இணைக்கப்பட்ட பகுதிகள்: ஜெய்த்பூர், சம்பல்பூர்.
- வாரிசு இழப்புக் கொள்கை (1852): இணைக்கப்பட்ட பகுதி: உதய்ப்பூர்.
- செயின்ட் ஜார்ஜ் கோட்டை & சென்னை: 1639-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்த பிரான்சிஸ் டே நிறுவிய நகர் சென்னை.
- வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமனம்: வணிகக் குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக இவரை நியமித்தது 1772-ஆம் ஆண்டு.
- தஸ்தக்குகள் ஒழிப்பு: வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் ஒழிக்கப்பட்ட இலவச அனுமதிச் சீட்டுக்கள் தஸ்தக்குகள்.
- சால்பாய் உடன்படிக்கை: கையெழுத்தானவர்கள்: வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாஜதி சிந்தியா.
- காரன் வாலிஸ் நீதித்துறை சீரமைப்பு: இவர் உதவியை நாடியவர்: நீதிபதி சர் வில்லயம்ஸ் ஜோன்ஸ்.
- துணைப்படைத் திட்டத்தின் மணிமகுடம்: கருதப்படும் உடன்படிக்கை பசீன் உடன்படிக்கை.
- கூர்க்கர்களை நசுக்கியவர்: ஆளுநர் ஹேஸ்டிங்ஸ் பிரபு.
- சமாச்சார் தாபன் இதழ்: வங்காள மொழி வார இதழ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1818-ல்.
- வழக்கு மொழிகள்: கீழ்மட்ட நீதிமன்றங்களில் அந்தந்த பகுதியின் மொழிகளிலேயே வழக்குகள் நடைபெற அனுமதித்தவர் வில்லியம் பெண்டிங் பிரபு.
- உயர்மட்ட நீதிமன்றங்களில் ஆங்கிலம்: வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல்: கல்கத்தாவில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியவர் வில்லியம் பெண்டிங் பிரபு.
- தந்தித் துறை கண்காணிப்பாளர் (1852): நியமிக்கப்பட்டவர் ஓ ஷாகன்னசே.
- பாளையங்கள்: விஸ்வநாதர் மூலம் மதுரை நாயக்கர் அரசு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது.
- கட்டபொம்மன் கப்பம் நிலுவை: 1798 மே 31-ஆம் நாள் கணக்குப்படி நிலுவையில் இருந்த கப்பம் 3310 பகோடாக்கள்.
- வேலூர் கலக தண்டனை: கலகத்தில் ஈடுபட்ட சிப்பாய்களுக்கு வழங்கப்பட்ட கசையடிகள்: 500 முதல் 900 கசையடிகள்.
- வேலூர் கலகம் பற்றிய வரலாற்று அறிஞர்: மருது சகோதரர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியே வேலூர் கலகம் என்று கூறியவர் கே.ராசய்யன்.


0 Comments