6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 6th Social Science Part-3


TNPSC TRB TET 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 6th Social Science Part-3


வரலாறு, தொல்லியல் மற்றும் புவியியல் சார்ந்த முக்கிய வினாக்கள் - விடைகள்

அரசியல் மற்றும் சமூக வரலாறு
  1. அசோகர் ஆட்சிக்கான சான்றுகள்: சாஞ்சி ஸ்தூபி மற்றும் சாரநாத் கற்றூண்.
  2. புவியின் தோற்றம்: சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்.
  3. வேளாண்மை தொடங்கிய காலம்: 8000 ஆண்டுகளுக்கு முன் (மனிதர்கள்).
  4. மனித நாகரிகத்தின் தோற்றம்: 5000 ஆண்டுகளுக்கு முன்.
  5. சிறிய மூளையுடைய தொடக்கக்கால மனிதன்: ஹோமோ எரக்டஸ் (ஜாவா மனிதன்).
  6. ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பா மற்றும் ஆசியாவில் குடியேறியவர்: ஹோமோ சேப்பியன்ஸ்.
  7. மானுடவியல் ('Anthropos', 'Logos') பொருள்: Anthropos - மனிதன், Logos - எண்ணங்கள்.
  8. ஹோமோ ஹெபிலிஸ் வாழ்விடம்: தென் ஆப்பிரிக்கா.
  9. நியாண்டர்தால் மனிதர்களின் வாழ்விடம்: யூரோசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா).
  10. கோவை மாவட்டத்தில் உள்ள தொல்பழங்காலப் பாறை ஓவிய இடங்கள்: குமுதிபதி மற்றும் மாவடைப்பு.
  11. சீன நாகரிகத்தின் காலகட்டம்: கி.மு. 1700 - 1122.
  12. எகிப்து நாகரிகத்தின் காலகட்டம்: கி.மு. 3100 - 1100.
  13. 'சிவிஸ்' (CIVIS) லத்தீன் வார்த்தையின் பொருள் (நாகரிகம்): நகரம்.
  14. ஹரப்பா நாகரிகம் சார்ந்த காலம்: வெண்கலக்காலம்.
  15. சிந்துவெளி கப்பல் கட்டும் தளமான லோத்தல் அமைந்துள்ள ஆறு: குஜராத்தில் சபர்மதி ஆற்றின் துணை ஆறு.
  16. மொஹெஞ்சதாரோவை உலகப் பாரம்பரியத் தளமாகத் தேர்ந்தெடுத்த அமைப்பு: யுனெஸ்கோ.
  17. கிசே பிரமிடை கட்டியவர்: குஃபு மன்னன் (ஒரு கல்லின் எடை சுமார் 15 டன்).
  18. இரண்டாம் ராமெசிஸ் கட்டிய இரட்டைக் கோயில்கள் உள்ள இடம்: அபு சிம்பல்.
  19. முதிர்ச்சியடைந்த ஹரப்பா கால தானியக் களஞ்சியம் கண்டறியப்பட்ட இடம்: ராகிகர்கி (ஹரியானா).
  20. பட்டினப்பாலை ஆசிரியர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
  21. பிற்காலப் பல்லவ மன்னன் ராஜசிம்மன் காஞ்சியில் கட்டிய கோயில்: கைலாசநாதர் கோயில்.
  22. 'ஏரிகளின் மாவட்டம்': காஞ்சிபுரம்.
  23. 'வேதகாலம்' அப்பெயர் வரக் காரணம்: வேதங்கள்.
  24. 'சுருதிகள்' (வேதகால இலக்கியப் பிரிவு) பொருள்: கேட்டல்.
  25. 'ஸ்மிருதிகள்' (ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள்) பொருள்: இறுதியான எழுதப்பட்ட பிரதி.
  26. ரிக் வேத காலத்தில் கிராமங்களின் தொகுப்பான 'விஸ்' தலைவர்: விசயபதி.
  27. அரசனின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய மிகப்பழமையான வேதகால இனக்குழு மன்றம்: விதாதா.
  28. வேத காலத்தில் மூத்தோர் மன்றம் மற்றும் பொதுக்குழுவின் பெயர்கள்: சபா (மூத்தோர் மன்றம்), சமிதி (பொதுக்குழு).
  29. வேதகால சமூக அமைப்பு: தந்தை வழிச் சமூகம்.
  30. ஆரியர்கள் அல்லாத கருப்பு நிற மக்கள் அழைக்கப்பட்ட பெயர்கள்: தசயுக்கள், தாசர்கள்.
  31. ரிக்வேத கால மக்கள் அறிந்த உலோகங்கள்: தங்கம் (ஹிரண்யா), இரும்பு (சியாமா), தாமிரம் அல்லது செம்பு (அயாஸ்).
  32. குருகுலத்தில் மாணவர்களாகச் சேர அனுமதிக்கப்பட்டவர்கள்: இரு பிறப்பாளர்கள் (Dvijas) மட்டுமே.
  33. மோட்சம் அடைவதற்கான துறவற வாழ்க்கை (வேதகாலம்): சன்னியாசம்.
  34. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த வெண்கல உருவங்கள்: புலி, யானை, மான்.
  35. இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்த பையம்பள்ளி மாவட்டம்: வேலூர் மாவட்டம்.
  36. வீரராகவபுரம், நரசிங்கம்பட்டி பெருங்கற்காலச் சின்னங்கள்: கற்திட்டைகள்.
  37. அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் எஃகு மீது வரி விதிக்கப்பட்டதைக் குறிப்பிடும் குறிப்பு: பெரிப்பிளஸ்.
சமயம்
  1. 'ஜினா' என்பதன் பொருள் (சமணம்): தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது.
  2. மகாவீரரின் இயற்பெயரான 'வர்த்தமானர்' என்பதன் பொருள்: செழிப்பு.
  3. சமணத்தின் திரிரத்தினங்கள் (மூன்று ரத்தினங்கள்): நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்.
  4. நிர்வாணமாக வாழும் சமணப் பிரிவினர்: திகம்பரர்.
  5. பெண்கள் நேரடியாக விடுதலை பெற தகுதியுடையவர்கள் என நம்பிய சமணப் பிரிவினர்: சுவேதாம்பரர்.
  6. மணிமேகலையில் சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள்: அறவோர் பள்ளி.
  7. 'ஜைனக் காஞ்சி'யின் தற்போதைய பெயர்: திருப்பருத்திக் குன்றம்.
  8. புத்தர் ஞானம் பெற்ற மரம்: அரசமரம் (கயாவுக்கு அருகே).
  9. புத்தரின் எண்வகை வழிகள் மற்றும் நான்கு பேருண்மைகளின் இறுதி நோக்கம்: நிர்வாண நிலையை அடைவது.
  10. புத்தரின் உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்ட நினைவுச்சின்னங்கள்: ஸ்தூபி.
  11. தனிமனிதர்கள் முக்தி அடைவதே நோக்கம் என பிராகிருத மொழியைப் பயன்படுத்திய பௌத்தப் பிரிவு: ஹீனயானம்.
  12. பௌத்தம் ஹீனயானம் மற்றும் மகாயானமாகப் பிளவுற்ற மாநாடு: நான்காவது பௌத்த மாநாடு (காஷ்மீர்).
  13. உலக சுகங்களின் மீதான பற்றும், கடுமையான தவ வாழ்வும் இல்லாமல் இருப்பதைக் குறிக்கும் பௌத்த வழி: இடை வழி (நடுவு நிலை வழி).
  14. புத்தர் முந்தைய பிறவிகளில் மனிதராகவும் விலங்காகவும் இருந்ததைக் குறிக்கும் கதைகள்: ஜாதகக் கதைகள்.
மௌரியப் பேரரசு மற்றும் சங்க காலம்
  1. முடியாட்சிக்கு முன்னால் மேட்டுக்குடி மக்கள் அடங்கிய ஆட்சி: கண-சங்கங்கள்.
  2. ஹரியங்கா வம்ச அரசர் அஜாதசத்ரு முதல் பௌத்த மாநாட்டைக் கூட்டிய இடம்: ராஜகிரகம்.
  3. சிசுநாக வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் பௌத்த மாநாட்டைக் கூட்டியவர்: காலசோகா (வைசாலி).
  4. பிந்துசாரரின் இயற்பெயர்: சிம்ஹசேனா.
  5. அசோகர் பௌத்தத்தைப் பரப்ப மகள் சங்கமித்ரா, மகன் மகிந்தாவை அனுப்பிய இடம்: இலங்கை.
  6. அசோகர் தர்மத்தைப் பரப்புவதற்காக நியமித்த புதிய அதிகாரிகள்: தர்ம மகாமாத்திரர்கள்.
  7. மௌரியர் காலத்தில் நிலவரியாக வசூலிக்கப்பட்ட 'பாகா'வின் அளவு: மொத்த விளைச்சலில் 1/6 பங்கு.
  8. மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதாவைக் கொன்று சுங்க வம்சத்தை நிறுவியவர்: புஷ்யமித்ர சுங்கர்.
  9. ராஜகிரகம், கலிங்காவின் தற்போதைய பெயர்கள்: ராஜ்கிர், ஒடிசா.
  10. கிரேக்க அரசர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவர் (மௌரிய அரசவை): மெகஸ்தனிஸ்.
  11. தமிழ்மொழி இலத்தீன் மொழிக்கு இணையான பழமை வாய்ந்தது என்ற பேராசிரியர்: ஜார்ஜ் எல் ஹார்ட் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்).
  12. கண்ணகிக்கு சிலை எடுக்க இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்த சேர அரசன்: சேரன் செங்குட்டுவன்.
  13. சங்க காலத்தில் அரசருக்கு நிர்வாகத்தில் உதவிய குழுக்கள்: ஐம்பெருங்குழு, எண்பேராயம்.
  14. சங்க காலத்தில் நிலம் பிரிக்கப்பட்ட திணைகள்: ஐந்து திணைகள்.
  15. 'இந்தியாவின் முதல் பேரங்காடி' எனப் பிளினியால் குறிப்பிடப்பட்ட முசிறியில் கோவில் கட்டப்பட்ட கடவுள்: அகஸ்டஸ் கடவுள்.
குப்தர் மற்றும் பிற அரசுகள்
  1. குஷாணப் பேரரசர் கனிஷ்கர் பௌத்தத்தைத் தழுவக் காரணமானவர்: அஸ்வகோஷர்.
  2. சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டை (பிரசஸ்தி) இயற்றியவர்: ஹரிசேனர்.
  3. சமுத்திரகுப்தரின் சமகாலத்தவரான இலங்கைப் பௌத்த அரசன்: ஸ்ரீ மேகவர்மன்.
  4. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த அறிஞர்: பாகியான்.
  5. நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் (இரண்டாம் சந்திர குப்தரைத் தொடர்ந்து அரியணை ஏறியவர்): குமாரகுப்தர்.
  6. குப்தப் பேரரசில் காலாட்படை மற்றும் குதிரைப்படை தளபதிகள்: பாலாதிகிரிதா (காலாட்படை), மஹாபாலாதிகிரிதா (குதிரைப்படை).
  7. குப்தர்கள் காலத்தில் வேளாண்மைக்கு உகந்த நிலங்கள், காட்டு நிலங்கள்: க்ஷேத்ரா (வேளாண் நிலம்), அப்ரகதா (காட்டு நிலம்).
  8. ஹர்ஷரின் தென்னிந்திய படையெடுப்பைத் தடுத்து நிறுத்திய சாளுக்கிய அரசர்: இரண்டாம் புலிகேசி.
  9. பல்லவ அரசன் மகேந்திரவர்மன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறக் காரணமானவர்: அப்பர் (திருநாவுக்கரசர்).
  10. 'தசகுமார சரிதம்' நூலை எழுதிய சமஸ்கிருத அறிஞர் (முதலாம் நரசிம்மவர்மன் அவையை அலங்கரித்தவர்): தண்டின்.
  11. ராஷ்டிரகூட மன்னர் அமோகவர்ஷரை சமண மதத்திற்கு மாற்றிய துறவி: ஜினசேனா.
  12. ராஷ்டிரகூட மன்னர் அமோகவர்ஷரால் இயற்றப்பட்ட கன்னட மொழியின் முதல் கவிதை நூல்: கவிராஜ மார்க்கம்.
விண்வெளி மற்றும் புவியியல்
  1. பால்வெளி விண்மீன் திரள் மண்டலம் உருவானது: பெருவெடிப்பு நிகழ்ந்து சுமார் 5 பில்லியன் வருடங்களுக்குப் பின்.
  2. வெள்ளி கோள் தன்னைத்தானே சுற்ற ஆகும் நாட்கள்: 243 நாட்கள்.
  3. செவ்வாய் கோளின் துணைக்கோள்கள்: ஃபோபஸ் மற்றும் டீமஸ்.
  4. வியாழன் தன்னைத்தானே சுற்ற ஆகும் நேரம் (மிகப்பெரிய கோள்): 9 மணி நேரம் 51 நிமிடங்கள்.
  5. புவி சூரியனுக்கு தொலைவில் காணப்படும் நிகழ்வு: சூரிய சேய்மை.
  6. செங்குத்தான பாறைகளுக்கிடையே உள்ள குறுகிய, ஆழமான பிளவுபட்ட கடற்கரை: ஃபியார்ட்.
  7. அட்லாண்டிக் பெருங்கடலையும், மத்திய தரைக் கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி: ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி.
  8. 8 டிகிரி கால்வாய் பிரிப்பவை: மாலத் தீவு மற்றும் மினிக்காய் தீவு.
  9. ஒவ்வொரு அட்சக்கோட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு தூரம்: 111 கி.மீ.
  10. புவி 1 டிகிரி தீர்க்கக்கோட்டைக் கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு: 4 நிமிடங்கள்.
  11. 'a.m' மற்றும் 'p.m' இல் உள்ள 'மெரிடியானஸ்' (இலத்தீன் சொல்) பொருள்: நண்பகல்.
  12. பேரிடர் முன்னறிவிப்பு செய்வதற்காக INCOIS அமைப்பு அமைந்துள்ள இடம்: ஐதராபாத்.
அரசியலமைப்பு மற்றும் சமூகம்
  1. இந்தியாவில் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொத்த மொழிகள்: 22 மொழிகள்.
  2. தமிழ்நாட்டில் குறைவான எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம்: தருமபுரி (68.54%).
  3. நெல்சன் மண்டேலா இனநிறவெறிக்கு எதிராகப் போராடி சிறைவாசம் அனுபவித்த ஆண்டுகள்: 27 ஆண்டுகள்.
  4. 'அக்னிச்சிறகுகள்', 'இந்தியா 2020' நூல்களை எழுதிய முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்: அப்துல் கலாம்.
  5. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை (1991-92) பெற்ற முதல் விளையாட்டு வீரர்: திரு. விஸ்வநாதன் ஆனந்த்.
  6. இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர்: பிங்காலி வெங்கையா (ஆந்திரா).
  7. 2012 ல் இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அங்கீகரிக்கப்பட்டது: லாக்டோபேசில்லஸ் டெல்புரூக்கி.
  8. உலக மக்களாட்சி தினமாக ஐ.நா. சபை அறிவித்த தேதி: செப்டம்பர் 15.
  9. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக ஆகும் கால அளவு: 2 ஆண்டுகள், 11 மாதம், 17 நாட்கள்.
  10. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஆரம்பத்தில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு: 33 சதவிகிதம் (தமிழகத்தில் 2016-ல் 50% ஆக உயர்த்தப்பட்டது).

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement