TNPSC TRB TET 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 6th Social Science Part-2
வரலாறு, தொல்லியல் மற்றும் அரசுகள் - வினாக்கள் மற்றும் விடைகள்
வரலாறு மற்றும் தொல்லியல்
- வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது எதற்கும் எதற்கும் இடைப்பட்ட காலம்?
- விடை: கற்கருவிகளைப் பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளைக் கண்டுபிடிப்பதற்கும் இடைப்பட்ட காலம்.
- விலங்குகளுக்கு முதன்முதலாக மருத்துவமனை அமைத்துத் தந்த இந்திய அரசர் யார்?
- விடை: அசோகர்.
- நமது தேசியக் கொடியில் உள்ள 24 ஆரக்கால் சக்கரம் எதிலிருந்து பெறப்பட்டது?
- விடை: சாரநாத் கற்றூண் முத்திரையிலிருந்து.
- அசோகர் குறித்த வரலாற்று ஆவணங்களைச் சார்லஸ் ஆலன் எந்தப் பெயரில் நூலாக வெளியிட்டார்?
- விடை: The Search for the India's Lost Emperor.
- 'தம்மா' என்பது பிராகிருத சொல், இதன் சமஸ்கிருதச் சொல் என்ன?
- விடை: தர்மா.
- மனிதன் சுமார் எத்தனை இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடக்கத் தொடங்கினான்?
- விடை: 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.
- ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனிதர்கள் எங்கு தோன்றினர்?
- விடை: கிழக்கு ஆப்பிரிக்கா.
- இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் கொண்டிருந்த, ஜெர்மனியில் சான்றுகள் கிடைக்கப்பெற்ற பழங்கால மனிதன் யார்?
- விடை: நியாண்டர்தால்.
- பீகிங் மனிதன் எங்கு வாழ்ந்தான்?
- விடை: சீனா.
- லண்டன் பகுதியில் வாழ்ந்த பழங்கால மனிதன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
- விடை: ஹைடல்பர்க் மனிதன்.
- தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள் காணப்படும் பொறிவரை எந்த மாவட்டத்தில் உள்ளது?
- விடை: நீலகிரி மாவட்டம்.
- ஹரப்பா மற்றும் மொஹஞ்ச-தாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்த ஆண்டு எது?
- விடை: 1920.
- ஹரப்பாவிற்கும் மொஹெஞ்ச-தாரோவிற்கும் பொதுவான அம்சங்கள் இருப்பதை 1924ல் கண்டறிந்தவர் யார்?
- விடை: ஜான் மார்ஷல்.
- ஹரப்பா நாகரிகத்தின் பரப்பளவு எவ்வளவு?
- விடை: 13 லட்சம் சதுர கி.மீ.
- மொஹஞ்ச-தாரோவில் இருந்த 20 தூண்கள் மற்றும் 4 வரிசைகளைக் கொண்ட மிகப்பெரிய பொதுக் கட்டடம் எது?
- விடை: கூட்ட அரங்கு.
- சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கிய அக்காடிய அரசன் யார்?
- விடை: நாரம்-சின்.
- குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்திலான அளவுகோல் எவ்வளவு சிறிய அளவீட்டைக் கொண்டுள்ளது?
- விடை: 1704 மி.மீ.
- நடன மாது எனப் பெயரிடப்பட்ட வெண்கலத்தாலான சிறிய பெண் சிலை எங்கு கிடைத்தது?
- விடை: மொஹெஞ்ச-தாரோ.
- சிந்துவெளி மக்கள் ஆபரணங்கள் செய்ய எந்த நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர்?
- விடை: சிவப்பு நிற மணிக்கற்கள்.
- மனித வரலாற்றில் முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
- விடை: சுமேரியர்களால்.
- செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்ட ராகிகர்கி எந்த மாநிலத்தில் உள்ளது?
- விடை: ஹரியான மாநிலம்.
- சிந்துவெளி நாகரிகத்துக்கு முன்னோடியாகக் கருதப்படும் மெஹெர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது?
- விடை: போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கு.
- பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் யார்?
- விடை: கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
- சந்திர குப்தரின் அமைச்சரான சாணக்கியர் மதுரையைப் பற்றி எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
- விடை: அர்த்தசாஸ்திரம்.
- சீன வரலாற்றாசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக எங்கு இருந்த கடிகைக்கு வந்தார்?
- விடை: காஞ்சி.
- தமிழ்நாட்டில் 'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுவது எது?
- விடை: காஞ்சிபுரம்.
- சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு மற்றும் தொண்டைநாடு ஆகியவை எதற்குப் புகழ் பெற்றவை?
- விடை: சோழநாடு - சோறுடைத்து, பாண்டிய நாடு - முத்துடைத்து, சேரநாடு - வேழமுடைத்து, தொண்டைநாடு - சான்றோருடைத்து.
- சேர அரசர்களைப் பற்றிய செய்திகளை வழங்கும் சங்க கால நூல் எது?
- விடை: பதிற்றுப்பத்து.
- தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சங்க கால சேர அரசன் யார்?
- விடை: சேரல் இரும்பொறை.
- கரிகாலன் மூவேந்தர்கள் மற்றும் பதினொன்று வேளிர் தலைவர்களை தோற்கடித்த இடம் எது?
- விடை: வெண்ணி.
- சேரர்களின் அடையாள மாலை மற்றும் துறைமுகம் யாவை?
- விடை: பனம்பூ மாலை, முசிறி/தொண்டி.
- குறுநில மன்னர்களில் 'ஆய்' என்னும் பெயர் எந்தப் பழந்தமிழ்ச் சொல்லில் இருந்து பெறப்பட்டது?
- விடை: ஆயர்.
- சங்க காலத்தில் நிலவரியே வருவாயின் முக்கிய ஆதாரம், அது எவ்வாறு அழைக்கப்பட்டது?
- விடை: இறை.
- சங்க காலத்தில் எறியீட்டி எவ்வாறு குறிப்பிடப்பட்டது?
- விடை: தோமாரம்.
- சங்க காலத்தில் நெய்தல் திணை மக்களின் கடவுளாக வணங்கப்பட்டவர் யார்?
- விடை: வருணன்.
- பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணல் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
- விடை: ஈரோடு மாவட்டம்.
- இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: நடுகல்.
- ஆரியர்கள் எந்தக் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வந்தனர்?
- விடை: இந்துகுஷ் மலைகளிலுள்ள கைபர் கணவாய்.
- ரிக்வேதகால ஆரியர்களின் வாழ்விடமான 'சப்தசிந்து' என்பதன் பொருள் என்ன?
- விடை: ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி.
- ரிக் வேத கால அரசியலில் குடும்பத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
- விடை: குலபதி.
- பின் வேதகாலத்தில் உருவான அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- விடை: ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள்.
- வேதகாலத்தில் 'பாலி' என்ற வரியின்படி விவசாய மகசூழில் அல்லது கால்நடைகளில் எவ்வளவு பங்கு அரசனுக்குச் செலுத்த வேண்டும்?
- விடை: 1/6 பங்கு.
- வேதகால மக்களின் முதன்மைப் பயிரான 'யவா' என்பது எதைக் குறிக்கிறது?
- விடை: பார்லி.
- வேதகாலப் பண்பாடு எவ்வகை மட்பாண்டப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது?
- விடை: வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு.
- ரிக்வேத கால மக்கள் பயன்படுத்திய நிஷ்கா, சத்மனா என்பவை எவ்வகை நாணயங்கள்?
- விடை: தங்க நாணயங்கள்.
- ரிக்வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட 'கிருஷ்ணாலா' என்பது எவ்வகை நாணயம்?
- விடை: வெள்ளி நாணயம்.
- நான்கு ஆஸ்ரமங்களில் ஒன்றான 'வனப்பிரஸ்தம்' என்பதன் பொருள் என்ன?
- விடை: காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்.
- 'மெகாலித்' (Megalith) என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது?
- விடை: கிரேக்கச் சொல்.
- சமணத் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த இடம் எது?
- விடை: வைசாலிக்கு அருகேயுள்ள குந்தகிராமம், பீகார்.
- மகாவீரரின் பெற்றோர் பெயர்கள் யாவை?
- விடை: சித்தார்த்தர், திரிசலா.
- பன்னிரண்டரை ஆண்டுகால தவத்திற்குப் பின்னர் மகாவீரர் அடைந்த எல்லையற்ற அறிவின் பெயர் என்ன?
- விடை: கைவல்ய.
- மகாவீரரின் தலைமைச் சீடரான கௌதமசுவாமி தொகுத்த போதனைகளின் பெயர் என்ன?
- விடை: ஆகம சித்தாந்தம்.
- முற்போக்கானவர்களாகக் கருதப்பட்டு வெள்ளை நிற ஆடைகளை அணியும் சமணப் பிரிவினர் யார்?
- விடை: சுவேதாம்பரர்.
- சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்போது உடன் சென்ற சமணப் பெண் துறவி யார்?
- விடை: கவுந்தியடிகள்.
- காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக் குன்றம் கிராமம் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
- விடை: ஜைனக் காஞ்சி.
- புத்தரின் பெற்றோர் பெயர்கள் யாவை?
- விடை: சுத்தோதனா, மாயாதேவி.
- புத்தரின் முதல் போதனைச் சொற்பொழிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: தர்ம சக்ர பரிவர்த்தனா.
- பௌத்த சங்கத்தின் துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- விடை: பிட்சுக்கள்.
- புத்தருடைய உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்ட பௌத்த நினைவுச்சின்னங்கள் எவை?
- விடை: ஸ்தூபி.
- புத்தரின் உருவங்களை வணங்கிய பௌத்தப் பிரிவு எது?
- விடை: மகாயானம்.
- முதல் பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் மற்றும் அதனைத் தலைமையேற்றவர் யார்?
- விடை: இராஜகிருகம், அரசர் அஜாதசத்ரு.
- காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பௌத்த தர்க்கவியல் அறிஞர் யார்?
- விடை: தின்னகர்.
- பாரசீகத்தில் ஜொராஸ்டிரியனிசத்தை தோற்றுவித்தவர் யார்?
- விடை: ஜொராஸ்டர்.
- ஆறாம் நூற்றாண்டில் மொத்தம் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?
- விடை: பதினாறு.
- சிசுநாக வம்சத்தைச் சேர்ந்த எந்த அரசர் தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார்?
- விடை: காலசோகா.
- சந்திரகுப்த மௌரியரைத் தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்ற சமணத்துறவி யார்?
- விடை: பத்ரபாகு.
- உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் சமணச் சடங்கின் பெயர் என்ன?
- விடை: சல்லேகனா.
- எதிரிகளை அழிப்பவன் என்று பொருள்படும் 'அமிர்தகதா' என்று கிரேக்கர்களால் அழைக்கப்பட்டவர் யார்?
- விடை: பிந்துசாரர்.
- 'தேவனாம்பிரியர்' என்றழைக்கப்பட்ட அசோகரின் பட்டப்பெயருக்குப் பொருள் என்ன?
- விடை: கடவுளுக்கு பிரியமானவன்.
- அசோகர் கல்வெட்டுகளில் சாஞ்சியில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை எது?
- விடை: பிராமி.
- மௌரியர்களின் காலத்தில் நகர நிர்வாகம் எந்த அதிகாரியின் கீழ் இருந்தது?
- விடை: நகரிகா.
- மௌரியர்கள் காலத்தில் அரசினுடைய செப்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- விடை: மாஸகாஸ்.
- சுதர்சனா ஏரி உருவாக்கப்பட்டதைப் பதிவு செய்துள்ள கல்வெட்டு எது?
- விடை: ருத்ரதாமனின் ஜுனாகத் மற்றும் கிர்னார் கல்வெட்டு.
- கலிங்கநாட்டு அரசன் காரவேலனுடைய புகழ்பெற்ற கல்வெட்டு எது?
- விடை: ஹதிகும்பா கல்வெட்டு.
- காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் என கருதப்படுபவர் யார்?
- விடை: அக்னிமித்ரா.
- கௌதமிபாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) எது?
- விடை: நாசிக் மெய்க்கீர்த்தி.
- அமராவதியில் புகழ்பெற்ற பௌத்த ஸ்தூபிகளைக் கட்டியவர்கள் யார்?
- விடை: சாதவாகனர்கள்.
- சாகர்களின் ஆட்சியானது காந்தாரப்பகுதியில் யாரால் நிறுவப்பட்டது?
- விடை: மாவோஸ் அல்லது மோகா.
- தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பு எது?
- விடை: ருத்ரதாமனுடைய ஜுனாகத் மற்றும் கிர்னார் கல்வெட்டு.
- புனித தாமஸிடம் தொடர்புடைய, கிறித்துவத்திற்கு மதம் மாறிய இந்தோ-பார்த்திய அரசர் யார்?
- விடை: கோண்டோ பெர்னஸ்.
- முதலாம் சந்திரகுப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களில் யாருடைய உருவங்கள் இடம்பெற்றிருந்தன?
- விடை: சந்திரகுப்தர் மற்றும் குமாரதேவி.
- சமுத்திரகுப்தரால் தென்னிந்தியாவில் தோற்கடிக்கப்பட்ட பல்லவ நாட்டு அரசர் யார்?
- விடை: விஷ்ணுகோபன்.
- 'பிரசஸ்தி' என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் என்ன?
- விடை: ஒருவரைப் பாராட்டி புகழ்வது.
- விக்கிரமாதித்யர் (இரண்டாம் சந்திரகுப்தர்) அவையிலிருந்த அகராதியியல் ஆசிரியர் யார்?
- விடை: அமர சிம்ஹர்.
- குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?
- விடை: விஸ்ணுகுப்தர்.
- பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்த குப்தர் கால வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- விடை: சார்த்தவாகா.
- பூமி தனது அச்சில் சுழலுகிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் யார்?
- விடை: ஆரியப்பட்டர்.
- குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- விடை: தினாரா.
- களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கிய மன்னன் யார்?
- விடை: சிம்மவிஷ்ணு.
- மத்தவிலாசப்பிரகசனம் என்ற நாடகத்தைச் சமஸ்கிருத மொழியில் எழுதிய பல்லவ அரசன் யார்?
- விடை: முதலாம் மகேந்திரவர்மன்.
- சிறுத்தொண்டர் எனப் பிரபலமாக அறியப்பட்ட முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார்?
- விடை: பரஞ்சோதி.
- காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப்பெருமான் கோவிலைக் கட்டிய பல்லவ மன்னன் யார்?
- விடை: நந்திவர்மன்.
- கிராதார்ஜுனியம் எனும் வடமொழிக் காப்பியத்தை வடித்த சமஸ்கிருத அறிஞர் யார்?
- விடை: பாரவி.
- அய்கோல் கல்வெட்டை சமஸ்கிருத மொழியில் எழுதிய இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர் யார்?
- விடை: ரவிகீர்த்தி.
- வெசாரா பாணியிலான கோவில் விமானங்களைக் கட்டும் முறையை வளர்ச்சி பெறச் செய்தவர்கள் யார்?
- விடை: சாளுக்கியர்கள்.
- கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் என கருதப்படுபவர்கள் யார்?
- விடை: ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா.
- கீழடி அகழாய்வு மாதிரிகளை 2017ல் இந்திய தொல்லியல் துறை எந்த நிறுவனத்திற்கு கணிக்க அனுப்பியது?
- விடை: பீட்டா அனாலடிக் நிறுவனம், புளோரிடா.
- புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் எவை?
- விடை: ஆண்ட்ரோமெடா மற்றும் மெகல்லனிக் க்ளவுடஸ்.
- சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் சூரியன் எத்தனை சதவிகிதம் உள்ளது?
- விடை: 99.8 சதவிகிதம்.
- புவி வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது?
* விடை: 30 கிலோமீட்டர்.


0 Comments