பகுதி - தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் (வினா விடைகள்)
இலக்கணக் குறிப்புகள்
- 'தோன்றுக' என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
- விடை: வியங்கோள் வினைமுற்று
- 'யார்க்கும்', 'கேட்பினும்' என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக.
- விடை: முற்றும்மை
- 'புன்மனம்' என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
- விடை: பண்புத்தொகை
- 'ஒழுக்கம்' (ஒழுக்கம் விழுப்பம் தரலான்) எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
- விடை: தொழிற்பெயர்
- 'கொல்லாமை' என்பது எவ்வகைச் சொல்?
- விடை: எதிர்மறைத் தொழிற்பெயர்
- 'தொழாஅர்' என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக.
- விடை: செய்யுளிசை அளபெடை
- 'ஓறுத்தாரை ஒன்றாக வையாரே' இத்தொடரில் “ஒறுத்தார்” என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
- விடை: வினையாலணையும் பெயர்
- 'எயிறு' என்னும் சொல் எவ்வகைச் சொல்?
- விடை: பெயர்த்திரிசொல்
- 'தேடிய' என்னும் சொல்லின் வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
- விடை: தேடு
- 'நல்கிய' என்னும் சொல்லின் வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
- விடை: நல்கு
- 'அஞ்சல்' என்னும் சொல்லின் வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
- விடை: அஞ்சு
- 'வந்தான்' என்னும் சொல்லின் வேர்ச்சொல் யாது?
- விடை: வா
- 'தருவான்' என்னும் சொல்லின் வேர்ச்சொல் யாது?
- விடை: தா
- 'நல்கினர்' என்னும் சொல்லின் வேர்ச்சொல் யாது?
- விடை: நல்கு
- 'கற்று' என்னும் சொல்லின் வேர்ச்சொல் யாது?
- விடை: கல்
- 'வாடினான்' என்னும் சொல்லின் வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
- விடை: வாடு
- 'காண்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க.
- விடை: கண்டு
- 'பிடிபயின்று தரூஉம் பெரும் களிறு போலத்' இதில் வரும் வினையெச்சம் எது?
- விடை: பயின்று
- 'ஓங்க' என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றை எழுதுக.
- விடை: ஓங்குக
- 'உழு' என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றை எழுதுக.
- விடை: உழுக
- 'ஒலி' என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றை எழுதுக.
- விடை: ஒலிக்க
- 'ஆள்' என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றை எழுதுக.
- விடை: ஆள்க
- 'சா' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க.
- விடை: செத்தான்
- 'துடை' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை எழுதுக.
- விடை: துடைத்தான்
- 'கொடு' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க.
- விடை: கொடுத்தல்
- 'நுகர்' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை எழுதுக.
- விடை: நுகர்தல்
- 'காட்சி' என்னும் தொழிற்பெயர் எவ்வாறு பிரியும்?
- விடை: காண் + சி
- 'வா' என்னும் வேர்ச்சொல் எவ்வாறு வினையாலணையும் பெயராய் அமையும்?
- விடை: வந்தவன்
- 'புகலீர்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் பிரிக்கும் முறை யாது?
- விடை: புகல் + ஈர்
- 'காணீர்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் பிரிக்கும் முறை யாது?
- விடை: காண் + ஈர்
- 'ஆர்த்த' என்பதன் சரியான பகுபத உறுப்பிலக்கணம் யாது?
- விடை: ஆர் + த் + த் + அ
- 'பெய்த' என்பதன் சரியான பகுபத உறுப்பிலக்கணம் யாது?
- விடை: பெய் + த் + த் + அ
- 'நெடுநாவாய்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
- விடை: நெடுமை + நாவாய்
- 'பச்சூன்' என்பதைப் பிரித்து எழுதுக.
- விடை: பசுமை + ஊன்
- 'பெரியன்' என்பதைப் பிரித்து எழுதுக.
- விடை: பெருமை + அன்
- 'வெந்நீர்' என்பதைப் பிரித்தெழுதுக.
- விடை: வெம்மை + நீர்
- 'அறைந்தறைந்து' என்பதைப் பிரித்தெழுதுக.
- விடை: அறைந்து + அறைந்து
- 'ஈராறாண்டு' என்பதை எவ்வாறு பிரித்தெழுதலாம்?
- விடை: இரண்டு + ஆறு + ஆண்டு
- 'எந்தாய்' என்பதைப் பிரித்தெழுதுக.
- விடை: எம் + தாய்
- 'வெஞ்சுடர்' என்பதைப் பிரித்தெழுதுக.
- விடை: வெம்மை + சுடர்
- 'இன்னரும்பொழில்' என்பதைப் பிரித்தெழுதுக.
- விடை: இனிமை + அருமை + பொழில்
- 'விளம்பல்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.
- விடை: தொழிற்பெயர்
- 'முக்கண்ணன்' என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?
- விடை: காரணச் சிறப்புப் பெயர்
- 'நீளம்' என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?
- விடை: பண்புப்பெயர் (குணப்பெயர்)
- 'பரல்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.
- விடை: பொருட்பெயர்
- 'கொற்கை' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.
- விடை: இடப்பெயர்
- 'கழல் பணிந்தான்' இதில் கழல் என்பது எவ்வகை ஆகுபெயர்?
- விடை: தானியாகு பெயர்
- 'மல்லிகை மாலை' என்பது எவ்வகை ஆகுபெயர்?
- விடை: பொருளாகு பெயர்
- 'எண்பொருள்' என்பதன் எதிர்ச்சொல் யாது?
- விடை: நுண்பொருள்
- 'செய்தக்க' என்பதன் எதிர்ச்சொல் யாது?
- விடை: செய்யாமை
- 'தலையாயது' என்பதன் எதிர்ச்சொல் யாது?
- விடை: கடையாயது
- "கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு" இத்தொடரில் இடம்பெற்ற அளபெடை எது?
- விடை: செய்யுளிசை அளபெடை
- 'பகலவனைக் கண்ட பனி போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
- விடை: துன்பம் நீங்குதல்
- 'ஊமை கண்ட கனவு போல' உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது?
- விடை: தவிப்பு கூற இயலாமை
- 'மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல' என்ற உவமையின் பொருள் யாது?
- விடை: மயங்குதல்
- 'கனியிருக்க காய் விரும்பியது போல' என்ற உவமைக்கு ஏற்ற பொருள் யாது?
- விடை: அறியாமை
- 'நட்டன்' என்பதன் பொருள் யாது? (நட்டனைத் தொழ நம்வினை நாசமே)
- விடை: நண்பன் / இறைவன் (சிவன்)
- கடிகை என்பதன் பொருள் யாது?
- விடை: அணிகலன்
- 'கரி' என்பதன் பொருள் யாது?
- விடை: யானை
- 'நவ்வி' என்பதன் பொருள் யாது?
- விடை: மான்
- 'புனல்' என்பதன் பொருள் யாது?
- விடை: நீர்
- 'மடங்கல்' என்னும் சொல்லின் பொருள் யாது?
- விடை: சிங்கம்
- வாய்மை எனப்படுவது யாது?
- விடை: தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
- "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" இத்தொடர் உணர்த்தும் பொருள் யாது?
- விடை: உணவு அளித்தவர் உயிர் அளித்தவர் ஆவர்
- எதுகைத் தொகையின் இலக்கணம் யாது?
- விடை: இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
- Sandal என்ற ஆங்கிலச்சொல்லுக்கான தமிழ் பொருள் யாது?
- விடை: செருப்பு
- Ancestor என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் யாது?
- விடை: முன்னோர்
- குறிஞ்சி நிலத்துக்குரிய உரிப்பொருள் யாது?
- விடை: புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
- முல்லை நிலத்துக்குரிய உரிப்பொருள் யாது?
- விடை: இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
- மருதம் நிலத்துக்குரிய உரிப்பொருள் யாது?
- விடை: ஊடலும் ஊடல் நிமித்தமும்
- நெய்தல் நிலத்துக்குரிய உரிப்பொருள் யாது?
- விடை: இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
- கல்லணை யாரால் கட்டப்பட்டது?
- விடை: கரிகாலனால்
- தமிழ்நாட்டின் சுதேச இயக்க தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
- விடை: வ.உ.சிதம்பரம் பிள்ளை
- "ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது" என்றவர் யார்?
- விடை: அண்ணல் அம்பேத்கர்
- ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு எது?
- விடை: 1886
- திருக்குறளில் "ஏழு" என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
- விடை: 08
- 'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்' என்று சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?
- விடை: இளங்கோவடிகள்
- குரூக், மால்தோ, பிராகுயி என்பன எவ்வகை மொழிகள்?
- விடை: வடதிராவிட மொழிகள்
| எண் | நூல்/கவிதை நூல் | ஆசிரியர் |
|---|---|---|
| 79 | வேங்கையின் மைந்தன் | அகிலன் |
| 80 | மகாநதி | பிரபஞ்சன் |
| 81 | கோபல்லபுரத்து மக்கள் (நாவல்) | கி. ராஜநாராயணன் |
| 82 | சில நேரங்களில் சில மனிதர்கள் | ஜெயகாந்தன் |
| 83 | சித்திரப்பாவை (நாவல்) | அகிலன் |
| 84 | அலையோசை | கல்கி |
| 85 | கண்ணீர்ப் பூக்கள் | மு.மேத்தா |
| 86 | இன்னொரு தேசிய கீதம் | வைரமுத்து |
| 87 | பால்வீதி (கவிதை நூல்) | அப்துல் ரகுமான் |
| 88 | முள்ளும் மலரும் | உமா சந்திரன் |
| 89 | அகல் விளக்கு | டாக்டர் மு.வ. |
| 90 | கலிங்கத்துப்பரணி | சயங்கொண்டார் |
| 91 | சிறுபஞ்சமூலம் | காரியாசான் |
| 92 | ஜீவகாருண்ய ஒழுக்கம் | வள்ளலார் |
| 93 | ஒரு கிராமத்து நதி (சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்) | கவிஞர் சிற்பி |
| 94 | நூறாசிரியம் (கவிதை நூல்) | கவிஞர் பெருஞ்சித்திரனார் |
| 95 | நெடுநீர்வாய்க் கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார் (இடம் பெறும் நூல்) | கம்பராமாயணம் |
- இயற்கை கவிதை தத்துவ அறிஞர் எனப் போற்றப்படுபவர் யார்?
- விடை: தாகூர்
- கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
- விடை: எத்திராசு
- கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன?
- விடை: ராசகோபால்
- கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
- விடை: சுப்புரத்தினம்
- "எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" எனக் கூறியவர் யார்?
* விடை: பாவாணர் (தேவநேயப்பாவாணர்)


0 Comments