தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் குறித்த வினாக்களும் விடைகளும்
அறிவியல், சமயம் மற்றும் வரலாறு
- "மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்" என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல் எது? - திருவாசகம்
- திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது? - திருவெழுக்கூற்றிருக்கை
- சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்? - நச்சினார்க்கினியர்
- சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து அரங்கேறிய நூல் எது? - திருவிளையாடற்புராணம்
- சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப் பட்ட இடம் எது? - திருவெண்ணெய் நல்லூர்
- ஆதிசங்கரர் 'திராவிட சிசு' என்று குறிப்பிட்டவர் யார்? - திருஞானசம்பந்தர்
- 'முக்தி நூல்' என அடைமொழி கொண்ட நூல் யாது? - சீவக சிந்தாமணி
- 'தமிழ் மூவாயிரம்' என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது? - திருமந்திரம்
- யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன்முதலில் பிச்சையேற்றாள்? - அறவணவடிகள்
- ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்? - ஆங்கிலம்
- நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது? - 2004
- 'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்? - வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
- சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது எந்தக் காண்டம்? - நுபுவத்துக் காண்டம்
- 'தேம்பாவணி' நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை எத்தனை? - 36 படலங்கள்
- அகழாய்வில் 'முதுமக்கள் தாழிகள்' கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது? - ஆதிச்சநல்லூர்
- 'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்? - ஒட்டக்கூத்தர்
- பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது? - திருப்பாவை
- 'கூடற்தமிழ்' என அடைமொழி பெற்ற நூல் எது? - மதுரைக்காஞ்சி
- 'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது? - குறுந்தொகை
- 'குட்டித் திருவாசகம்' எனும் அடைமொழியை கொண்ட நூல் யாது? - திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
- 'திருத்தொண்டர் மாக்கதை' எனும் அடைமொழியால் அழைக்கப்பெறும் நூல் யாது? - பெரிய புராணம்
- 'சின்னூல்' என்ற அடைமொழி கொண்ட நூல் யாது? - நேமிநாதம்
- 'புலவராற்றுப்படை' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது? - திருமுருகாற்றுப்படை
- 'மணநூல்' என அழைக்கப்பெறும் நூல் எது? - சீவகசிந்தாமணி
- 99 மலர்களைக் கொண்ட நூல் யாது? - குறிஞ்சிப்பாட்டு
- குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது? - நீலகேசி
- இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது? - அபிதான சிந்தாமணி
- 'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்? - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- 'ரூபாயத்' என்பதன் பொருள் என்ன? - நான்கடிச் செய்யுள்
- 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' எனப் பாடியவர் யார்? - மோசிகீரனார்
- புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்? - பாரதம் பாடிய பெருந்தேவனார்
- நற்றிணைப் பாடல்களைத் தொகுப்பித்தவர் யார்? - பன்னாடு தந்த மாறன் வழுதி
- 'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம் எது? - பழமொழி நானூறு
- 'குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே' எனப் பொருள்படும் நூல் யாது? - இனியவை நாற்பது
- போர்க்களம் பாடுதல் என்ற துறையைச் சார்ந்த புறநூல் எது? - களவழி நாற்பது
- கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம் எது? - சுந்தர காண்டம்
- வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது? - தொன்னூல் விளக்கம்
- 'செய்' என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு. - செய்தவன்
- கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும் எவ்வகைத் தளை? - வஞ்சித்தளை
- 'மூதூர்' என்பது எத்திணைக்குரிய ஊர்? - மருதம்
- 'விருந்து' எனும் சொல்லின் இலக்கணம் யாது? - பண்பாகுபெயர்
- 'முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை' என்ற விடைக்கேற்ற வினாவைத் தேர்க. - கடல் கடந்து செல்லக்கூடாதவர் யார்?
- 'யாழ் கேட்டு மகிழ்ந்தாள்' இவ்வாக்கியத்தில் 'யாழ்' என்பது எவ்வகை ஆகுபெயர்? - கருவியாகு பெயர்
- 'ஏற்பாடு' என்பதன் பொருள் என்ன? - சூரியன் மறையும் நேரம்
- 'வள்ளைக்கு உறங்கும் வளநாட' - இதில் 'வள்ளை' என்பதன் பொருள் யாது? - நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
- 'நான்மணிமாலை' என்ற சொற்றொடர் குறிப்பது எவற்றை? - முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
- "உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்" - இத்தொடரைக் கூறியவர் யார்? - கம்பர்
- "எறும்பும் தன்கையில் எண் சாண்" எனப்பாடியவர் யார்? - ஔவையார்
- காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்? - அழகிய சொக்க நாதர்
- "ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" - என்று பாடியவர் யார்? - முடியரசன்
- பாரதிக்கு 'மகாகவி' என்ற பட்டம் கொடுத்தவர் யார்? - வ.ரா
- "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன" - இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்? - வல்லிக்கண்ணன்
- "வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்" - இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது? - இராசேந்திரன்
- "திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக் கூறியவர் யார்? - கி.ஆ.பெ.விசுவநாதம்
- துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்? - பெருஞ்சித்திரனார்
- 'அழுது அடியடைந்த அன்பர்' என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது? - மாணிக்கவாசகர்
- 'என்றுமுள தென்தமிழ்' என்னும் தொடரை இயம்பியவர் யார்? - கம்பர்
- 'ஷெல்லிதாசன்' என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்? - சுப்பிரமணிய பாரதியார்
- "திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்? - இராஜாஜி
- "ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்? - டி.கே.சிதம்பரம்
- "சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது" - எனப் பாடியவர் யார்? - மருதகாசி
- உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது? - தேன்மழை
- தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்? - நம்மாழ்வார்
- "சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்” எனக் கூறியவர் யார்? - காந்தியடிகள்
- உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழின் பெயர் என்ன? - தமிழ்ச்சிட்டு
- 'தமிழ்த்தென்றல்” என அழைக்கப்படுபவர் யார்? - திரு.வி.கல்யாணசுந்தரனார்
- மதுரகவி என அழைக்கப்பட்டவர் யார்? - பாஸ்கரதாஸ்
- 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி' என்று தொடங்கும் பாடலில் பயின்று வரும் முரண் சொற்கள் எவை? - உண்மை - இன்மை
- 'தொண்டர் சீர் பரவுவார்' என்று வழங்கப்படுபவர் யார்? - சேக்கிழார்
- "நாடக உலகின் இமயமலை” எனப் போற்றப்படுபவர் யார்? - சங்கரதாஸ் சுவாமிகள்
- 'விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்' - இதற்கு ஏற்ற வினா என்ன? - விருத்தம் பாடுவதில் உயர்ந்தவர் யார்?
- "பகுத்தறிவு கவிராயர்" என அழைக்கப்படுபவர் யார்? - உடுமலை நாராயணக்கவி
- மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன் யார்? - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
- கம்பரைப் புரந்தவர் (ஆதரித்தவர்) யார்? - சடையப்ப வள்ளல்
- 'புலனழுக்கற்ற அந்தணாளன்' - எனப் பாராட்டப்படுபவர் யார்? - கபிலர்
- "வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து" எனத் திருக்குறளைப் பாராட்டியவர் யார்? - பரணர்
- அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது? - வளர்பிறையைப் போன்றது
- 'விடிவெள்ளி' என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர் யார்? - ஈரோடு தமிழன்பன்
- இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப் படுகிறவர் யார்? - சீர்காழி சீ.இரா. அரங்கநாதன்
- "ஞானபோதினி" என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்? - மு.சி. பூர்ணலிங்கம்
- முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்? - குமர குருபரர்
- மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர் யார்? - தி. ஜானகிராமன்
- திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது? - எனது இலங்கைச் செலவு
- திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது? - சித்திரக்கவி
- இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி (பாரத ரத்னா)" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது? - 1990
- 'கோவலன் பொட்டல்' என வழங்கப்படும் இடம் எது? - கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
- 'கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல' - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது? - துன்பம்
- 'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள் என்ன? - வீணாதல்
- 'Pirate' - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் என்ன? - கடற்கொள்ளையர்
- 'தில்லானா மோகனாம்பாள்' என்ற நாவலை எழுதியவர் யார்? - கொத்தமங்கலம் சுப்பு
- 'பார்த்திபன் கனவு' என்ற வரலாற்றுப் புதினத்தின் ஆசிரியர் யார்? - கல்கி
- 'வேருக்கு நீர்' என்னும் புதினத்திற்காக விருது பெற்றவர் யார்? - இராஜம் கிருஷ்ணன்
- "யவனர்" எனப் பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர் யார்? - கிரேக்கர், உரோமானியர்
- தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்துப் பொருட்கள் எவை? - பட்டும், சருக்கரையும்
- "பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்" - இத்தொடருக்கு ஏற்ற வினா என்ன? - இகழ்வாரைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?
- "மன்னுயிர்க் கெல்லாம் வரம் மரம்தாள்" - இத்தொடரால் அறியப்படுவது என்ன? - மன்னுயிர்க்கு வரம் எது
- "ஈன்று புறந் தருதல் என்தலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே" - இப்பாடலில் வந்துள்ள தொடை எது? - அடி எதுகையும் அடிஇயைபும் வந்துள்ளன
- "கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்" - இத்தொடருக்கு ஏற்ற வினா எது? - கீழிருந்தும் கீழல்லார் யார்?


0 Comments