அரசியல் அறிவியல் 100 வினா விடை Political Science Part - 5
- தலையிடா அரசு முறைக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்கள் யாவை? விடை : பொலிஸ் அரசு அல்லது இரவுக்காவலாளி.
- நலன்புரி அரசு பொருளாதாரத்தில் எவ்வாறான பங்கினை வகிக்கின்றது? விடை : பொருளாதார முகாமைத்துவ முகவராகச் செயற்படுகின்றது.
- நலன்புரி அரசின் தோற்றத்திற்கு ஏதுவாய் அமைந்த ஒரு காரணி யாது? விடை : கம்யூனிசத்தின் எழுச்சி மற்றும் மக்களின் தேவைப் பெருக்கம்.
- குறைந்தபட்ச அரசு கொள்கையைப் பின்பற்றிய நாடுகள் யாவை? விடை : பிரித்தானியா மற்றும் அமெரிக்கா.
- குறைந்தபட்ச அரசு கொள்கை தோற்றம் பெறக் காரணம் என்ன? விடை : அரசிற்குப் பொருளாதார நெருக்கடி நிலை உருவானமை.
- "மிக மதிப்பு" (Surplus Value) என்பதன் பொருள் யாது? விடை : தொழிலாளர்களின் ஊதியத்தைக் காட்டிலும் முதலாளிகள் அதிக இலாபம் ஈட்டுவது.
- சோசலிச சமூகத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை? விடை : கம்யூனிச சமூகம் அல்லது பொதுவுடைமை சமூகம்.
- முதலாளித்துவ சமுதாயத்தின் நோக்கம் என்ன? விடை : கூடிய வேலை நேரம் மற்றும் அதிக இலாபம் ஈட்டுதல்.
- இயங்கியற் பொருள் முதல்வாதத்தின் மூன்று கோள்கள் எவை? விடை : முதல் கோள், முரண் கோள் மற்றும் முற்றுக் கோள்.
- காள்மாக்ஸின் கோட்பாட்டிற்குச் செயல் வடிவம் கொடுத்த சீன அறிஞர் யார்? விடை : மா ஓ சேதுங்.
- 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியை வேறு எவ்வாறும் அழைப்பர்? விடை : கம்யூனிச புரட்சி அல்லது லெனினிச புரட்சி.
- பூஸ்வாக்கள் வர்க்கத்தினரின் இரு பிரிவுகள் எவை? விடை : மிகச் செல்வம் மிக்க பூஸ்வாக்கள் மற்றும் சிறிய பூஸ்வாக்கள்.
- தனிக்கட்சி ஆதிக்கம் நிலவுகின்ற சோசலிச நாடு எது? விடை : கியூபா அல்லது சீனா.
- மாக்சிசக் கொள்கையை அடியொற்றிய இரு பிரதான கொள்கைகள் யாவை? விடை : லெனினிசம் மற்றும் மாவோயிசம்.
- சோசலிச அரசுக் கொள்கையின் ஒரு குறைபாடு யாது? விடை : தனிநபர்களின் சுதந்திரமான செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படல்.
- பாசிஸ ஆட்சி முறை ஜேர்மனியில் எந்த ஆண்டு தோற்றம் பெற்றது? விடை : 1933 ஆம் ஆண்டு.
- பாசிஸ அரசு முறையைச் சிறப்பித்துக் கூறும் இத்தாலிய நூல் எது? விடை : இத்தாலிய களைக்களஞ்சியம்.
- முசோலினியின் பாசிஸக் கட்சி எப்போது இத்தாலியில் உருவானது? விடை : 1922 ஆம் ஆண்டு.
- வைமர் எனப்படும் கூட்டாட்சி முறை எந்த நாட்டிற்கு இழுக்கை ஏற்படுத்தியது? விடை : ஜேர்மனிய அரசு.
- கிட்லர் ஜேர்மனியில் பொறுப்பேற்றுக்கொண்ட இரு முக்கிய பதவிகள் யாவை? விடை : சான்சளர் (பிரதமர்) மற்றும் ஜனாதிபதி.
- படிமுறை வளர்ச்சி கோட்பாட்டிற்கு வழங்கப்படும் மற்றொரு பெயர் என்ன? விடை : சமூக அபிவிருத்தி கோட்பாடு.
- மதத்தின் ஆதிக்கம் அரசியலில் காணப்படுவதற்கு உதாரணமாகத் திகழும் நாடுகள் எவை? விடை : தென் ஆசிய மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகள்.
- தந்தைவழிக் கோட்பாட்டினைச் சிறப்பித்துக் கூறும் நூல்கள் யாவை? விடை : புராதன சட்டம் மற்றும் நிறுவனங்களின் ஆரம்பகால வரலாறு.
- தாய்வழி கோட்பாடு பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் யாவர்? விடை : மெக்லெனன் மற்றும் மோர்கன்.
- தாய்வழிக் கோட்பாட்டில் பெண்களுக்கு உரித்தான அதிகாரங்கள் யாவை? விடை : திருமண உறவு மற்றும் வாரிசு உரிமையினைத் தீர்மானித்தல்.
- "இறைவனிடம் இருந்து வருகின்ற அதிகாரத்தைப் பிரஜைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியவர் யார்? விடை : சென் போல்.
- "மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகப் பிறக்கின்றான்" எனக் கூறியவர் யார்? விடை : ரூசோ.
- "மனித வாழ்வு வேதனை, மகிழ்ச்சி எனும் இரு எஜமான்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது" எனக் கூறியவர் யார்? விடை : ஜெரமி பெந்தம்.
- "ஆண்களின் கடமை போர் புரிதல், பெண்களின் கடமை மகப்பேறு" எனக் கூறியவர் யார்? விடை : முசோலினி.
- "அரசியல் முறையும் விஞ்ஞானமும்" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : ஜோர்ஜ் கெட்லின்.
- "இங்கிலாந்தின் அரசியல் சிந்தனை" என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை : பார்கர்.
- இறைமை அதிகாரம் பற்றி ஆய்வு செய்த முன்னோடி ஆய்வாளர் யார்? விடை : ஜோன் ஒஸ்ரின்.
- "சட்டவியலுக்கான சொற்பொழிவுகள்" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : ஜோன் ஒஸ்ரின்.
- இறைமை அதிகாரத்தின் ஒரு முக்கிய பண்பு யாது? விடை : வரம்பற்றது மற்றும் பிரிக்க முடியாதது.
- அக இறைமையைப் பாதிக்கும் காரணி ஒன்று யாது? விடை : உள்நாட்டு குழப்பங்கள்.
- இறைமையின் உறைவிடமாக ரூசோ குறிப்பிடுவது எதனை? விடை : பொதுச்சித்தம்.
- அதிகாரம் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட சிந்தனையாளர்கள் யாவர்? விடை : மாக்கியவள்ளி மற்றும் தோமஸ் கொப்ஸ்.
- அதிகாரப் பிரிவினை பற்றிச் சிறப்பித்துக் கூறும் "குடியரசு" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : ஜீன்போடின்.
- அதிகாரப்பிரிவினை கோட்பாட்டைப் பின்பற்றுவதால் ஏற்படும் பயன் யாது? விடை : மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மதிக்கப்படும்.
- சமநிலை தலையீடு எனும் கோட்பாடு தற்காலத்தில் பின்பற்றப்படும் நாடுகள் யாவை? விடை : ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரித்தானியா.
- அதிகார பரவலாக்கம் என்பது எதனைக் குறிக்கும்? விடை : மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரங்களைப் பிரதேசங்களுக்குச் செறிவடையச் செய்வது.
- "அரசியலில் பகுத்தறிவுவாதம்" என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை : மைக்கள் ஒக்சொட்.
- "அரசு எதிர் மனிதன்" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : ஸ்பென்ஸர்.
- அரசியல் யாப்பு விதிகளை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை? விடை : கடந்தகால சட்ட விதிகள் மற்றும் மரபுகள்.
- அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படும் ஒரு சந்தர்ப்பம் யாது? விடை : காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெறும் போது.
- தற்காலத்திற்கு அதிகம் பொருத்தப்பாடுடைய அரசியல் யாப்பு எது? விடை : ஒற்றையாட்சி அல்லது சமஸ்டியாட்சி யாப்பு.
- யாப்புறுவாதம் நிலவுவதற்கு இருக்க வேண்டிய பண்பு யாது? விடை : யாப்புறு பக்தி.
- தாராண்மைவாத யாப்பு முறையின் பிரதான பண்பு யாது? விடை : மக்கள் இறைமை அங்கீகரிக்கப்பட்டிருத்தல்.
- சமதர்ம யாப்பின் ஒரு இயல்பு யாது? விடை : ஒரு கட்சி ஆட்சி முறையும் அக்கட்சியின் ஏகாதிபத்தியமும்.
- பாசிஸவாத யாப்பின் பண்பு யாது? விடை : தனியொருவரால் பிரயோகிக்கப்படும் சர்வாதிகார ஆட்சி.
- ஒற்றையாட்சி முறையின் ஒரு பிரதிகூலம் யாது? விடை : பல்லின சமுதாயம் வாழ்கின்ற நாடுகளுக்குப் பொருத்தமற்றது.
- சமஸ்டியாட்சி முறை பற்றி விளக்கிய கெமில்டனின் நூல் எது? விடை : சமஸ்டி அறிக்கைகள்.
- சமஸ்டியாட்சி முறையின் ஒரு நன்மை யாது? விடை : வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமையினை கட்டியெழுப்புதல்.
- கூட்டுசமஸ்டி (Confederation) என்பதன் விளக்கம் யாது? விடை : இறைமையுடைய பல அரசுகள் பொதுப் பாதுகாப்பு கருதி ஒன்றுபடுவது.
- தற்காலத்தில் சிறப்புற்று விளங்கும் கூட்டுசமஸ்டி அமைப்பு எது? விடை : சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் அல்லது ஐரோப்பிய யூனியன்.
- ஜனாதிபதித்துவ ஆட்சி முறையைப் பின்பற்றும் நாடுகள் யாவை? விடை : அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்.
- ஜனாதிபதித்துவ ஆட்சி முறையின் ஒரு பிரதிகூலம் யாது? விடை : ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்சி இடம்பெற வாய்ப்புண்டு.
- மந்திரிசபை ஆட்சி முறைக்கு எதிராகக் கூறப்படும் ஒரு கருத்து யாது? விடை : இது ஒரு உறுதியற்ற அரசாங்க முறையாகும்.
- மந்திரிசபை ஆட்சி முறையைப் பின்பற்றும் ஆசிய நாடு எது? விடை : இந்தியா.
- கலப்பு அரசாங்க முறைமையின் ஒரு அனுகூலம் யாது? விடை : பல்லினத் தன்மையுடைய மக்கள் வாழும் நாடுகளுக்குப் பொருத்தமானது.
- மொரிஸ்டுவேஜர் அரசியல் கட்சிகளை எவ்வாறு வகைப்படுத்தியுள்ளார்? விடை : காடர் கட்சி மற்றும் மகாஜன கட்சி.
- அரசியல் கட்சியின் ஒரு முக்கிய பணி யாது? விடை : பொதுஜன அபிப்பிராயங்களை ஒன்று திரட்டுதல்.
- ஒருகட்சி முறை நிலவியமைக்கு வரலாற்று ஆதாரம் யாது? விடை : 1933 இல் ஜேர்மனில் நிலவிய நாஜிக்கட்சி.
- இரு கட்சி முறையில் சிறுபான்மையினக் கட்சிகளுக்கு ஏற்படும் பாதிப்பு யாது? விடை : சிறுபான்மையினக் கட்சிகள் பிரதிநிதித்துவம் பெறுவது தடுக்கப்படுகின்றது.
- காடர் கட்சிகள் (Cadre Parties) என்பவை எவை? விடை : தேர்தல் காலங்களில் மாத்திரம் செயற்படும் பலவீனமான கட்சிகள்.
- எதிர்க்கட்சியின் ஒரு பிரதான பணி யாது? விடை : ஆளுங்கட்சியின் செயற்பாட்டில் விழிப்புணர்வுடன் இருத்தல்.
- அமுக்கக் குழுக்கள் (Pressure Groups) என்பவை எவை? விடை : அதிகாரத்தைக் கைப்பற்றாது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து நோக்கங்களை நிறைவேற்றுபவை.
- இலங்கையிலுள்ள ஓர் அமுக்கக் குழுவின் பெயர் யாது? விடை : பொதுபல சேனா அல்லது பிக்குமார் சம்மேளனம்.
- அமுக்கக் குழுவுக்கும் அரசியல் கட்சிக்கும் உள்ள வேறுபாடு யாது? விடை : கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும், அமுக்கக்குழு நலன்களைப் பேண முயலும்.
- பொதுசன அபிப்பிராயம் (Public Opinion) என்பது எதனைக் குறிக்கும்? விடை : பொது மக்களால் வெளிப்படுத்தப்படும் அரசியல் ரீதியான கருத்துக்களின் தொகுப்பு.
- பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்கும் ஒரு முகாம் எது? விடை : பத்திரிகைகள் அல்லது ஊடகங்கள்.
- ஆர்வக்குழுக்களின் (Interest Groups) பிரதான பணி யாது? விடை : உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் பேணல்.
- "எமிலி" (Emile) என்ற நூலை எழுதியவர் யார்? விடை : ஜீன் ஜக்யூ ரூசோ.
- "சனத்தொகை" (Population) என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை : மல்தூஸ்.
- ஓரவைச் சட்டமன்றத்திற்கு (Unicameral) ஆதரவான ஒரு கருத்து யாது? விடை : காலதாமதம் தவிர்க்கப்பட்டுச் சட்டங்கள் இயற்றப்படும்.
- ஈரவைச் சட்டமன்றம் (Bicameral) நிலவும் நாடு எது? விடை : பிரித்தானியா அல்லது அமெரிக்கா.
- நீதித்துறை சுதந்திரம் என்பது எதனைக் குறிக்கும்? விடை : பிறதுறைகளின் கட்டுப்பாடின்றி நீதித்துறை கடமைகளை நிறைவேற்றுதல்.
- நீதிப்புணராய்வு அதிகாரம் (Judicial Review) என்பதன் விளக்கம் யாது? விடை : சட்டத்துறை இயற்றும் பாதகமான சட்டங்களைத் தடுத்துப் பரிசீலனை செய்யும் அதிகாரம்.
- தற்கால அரசுகளில் ஏன் பிரதிநிதித்துவ முறை தேவைப்படுகின்றது? விடை : நிலப்பரப்பு அதிகரிப்பு மற்றும் சனத்தொகை பெருக்கம்.
- பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறையின் ஒரு பண்பு யாது? விடை : ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு நிலவுதல்.
- சாதாரண பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படும் நாடு எது? விடை : அமெரிக்கா அல்லது கனடா.
- விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் ஒரு பண்பு யாது? விடை : பல அரசியற்கட்சி முறையினை ஊக்குவிக்கின்றது.
- கலப்பு பிரதிநிதித்துவ முறை நிலவும் நாடு எது? விடை : ஜேர்மன்.
- "கேர் முறை" (Hare System) என அழைக்கப்படும் பிரதிநிதித்துவ முறை எது? விடை : தனிமாற்று வாக்கு முறை.
- ஒப்பங்கோடல் (Referendum) என்பது எதனைக் குறிக்கும்? விடை : அரசாங்கத் தீர்மானங்கள் பற்றி மக்களின் கருத்தை அறிய நடத்தப்படும் தேர்தல்.
- திருப்பியழைத்தல் (Recall) முறையினைப் பின்பற்றும் நாடு எது? விடை : சுவிட்சர்லாந்து அல்லது அமெரிக்கா.
- சிவில் சமூகம் என்பதற்கு வழங்கப்படும் வரைவிலக்கணம் யாது? விடை : அரசு, குடும்பம், சந்தை தவிர்ந்த ஏனைய அமைப்புக்களின் ஒருங்கினைப்பு.
- அரசியல் சமூகமயமாக்கல் பற்றி கருத்துக் கூறிய ஆய்வாளர் யார்? விடை : பிரட் கிறீன்ஸ்டைன்.
- அரசியல் கலாசாரத்தின் இரு வகைகள் யாவை? விடை : குறுகிய அரசியல் கலாசாரம் மற்றும் பங்கேற்பு அரசியல் கலாசாரம்.
- வன்முறை என்பது எதனைக் குறிக்கும்? விடை : பௌதீக ரீதியான காயப்படுத்தல்.
- அரசியல் உயர்குழாம் வகுப்பு பற்றி ஆய்வு செய்த சிந்தனையாளர் யார்? விடை : வில்பிரடோ பரேடோ.
- அரசியல் நவீணத்துவம் (Political Modernization) என்பது என்ன? விடை : அரசியலில் துரித வளர்ச்சி மற்றும் ஜனநாயகத் தன்மை போன்ற மாற்றங்கள்.
- தீவிர பெண்ணியத்தைச் சிறப்பித்துக் கூறும் ஒரு நூல் எது? விடை : THE FEMALE EUNCH.
- பசுமை அரசியல் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர் யார்? விடை : றேசல் கார்சன்.
- பசுமை அரசியலை மையப்படுத்தி உருவான முதல் பசுமைக்கட்சி எது? விடை : 1972 அவுஸ்திரேலிய பசுமைக்கட்சி.
- ஜனநாயகம் சரியாகச் செயற்பட இருக்க வேண்டிய ஒரு நிபந்தனை யாது? விடை : சுதந்திரமான ஊடகங்கள்.
- மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசு மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கை யாது? விடை : மனித உரிமைகள் ஆணைக்குழுவினைத் தாபித்தல்.
- சட்டம் என்பதன் வரைவிலக்கணம் யாது? விடை : மனித நடத்தைகளைக் கட்டுப்படுத்த அரசு பிறப்பிக்கும் விதிமுறைகள்.
- பிரித்தானிய அரசியல் யாப்பின் ஒரு சிறப்பியல்பு யாது? விடை : வரையப்படாத நெகிழும் அரசியல் திட்டம்.
- அமெரிக்க அரசியல் திட்டத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? விடை : 07 அத்தியாயங்கள்.


0 Comments