12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 12
12. அ) வெளிக்கருவுறுதல் மற்றும் உட்கருவுறுதல் வேறுபாடுகள் (மார்ச்-2024)
12. ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும் இழப்பு மீட்டல் வகைகள் (மார்ச்-2023)
| எண் | வெளிக்கருவுறுதல் (External Fertilization) | உட்கருவுறுதல் (Internal Fertilization) |
|---|---|---|
| 1 | ஆண், பெண் இனச்செல்களின் இணைவு பெண் உயிரியின் உடலுக்கு வெளியில் நிகழ்கிறது. | ஆண், பெண் இனச்செல்களின் இணைவு பெண் உயிரியின் உடலுக்கு உள்ளேயே நிகழ்கிறது. |
| 2 | எடுத்துக்காட்டுகள்: கடற்பஞ்சுகள், மீன்கள் மற்றும் இருவாழ்விகள். | எடுத்துக்காட்டுகள்: ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள். |
| எண் | பல்லியில் காணப்படும் இழப்பு மீட்டல் | பிளனேரியாவில் காணப்படும் இழப்பு மீட்டல் |
|---|---|---|
| 1 | இது உறுப்பு மீட்பு வகையைச் சார்ந்தது. | இது முழு உருவ மீட்பு வகையைச் சார்ந்தது. |
| 2 | இழந்த உடல் உறுப்புகளை (எ.கா: வால்) மட்டும் மீண்டும் உருவாக்குகிறது. | உடலின் ஒரு சிறிய துண்டுப்பகுதியிலிருந்து முழு உடலையும் மீண்டும் வளர்க்கிறது. |


0 Comments