12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18
கேள்வி 18 : மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்பன யாவை? எடுத்துக்காட்டுகள் தருக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- உயிரிகளின் மரபணுத் தொகுதிக்குள் புதிய (அந்நிய / புறந்தோன்றிய) மிகைப்படியான DNA க்களை நுழைத்து நிலையான மரபியல் மாற்றங்களை விரும்பிய வண்ணம் தோற்றுவிக்கலாம். இதற்கு மரபணு மாற்றம் என்று பெயர்.
- இதனால் தோற்றுவிக்கப்படும் விலங்குகளை மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகள் என்று அழைக்கலாம்.
- எடுத்துக்காட்டாக : சுண்டெலி, எலி, முயல், பன்றி, பசு, வெள்ளாடு, செம்மறியாடு மற்றும் மீன் ஆகியவை.


0 Comments