12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 30
கேள்வி 30 : மரபியல்பு மாற்றப்பட்ட உயிரினங்களால் நேரிடக்கூடிய ஆபத்துகள் யாவை?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- புதிய (அ) கொடிய தீங்குயிரிகள் (ம) நோயூக்கிகளை உருவாக்குவது, மரபணு மாற்றப்பட்ட உயிரிகளைக் கொண்ட இனக்கலப்பு செய்வதன் மூலம் வாழ்ந்து வரும் தீங்குயிரிகளின் விளைவுகளை மேலும் மோசமடையச் செய்தல்.
- இலக்கில் இல்லாச் சிற்றினங்களான மண்ணில் வாழும் உயிரிகள், பறவைகள், மற்றும் பிற விலங்குகளுக்கு ஊறு விளைவித்தல்.
- விவசாய / வேளாண் சூழ்நிலை மண்டலம் உட்பட்ட உயிரிய சமுதாயத்திற்கு இடையூறு செய்தல்.
- சிற்றின பல்வகைத் தன்மை அல்லது சிற்றினங்களுக்குள்ளான மரபியல் பல்வகைமை ஆகியவற்றில் சரி செய்யப்பட்ட இயலாத இழப்பு அல்லது மாற்றங்களை ஏற்படுத்துதல்.
- மனித நலனுக்கு எதிரான இடர்பாடுகளை ஏற்படுத்துதல்.


0 Comments