1. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டமும் இவ்வாறு வரையறுக்கப்படுகிறது.
அ) உயிர்த் தொகை.
ஆ) சூழல் மண்டலம்.
இ) எல்லை.
ஈ) உயிர் காரணிகள்.
விடை : அ) உயிர்த் தொகை.
2. வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் --- என அழைக்கப்படும்.
அ) எக்டோதெர்ம்கள்.
ஆ) மிகைவெப்ப வேறுபாட்டு உயிரிகள்.
இ) எண்டோதெர்ம்கள்.
ஈ) ஸ்டீனோதெர்ம்கள்.
விடை : ஆ) மிகைவெப்ப வேறுபாட்டு உயிரிகள்.
3. இயற்கையில் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்திலிருந்து நன்மைபெறும் உயிரினச் சார்பு.
அ) வேட்டையாடும் வாழ்க்கை.
ஆ) ஒன்றுக்கொன்று உதவும் வாழ்க்கை.
இ) கேடு செய்யும் வாழ்க்கை.
ஈ) உதவி பெறும் வாழ்க்கை.
விடை : ஈ) உதவி பெறும் வாழ்க்கை.
4. வேட்டையாடுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை எந்த வகை உயிரினச் சார்பு?
அ) (+,+).
ஆ) (+, 0).
இ) (-,-).
ஈ) (+,-).
விடை : ஈ) (+,-).
5. சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக ஏற்படுவது.
அ) உயிரின மறைவு.
ஆ) திடீர்மாற்றம்.
இ) தொந்தரவு வாழ்க்கை.
ஈ) கூட்டுயிரி வாழ்க்கை.
விடை : அ) உயிரின மறைவு.
6. கீழ்க்கண்டவற்றுள் - r சிற்றினத்துக்கு உதாரணம்.
அ) மனிதன்.
ஆ) பூச்சிகள்.
இ) காண்டாமிருகம்.
ஈ) திமிங்கலம்.
விடை : ஆ) பூச்சிகள்.
7. சரியாக பொருத்துக
[அ] பகிர்ந்து வாழும் வாழ்க்கை [1] சிங்கம் மற்றும் மான்.
[ஆ] உதவி பெறும் வாழ்க்கை [2] உருளைப்புழு மற்றும் மனிதன்.
[இ] ஒட்டுண்ணி வாழ்க்கை [3] பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல்.
[ஈ] போட்டி வாழ்க்கை [4] கடல் அனிமோன் மற்றும் துறவி நண்டு.
[உ] கொன்றுண்ணி வாழ்க்கை [5] பறவைகளும் பாலூட்டிகளும் விதை பரவுதலுக்கு உதவுதல்.
அ) அ-4 ஆ-5 இ-2 ஈ-3 உ-1
ஆ) அ-3 ஆ-1 இ-4 ஈ-2 உ-5
இ) அ-2 ஆ-3 இ-1 ஈ-5 உ-4
ஈ) அ-5 ஆ-4 இ-2 ஈ-3 உ-1
விடை : அ) அ-4 ஆ-5 இ-2 ஈ-3 உ-1
8. கீழ்க்காணும் வரைபடம் சுற்றுச்சூழல் உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்களின் எதிர்வினையைக் குறிக்கிறது. இதில் அ, ஆ, மற்றும் இ எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றைக் கண்டறிக
| வ.எண் | அ | ஆ | இ |
|---|---|---|---|
| அ | ஒத்தமைவான் | ஒழுங்கமைவான் | பகுதி ஒழுங்கமைவான் |
| ஆ | ஒழுங்கமைவான் | பகுதி ஒழுங்கமைவான் | ஒத்தமைவான் |
| இ | பகுதி ஒழுங்கமைவான் | ஒழுங்கமைவான் | ஒத்தமைவான் |
| ஈ | ஒழுங்கமைவான் | ஒத்தமைவான் | பகுதி ஒழுங்கமைவான் |
விடை : அ] (அ) [ஒத்தமைவான்] (ஆ) [ஒழுங்கமைவான்] (இ) [பகுதி ஒழுங்கமைவான்]
9. உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு.
அ) போட்டி.
ஆ) உதவி பெறும் வாழ்க்கை.
இ) வேட்டையாடும் வாழ்க்கை.
ஈ) ஒட்டுண்ணி வாழ்க்கை.
விடை : ஆ) உதவி பெறும் வாழ்க்கை.
10. கீழ்க்கண்டவற்றுள் r-வகை தேர்வு செய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்துக்கள்.
அ) அதிக எண்ணிக்கையில் சத்ததிகள் மற்றும் சிறிய உருவம்.
ஆ) அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்.
இ) குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம்.
ஈ) குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்.
விடை : அ) அதிக எண்ணிக்கையில் சத்ததிகள் மற்றும் சிறிய உருவம்.
11. நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
அ) ஸ்டீனோதெர்மல்.
ஆ) யூரிதெர்மல்.
இ) கட்டாட்ராமஸ்.
ஈ) அனாட்ராமஸ்.
விடை : இ) கட்டாட்ராமஸ்.
12. சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள்.
அ) ஒத்தமைவான்கள்.
ஆ) ஒழுங்கமைவான்கள்.
இ) வலசைபோகின்றன.
ஈ) செயலற்ற நிலையில் உள்ளன.
விடை : ஆ) ஒழுங்கமைவான்கள்.



0 Comments