12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 14
கேள்வி 14 : வரையறு - சூழலியல் ஒதுக்கிடம்/ சிறுவாழிடம்.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- ஒவ்வொரு உயிரினமும் சுற்றுச்சூழலில் ஒரு குறிப்பிட்ட சிறிய வாழிடத்தைப் பெற்றுள்ளது.
- இந்த வாழிடம் என்பது அந்த உயிரினம் சூழலில் ஆக்கிரமித்துள்ள பௌதிக இடம், அதன் செயற்பாடுகளின் பங்கு, மற்றும் அச்சமுதாயத்தில் அதன் செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- ஒரு உயிரினத்தின் 'சுற்றுச்சூழல் சிறுவாழிடம்' (Ecological Niche) என்பது,
- அது வாழும் சிறிய இடத்தைச் சார்ந்தது மட்டுமல்லாமல்,
- அதன் அனைத்து சுற்றுச்சூழல் தேவைகள் மற்றும்
- அந்தச் சூழலில் அதன் செயல்பாட்டுப் பங்கு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான கருத்தாகும்.


0 Comments