12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 15
கேள்வி 15 : புதிய சூழலுக்கு இணங்கல் என்றால் என்ன?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- விலங்குகள் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாறுபாடுகளுக்கேற்ப தங்கள் எதிர்வினையை குறுகிய காலத்திற்குள் மாற்றியமைத்துக் கொள்கின்றன. இதற்கு இணக்கமாதல் என்று பெயர்.
- எடுத்துக்காட்டு: தரைப்பகுதியில் வாழ்பவர்கள் உயரமான பகுதிக்குச் செல்லும்போது, புதிய சூழலுக்கு உட்பட்ட சில நாட்களுக்குள் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
- இது அவர்களுக்கு வளிமண்டல ஆக்சிஜன் குறைபாடு காரணமாக ஏற்படும் அதிக அளவு ஆக்சிஜன் தேவையைச் சமாளிக்க உதவும்.


0 Comments