12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 23
கேள்வி 23 : உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகளை வகைப்படுத்துக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
உயிரினங்களின் தகவமைப்பு:
- உயிரினங்களை அவற்றின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் பரிணாம நிகழ்வு.
தகவமைப்பின் வகைகள்:
- உடல் அமைப்பு சார்ந்த தகவமைப்புகள்
- நடத்தை சார்ந்த தகவமைப்புகள்
- உடற்செயலியல் சார்ந்த தகவமைப்புகள்
உடல் அமைப்பு சார்ந்த தகவமைப்புகளின் உதாரணங்கள்:
- குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும் பாலூட்டிகள் அடர்ந்த ரோமத்தைக் கொண்டிருப்பது.
- நிறமாற்றம் மற்றும் ஒப்புமைப்போலி (Mimicry) சிறந்த தகவமைப்பு வழிமுறைகளாகும்.
- பச்சோந்தி மற்றும் குச்சிப்பூச்சி ஆகியவை சூழ்நிலைக்கேற்ப தங்கள் நிறத்தை மாற்றியமைத்துக் கொள்ளுதல்.
- குதிரையின் கால்கள் புல்வெளி மற்றும் சமதளப் பரப்பில் விரைவாக ஓடுவதற்கு ஏற்ற தகவமைப்பைப் பெற்றிருத்தல்.
நடத்தை சார்ந்த தகவமைப்புகளின் உதாரணங்கள்:
- வேட்டையாடிகளிடமிருந்து தப்பித்தல்.
- பாதுகாப்பான இடங்களில் ஓய்வெடுத்தல்.
- காலநிலை மாற்றங்களின்போது தகுந்த புகலிடத்தைத் தேடுதல்.
- உணவு ஆதாரங்களைத் தேடி இடம்பெயர்தல்.
- இனப்பெருக்கத்திற்காக துணையைத் தேடுவது (கலவி).
- இரவில் விழித்திருக்கும் விலங்குகள் பகலில் பூமிக்கு அடியில் வசிப்பது.
உடற்செயலியல் சார்ந்த தகவமைப்புகளின் உதாரணங்கள்:
- சிங்கத்திற்கு உள்ள கோரைப்பற்கள் வேட்டையாடுவதற்கும், இரையைக் கிழிப்பதற்கும் உதவுவது.
- மாமிச உணவைச் செரிப்பதற்கு ஏற்ப செரிமான மண்டலம் காணப்படுதல்.
- குளிர்கால உறக்கம் (Hibernation) மற்றும் கோடைக்கால உறக்கம் (Aestivation) மேற்கொள்ளுதல்.
- இந்தச் செயல்பாட்டின்போது வளர்சிதை மாற்ற விகிதம் குறைதல், நீர் அருந்தாமலும், நீண்ட காலத்திற்கு உணவு அருந்தாமலும் வாழ இயலுதல்.


0 Comments