12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22

கேள்வி 22 : உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்குக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

ஒழுங்கமைத்தல் (Regulate) :

  • சில விலங்குகள் அவற்றின் உடல்செயலியல் வழிமுறைகளின் மூலம் சீரான தன்நிலையை (உடல் வெப்பநிலை, அயனிகள்/ஊடுகலப்பு சமநிலை) நிலைநிறுத்துகின்றன.
  • இதில் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் சில எளிய முதுகெலும்பிகள் மற்றும் முதுகெலும்பற்ற உயிரினங்கள் இடம்பெறுகின்றன.

ஒத்தமைத்தல் (Conform) :

  • பெரும்பாலான விலங்குகளால் அவற்றின் அகச்சூழலை நிலையாகப் பராமரிக்க இயல்வதில்லை.
  • அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுச் சூழலின் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது.
  • நீர்வாழ் உயிரினங்களில், உடல் திரவத்தின் ஊடுகலப்புச் செறிவு சுற்றுச்சூழலில் உள்ள நீரின் ஊடுகலப்புச் செறிவிற்கு இணங்க மாறுகிறது.
  • இவை ஒத்தமைவான்கள் என அழைக்கப்படுகின்றன.

வலசைபோதல் (Migration) :

  • தீவிரமான சூழல் அழுத்தத்திலிருந்து தப்புவதற்காக, விலங்குகள் இடம்பெயர்ந்து புதிய, வாழத்தகுந்த பகுதிகளுக்குச் செல்கின்றன.
  • சூழல் அழுத்தம் நீங்கிய பின்னர், அவை மீண்டும் பழைய வாழ்விடத்திற்குத் திரும்பி வருகின்றன.
  • உதாரணமாக, சைபீரியப் பறவைகள் கடுமையான குளிர் பருவத்திலிருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டிலுள்ள வேடந்தாங்கல் பகுதிக்கு வருகின்றன.

செயலற்ற நிலை (Suspend) :

  • விலங்கினங்கள் இடம்பெயர்ந்து செல்ல இயலாத சூழ்நிலைகளில், சூழல் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக செயலற்ற நிலைத் தன்மையை மேற்கொள்கின்றன.
  • கரடிகள் குளிர்காலங்களில் குளிர் உறக்கத்தையும் (Hibernation), நத்தைகள் மற்றும் மீன்கள் கோடைகால உறக்கத்தையும் (Aestivation) மேற்கொள்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement