12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 20

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 20

கேள்வி 20 : அயல் சிற்றினங்களின் படையெடுப்பு ஓரிட சிற்றினங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றது-வாக்கியத்தை நிருபி.


Answer for obtaining full marks :

  • அந்நிய இனங்கள் தற்செயலாகவோ, வேண்டுமென்றே அல்லது வர்த்தக மற்றும் உயிரி வழிகட்டுபாட்டு நோக்கங்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
  • அவை ஆக்கிரமிப்புத் தன்மையுடன் உள்ளூர் இனங்களை வெளியேற்றுவதால், உயிரின அழிவிற்கு இரண்டாவது முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது.
  • அயல் இனங்கள் நீர் மற்றும் தரை மண்டலங்களுக்குத் தீங்கு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
  • எடுத்துக்காட்டாக, 1952-இல் அறிமுகப்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் கேரளாவின் உள்ளூர் மீன் இனங்களான பன்டியஸ் டூபியஸ் மற்றும் லேபியோ கோண்டியஸ் அழியக் காரணமாகின.
  • ஆப்பிரிக்க பூனை மீன்கள் நம் நாட்டு ஆறுகளில் உள்ள உள்ளூர் பூனை மீன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
  • விக்டோரியா ஏரியில் அறிமுகப்படுத்தப்பட்ட நைல்பெர்ச் மீன்களால் 200-க்கும் மேற்பட்ட தனித்துவமான சிச்லிட் மீன் இனங்கள் அழிந்துவிட்டன.

Answer for Slow Learners :

  • அந்நிய இனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
  • இவை உள்ளூர் இனங்களை வெளியேற்றுவதால், உயிரின அழிவிற்கு இரண்டாவது முக்கிய காரணியாக உள்ளன.
  • உதாரணமாக, 1952-இல் அறிமுகமான திலேப்பியா மீன்கள் கேரளாவின் பன்டியஸ் டூபியஸ், லேபியோ கோண்டியஸ் இனங்கள் அழியக் காரணமாகின.
  • ஆப்பிரிக்க பூனை மீன்கள் உள்ளூர் பூனை மீன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
  • நைல்பெர்ச் மீன்களால் விக்டோரியா ஏரியின் 200-க்கும் மேற்பட்ட சிச்லிட் இனங்கள் அழிந்துவிட்டன.

Previously Asked Questions As follow :

  1. அயல் சிற்றினங்களின் படையெடுப்பு ஓரிட சிற்றினங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது - இவ்வாக்கியத்தை நிரூபிக்கவும். March-2026 (Zoology)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement