12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 24

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 24

கேள்வி 24 : உயிரிய பல்வகைத்தன்மையின் இழப்பிற்கான பல்வேறு காரணங்களை பட்டியலிடுக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • வாழிட இழப்பு, காடுகள் துண்டாடப்படுதல் மற்றும் அழித்தல் (ஏறத்தாழ 73% சிற்றினங்களையும் பாதிக்கிறது).
  • சுற்றுச்சூழல் மாசுறுதல் மற்றும் மாசுபடுத்திகள் (புகை, பனி, தீங்குயிர்க்கொல்லிகள், களைக்கொல்லிகள், எண்ணெய் கசிவுகள், பசுமை இல்ல வாயுக்கள்).
  • தட்பவெப்பநிலை மாற்றம்.
  • வெளிநாட்டு சிற்றினங்களை அறிமுகப்படுத்தல்.
  • வளங்கள் அதிகமாக சுரண்டப்படுதல் (ஆக்கிரமிப்பு, மரங்களை வரையறையின்றி வெட்டுதல், மிகை மீன்பிடிப்பு, வேட்டையாடுதல், சுரங்கங்கள்).
  • தீவிர வேளாண்மை, நீருயிரி வளர்ப்பு நடைமுறைகள்.
  • உள்ளுர் இனங்களுடன் வெளிஇனங்களை இணைத்து கலப்பினம் உருவாக்குதல் உள்ளூர் இனங்கள் அழிதல்.
  • இயற்கை பேரழிவுகள் (ஆழிப்பேரலை, காட்டுத்தீ, நிலநடுக்கம், எரிமலை).
  • தொழில் மயமாக்கம், நகரமயமாக்கம், உட்கட்டமைப்பு வளர்ச்சி, சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து பணிகள், தகவல் தொடர்பு கோபுரங்கள், அணைகட்டுதல், கட்டுபாடற்ற சுற்றுலா ஒற்றை பயிர் சாகுபடி ஆகியவை பொதுவான குறிப்பிட்டதக்க அச்சுறுத்தல்களாகும்.
  • இணை மரபற்றுப்போதல்.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :

  • வாழிட இழப்பு
  • காடுகள் அழிப்பு
  • சுற்றுச்சூழல் மாசுறுதல்
  • தட்பவெப்பநிலை மாற்றம்
  • வெளிநாட்டுச் சிற்றின அறிமுகம்
  • வளங்கள் அதிகச் சுரண்டல் (வேட்டையாடுதல், மிகை மீன்பிடிப்பு, மரங்களை வெட்டுதல்)
  • தீவிர வேளாண்மை
  • நீருயிரி வளர்ப்பு
  • வெளி-உள்ளின கலப்பினமாக்கம்
  • இயற்கை பேரழிவுகள்
  • தொழில்மயமாக்கம்
  • நகரமயமாக்கம்
  • உட்கட்டமைப்பு வளர்ச்சி
  • இணை மரபற்றுப்போதல்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement