12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 23

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 23

கேள்வி 23 : வடகிழக்கு இந்தியாவில் இடம் மாறும் வேளாண்மை பல்வகைத்தன்மையின் முக்கியமான அச்சுறுத்தலாகும்-நிரூபி.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • இடம் மாறும் வேளாண்மை என்பது வடகிழக்கு இந்தியப் பகுதியில் நடைமுறையில் உள்ளது.
  • இயற்கையான மரங்களை கொண்ட வளங்களை எரித்து சுத்தம் செய்து 2-3 பருவத்திற்கு பயிர் சாகுபடி செய்தபின், மண் வளம் குறைந்து இனி பயிர் உற்பத்தியில் அதிக லாபம் ஈட்ட முடியாத நிலை வந்தவுடன் அந்த நிலங்களைக் கைவிட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வர்.
  • அங்கு ஒரு புதிய இடத்தை தேர்வு செய்து மீண்டும் பயிர் உற்பத்திக்கு மரங்களை வெட்டி எரித்து நிலத்தை தயார் படுத்துவர்.
  • இவ்வாறு எரிக்கப்படுவதால் வனத்தின் பரப்பளவு குறைந்து, வெளியேற்றப்படும் CO2 அளவும் அதிகரிக்கிறது.
  • இது வாழிட அழிப்பு மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கின்றது.
  • இது விலங்கினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement