12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 25

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 25

கேள்வி 25 : உயிரியப் பல்வகைத்தன்மையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் ?


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

வன உயிரினப் பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள்:

வன உயிரினப் பாதுகாப்பை உறுதிசெய்ய பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன:

  1. சிற்றினங்களைப் பாதுகாத்தல்:
    • அபாய நிலையில் உள்ள அனைத்து சிற்றினங்களையும் கண்டறிந்து பாதுகாத்தல்.
    • பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாத்தல்.
  2. வாழ்விடப் பாதுகாப்பு:
    • உயிரினங்களின் உறைவிடம், உணவு மற்றும் இனப்பெருக்கப் பகுதிகளைக் கண்டறிந்து பாதுகாத்தல்.
    • உணவு, இனப்பெருக்கம், பேணி வளர்த்தல் மற்றும் ஓய்விடம் ஆகியவற்றுக்கான வாழ்விடங்களில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவைகளைக் கண்டறிந்து பாதுகாத்தல்.
  3. சூழல் பாதுகாப்பு:
    • நிலம், நீர் மற்றும் காற்று ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்தல்.
  4. சட்ட அமலாக்கம் மற்றும் நடைமுறைகள்:
    • வன உயிரினங்களின் பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்துதல்.
    • சூழல் உள் பாதுகாப்பு (In-situ Conservation) மற்றும் சூழல் வெளிப் பாதுகாப்பு (Ex-situ Conservation) ஆகிய இரு முக்கிய பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்துதல்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement