1. பின்வரும் மண்டலங்களில் அதிகபட்ச பல்வகை தன்மை கொண்ட பகுதி எது?
அ) குளிர் பாலைவனம்.
ஆ) வெப்பமண்டல காடுகள்.
இ) மிதவெப்ப மழைக்காடுகள்.
ஈ) சதுப்பு நிலங்கள்.
விடை : ஆ) வெப்பமண்டல காடுகள்.
2. இயற்கையான வாழிடங்களினுள் உயிரிய பல்வகைத்தன்மை பாதுகாப்பு என்பது.
அ) சூழல் உள் பாதுகாப்பு.
ஆ) சூழல் வெளி பாதுகாப்பு.
இ) உடலுள் பாதுகாப்பு.
ஈ) உடல் வெளி பாதுகாப்பு.
விடை : அ) சூழல் உள் பாதுகாப்பு.
3. பின்வருவனவற்றில் எது சூழல் உள் பாதுகாப்பு வகையை சார்ந்தது அல்ல.
அ) புகலிடங்கள்.
ஆ) தேசிய பூங்காக்கள்.
இ) விலங்கியல் பூங்காக்கள்.
ஈ) உயிர்க்கோள காப்பிடம்.
விடை : இ) விலங்கியல் பூங்காக்கள்.
4. பின்வருவனவற்றில் இந்தியாவில் எது மிகை உள்ளூர் உயிரின பகுதி எது?
அ) மேற்கு தொடர்ச்சி மலை.
ஆ) இந்திய-கங்கை சமவெளி.
இ) கிழக்கு இமயமலை தொடர்.
ஈ) அ மற்றும் இ.
விடை : ஈ) அ மற்றும் இ.
5. உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்.
அ) WWF.
ஆ) IUCN.
இ) ZSI.
ஈ) UNEP.
விடை : ஆ) IUCN.
6. உயிரிய பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) எட்வேர்டு வில்சன்.
ஆ) வால்டர் ரோசன்.
இ) நார்மன் மியர்ஸ்.
ஈ) ஆலிஸ் நார்மன்.
விடை : ஆ) வால்டர் ரோசன்.
7. பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது.
அ) இலையுதிர் காடுகள்.
ஆ) வடகிழக்கு இந்தியாவின் மழைக்காடுகள்.
இ) ஊசியிலைக் காடுகள்.
ஈ) அமேசான் காடுகள்.
விடை : ஈ) அமேசான் காடுகள்.
8. வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது?
அ) பாலூட்டிகள்.
ஆ) பறவைகள்.
இ) இருவாழ்விகள்.
ஈ) முட்தோலிகள்.
விடை : இ) இருவாழ்விகள்.
9. கூற்று : வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுச்சூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகை தன்மைக்குச் சாதகமாக உள்ளன.
காரணம் : பருவகாலம், தட்ப வெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.
அ) காரணம் மற்றும் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
ஆ) காரணம் மற்றும் கூற்று சரி, காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை : அ) காரணம் மற்றும் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.


0 Comments