12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18

கேள்வி 18 : பின்வருவனவற்றை பற்றி சுருக்கமாக எழுதுக. அ) வினை வேகமாற்றிகள் . ஆ) சூழல் சுகாதாரக் கழிவறைகள்.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

அ) வினை வேகமாற்றிகள் :

  • இவை மாசுபடுத்தும் வாயுக்களை குறைக்க உதவுகின்றன.
  • வாகனங்களின் டீசல் வெளியேற்று வடிகட்டிகள், துகள்களைக் தடுக்கின்றன.

ஆ) சூழல் சுகாதாரக் கழிவறைகள் :

  • சூழல் சுகாதாரம் என்பது உலர் மட்குக் கழிவறைகளை பயன்படுத்தி மனித கழிவை கையாளும் அமைப்பாகும். இவை கழிவு நீர் உற்பத்தியினை குறைக்கின்றது.
  • மறுசுழற்சி செய்யப்பட்ட மனித கழிவிலிருந்து இயற்கை உரங்களையும் உற்பத்தி செய்கிறது.
  • கழிவிலிருந்து ஊட்டச்சத்துகளை மீட்டல் மற்றும் மறுசுழற்சி என்பதை அடிப்படையாகக் கொண்ட இம்முறை, விவசாயத்திற்கு மதிப்புள்ள பொருட்களை உருவாக்கித் தருகின்றன.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :

  • வினை வேகமாற்றிகள்:
    • மாசுபடுத்தும் வாயுக்களைக் குறைக்கவும், டீசல் வடிகட்டிகள் துகள்களைத் தடுக்கவும் உதவுகின்றன.
  • சூழல் சுகாதாரக் கழிவறைகள்:
    • உலர் மட்குக் கழிவறைகள் மனிதக் கழிவு நீர்ப் பயன்பாட்டைக் குறைக்கின்றன.
    • மறுசுழற்சி மூலம் விவசாயத்திற்கான இயற்கை உரங்களை உருவாக்குகின்றன.
    • ஊட்டச்சத்துகளை மீட்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement