12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 19

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 19

கேள்வி 19 : கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகளை தவிர்க்க சில தீர்வுகளைக் கூறு.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • கப்பல் விபத்து, கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுதல், எண்ணெய் கசிவுகள் வெளியேற்றப்படுதல் ஆகியவற்றால் இது நடைபெறுகிறது.
  • சாக்கடைக் கழிவுகள் ஆற்று நீரில் நேரடியாக கலக்காமல் அதனை மடைமாற்றி சுத்திகரிப்பு நிலையங்களை கொண்டு சுத்திகரித்து, கடலோடு கலக்கசெய்யலாம்.
  • சூடோமோனாஸ் புட்டிடா - என்ற மறுசேர்க்கை பாக்டீரியாக்கள் கடலில் உள்ள எண்ணெய்க் கழிவுகளை ஹைட்ரோகார்பன்களை சிதைக்கின்றன.
  • நெகிழிகளை இடியோனெல்லா சாக்கையன்சிஸ் நுண்ணுயிர்களை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யலாம்.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :

  • கப்பல் விபத்து, எண்ணெய்க் கிணறுகள், கசிவுகளால் மாசுபாடு ஏற்படுகிறது.
  • சாக்கடைக் கழிவுகளைச் சுத்திகரித்து, ஆற்றில் கலக்காமல் கடலில் சேர்க்கலாம்.
  • சூடோமோனாஸ் புட்டிடா பாக்டீரியா எண்ணெய்க் கழிவுகளிலுள்ள ஹைட்ரோகார்பன்களைச் சிதைக்கிறது.
  • இடியோனெல்லா சாக்கையன்சிஸ் நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி நெகிழிகளை மறுசுழற்சி செய்யலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement