1. சுத்தமான குடிநீர்ப் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை, இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
அ) பிரிவு 12.
ஆ) பிரிவு 21.
இ ) பிரிவு 31.
ஈ) பிரிவு 41.
விடை : ஆ) பிரிவு 21.
2. ஸ்ட்ரேட்டோஸ்பியரின் ஓசோன் அடுக்கின் தடிமனை அளவிட பயன்படுவது
அ) ஸீவர்ட்ஸ் அலகு.
ஆ) டாப்சன் அலகு.
இ) மெல்சன் அலகு.
ஈ) பீஃபோர்ட் அளவுகோல்.
விடை : ஆ) டாப்சன் அலகு.
3. 2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன் டைஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் நாடு எது?
அ) அமெரிக்கா.
ஆ) சீனா.
இ) கத்தார்.
ஈ) சவுதி அரேபியா.
விடை : ஆ) சீனா.
4. நீர் நிலைகளில் உள்ள எண்ணெய் கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை பயன்படுத்தும் முறை
அ) உயிரிய உருப்பெருக்கம்.
ஆ) உயிரியத் தீர்வு.
இ) உயிரிய மீத்தேனாக்கம்.
ஈ) உயிரிய சுருக்கம்.
விடை : ஆ) உயிரியத் தீர்வு.
5. பின்வருவனவற்றில் எது உணவுச் சங்கிலிகளின் ஊட்ட நிலைகளை கடக்கும்போது எப்போதும் குறைகின்றது?
அ) எண்ணிக்கை.
ஆ) வேதிப்பொருள்.
இ) ஆற்றல்.
ஈ) விசை.
விடை : இ) ஆற்றல்.
6. கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது?
அ) தாமிரம்.
ஆ) வெள்ளி.
இ) பலேடியம்.
ஈ) தங்கம்.
விடை : அ) தாமிரம்.
7. ஒரு சிறந்த தொற்று நீக்கியாக கழிவுநீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
அ) புற ஊதா கதிர்கள்
ஆ) குளோரின் இடுதல்
இ) கொதிக்க வைத்தல்
ஈ) ஓசோன் சேர்த்தல்
விடை : அ) புற ஊதா கதிர்கள்
8. பனிப்புகை எதிலிருந்து பெறப்படுகிறது?
அ) புகை.
ஆ) மூடுபனி.
இ) அ மற்றும் ஆ.
ஈ) அ மட்டும்.
விடை : இ) அ மற்றும் ஆ.
9. குடிநீரில் அதிக அளவு புளுரைடு ----------- ஐ ஏற்படுத்துகிறது.
அ) நுரையீரல் நோய்.
ஆ) குடல் தொற்றுகள்.
இ) புளுரோஸிஸ்.
ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை.
விடை : இ) புளுரோஸிஸ்.


0 Comments