12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 27
கேள்வி 27 : விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- மனித உடலில் விந்தணுக்களை உற்பத்தி செய்ய இயல்பான உடல் வெப்பநிலையை விட 2°C முதல் 3°C குறைவான வெப்பநிலை தேவை.
- விதைப்பையானது வயிற்றறையின் வெளியில் அமைந்து, ஒரு வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு, விந்தணு உற்பத்திக்குத் தேவையான குறைவான வெப்பநிலையை விந்தகங்களுக்கு அளிக்கிறது.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :
விந்தணு உற்பத்திக்கு இயல்பான உடல் வெப்பநிலையை விட 2°C முதல் 3°C குறைவான வெப்பநிலை தேவை. வயிற்றறைக்கு வெளியே உள்ள விதைப்பை, விந்தகங்களுக்குத் தேவையான குறைந்த வெப்பநிலையை அளிக்கும் வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்படுகிறது.


0 Comments