12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 20

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 20

கேள்வி 20 : மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு தடுப்புமுறைகள் (Barrier Method) பற்றி விளக்குக.


விடை :

தடுப்பு முறை (Barrier method):

  • கருத்தரித்தலைத் தவிர்ப்பதற்காக, விந்து மற்றும் அண்ட செல்லின் சந்திப்பு தடுக்கப்படுகிறது.

வேதிப்பொருள் தடுப்பு (Chemical barrier):

  • நுரைக்கும், உட்கரையும் மாத்திரைகள், ஜெல், களிம்புகள் போன்ற வேதிப்பொருட்கள், இனப்பெருக்கப் பாதையில் விந்தணுக்களின் செயல்பாட்டை செயலற்றதாக்குகின்றன.

இயக்கமுறைத் தடுப்பு (Mechanical barrier):

  • கருத்தடை உறை (Condom): உடலுறவுக்கு முன் ஆண்கள்/பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை மூடும் மெல்லிய உறையாகும். இது விந்து திரவம் நுழைவதைத் தடுப்பதுடன், பால்வினை நோய்களில் இருந்தும் பாதுகாப்பளிக்கிறது. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பாலியூரிதேன், இரப்பர், ஆட்டுத் தோல் போன்ற பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.
  • திரைச்சவ்வுகள், கருப்பைவாய் மூடிகள், மறைப்புத்திரைகள்: மென்மையான இரப்பரால் ஆன இவை, பெண்களின் இனப்பெருக்கப் பாதையில் பொருத்தப்படுவதால் விந்து செல்கள் கருப்பைக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது.

ஹார்மோன் வழி தடுப்பு:

  • இது அண்ட செல் விடுபடுதலைத் தடுத்து, கருப்பை வாய் திரவத்தைக் கெட்டிப்படுத்துவதன் மூலம் விந்து செல்கள் அண்ட செல்லுடன் இணைவதைத் தவிர்க்கிறது.
  • வாய்வழி கருத்தடை மாத்திரைகள்: FSH மற்றும் LH ஹார்மோன்களின் உற்பத்தியைத் தடுத்து, அண்ட செல் விடுபடுதலைத் தவிர்க்கின்றன. கூட்டு மாத்திரைகளில் செயற்கை புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் சேர்க்கப்பட்டுள்ளன. சாஹெலி மாத்திரையில் ஸ்டீராய்டு அல்லாத சென்ட்குரோமேன் (மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம், லக்னோ) உள்ளது.

உள்கருப்பை சாதனங்கள் (IUDs):

  • மருத்துவ நிபுணர்களால் பெண்களின் இனப்பெருக்கப் பாதை வழியாக கருப்பையினுள் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்கள் இவை. இவை தாமிரம், ஹார்மோன், மற்றும் மருந்தில்லா வகைகளில் கிடைக்கின்றன. விந்து செல்கள் விழுங்கப்படுதலை அதிகரிப்பதன் மூலம் கர்ப்பத்தைத் தள்ளிப்போட இவை உதவுகின்றன. இவற்றின் வெற்றி வீதம் 95% முதல் 99% ஆகும்.
  • தாமிரம் வெளிவிடும் IUDs: Cu T-380A, Nova T Cu7, Cu T 380Ag, Multiload 375 போன்றவை இவற்றுக்கு உதாரணங்கள். இவை விந்துவின் இயக்கத்தைத் தடை செய்கின்றன. இவை 5 முதல் 10 ஆண்டுகள் வரை செயல்திறனுடன் இருக்கலாம்.
  • ஹார்மோன் வெளிவிடும் IUDs: புரோஜெஸ்டாசெர்ட், LNG-20 போன்றவை. இவை கருப்பை வாய் கோழையை கெட்டிப்படுத்தி விந்து நுழைவைத் தடுக்கின்றன.
  • மருந்தில்லா IUD: துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்டவை. லிப்பஸ் வளையம் (இரட்டை 8 வடிவ நெகிழிக் கருவி) இதற்கு ஒரு உதாரணமாகும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement