12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 19
கேள்வி 19 : பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா? கருத்தைத் தெரிவிக்கவும்.
விடை :
- தேவை.
- ஆம்னியோசென்டெசிஸ் (Amniocentesis) எனப்படும் பனிக்குடத்துளைப்பு, குழந்தை பிறப்புக்கு முன் செய்யப்படும் ஒரு தொழில்நுட்பம் ஆகும்.
- இத்தொழில்நுட்பத்தின் மூலம் குழந்தையின் பால் தெரிந்துவிட வாய்ப்பு உள்ளது.
- இதனால், பெண் சிசுக்கொலைகள் நடைபெற அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.
- எனவே, ஆம்னியோசென்டெசிஸ் முறைக்குச் சட்டபூர்வமான தடை விதிப்பது அவசியமாகிறது.


0 Comments