12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 17
கேள்வி 17 : முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை வேறுபடுத்துக.
விடை :
| எண் | முதன்மை இழை (Leading Strand) | பின்தங்கும் இழை (Lagging Strand) |
|---|---|---|
| 1. | DNA பாலிமெரேஸ் நொதியின் உதவியுடன், புதிய நியூக்ளியோடைடுகள் தொடர்ச்சியாகவும் நேரடியாகவும் சேர்க்கப்படுகின்றன. | ஒகேசாகி துண்டுகள் (Okazaki fragments) என அழைக்கப்படும் சிறிய, தொடர்ச்சியற்ற துண்டுகளாக உருவாக்கப்படுகின்றன. |
| 2. | இதன் வார்ப்புரு இழை 3'→5' திசையில் இருக்கும். | இதன் வார்ப்புரு இழை 5'→3' திசையில் இருக்கும். |
| 3. | DNA லிகேஸ் (Ligase) நொதியின் செயல்பாடு குறைவாக இருக்கும். | DNA லிகேஸ் நொதியின் செயல்பாடு அதிகமாக இருக்கும். |
| 4. | இதற்கு ஒரே ஒரு ப்ரைமர் மட்டுமே தேவைப்படுகிறது. | இதற்கு பல ப்ரைமர்கள் தேவைப்படுகின்றன. |


0 Comments