12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18

கேள்வி 18 : வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை வேறுபடுத்துக.


விடை :

வரிசை எண் வார்ப்புரு இழை (Template Strand) குறியீட்டு இழை (Coding Strand)
1 துருவத்துவம் 3' முதல் 5' வரை இருக்கும். துருவத்துவம் 5' முதல் 3' வரை இருக்கும்.
2 ஆர்என்ஏ படியெடுத்தலின் போது அடிப்படையாகப் (வார்ப்புருவாக) பயன்படுத்தப்படும் இழை. இந்த இழையின் வரிசையானது ஆர்என்ஏவின் வரிசையுடன் ஒத்திருக்கும் (டிஎன்ஏவில் உள்ள தைமீனுக்குப் பதிலாக ஆர்என்ஏவில் யுராசில் இருக்கும்).
3 இது தூது ஆர்என்ஏ (mRNA) உருவாக்கத்திற்கான வார்ப்புச் செயல்பாட்டை செய்கிறது. இது வார்ப்புருவாகச் செயல்படுவதில்லை.
4 இதன் நைட்ரஜன் காரங்கள் mRNA இழைக்கு நிரப்பு இழைகளை (Complementary) உருவாக்குகின்றன. இதன் நைட்ரஜன் காரங்கள் அப்படியே (mRNA இழையில் காணப்படுவதேயாகும்.
5 இது எதிர்க் கோடான்களைக் (Anticodons) கொண்டுள்ளது. இது கோடான்களைக் (Codons) கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement