12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 25

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 25

கேள்வி 25 : டார்வினின் குருவிகள் மற்றும் ஆஸ்திரேலிய பைப்பாலூட்டிகள் ஆகியவை தகவமைப்புப் பரவலுக்கான சிறந்த எடுத்துகாட்டுகள் ஆகும் சொற்றொடரை நியாப்படுத்துக்க.


விடை :

1. டார்வினின் குருவிகள்:

  • இப்பறவைகளின் மூதாதையர்கள் ஏறத்தாழ 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் காலபாகஸ் தீவுப் பகுதிக்கு வந்து சேர்ந்தன.
  • டார்வின் மேற்கொண்ட ஆய்வின்போது, இவை உடல் அளவு, அலகின் வடிவம் மற்றும் உணவுப் பழக்கம் போன்ற பண்புகளில் வேறுபட்ட 14 தனித்தனி சிற்றினங்களாகப் பரிணாமம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டது.
  • உடல் அளவு மற்றும் அலகின் வடிவத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளின் காரணமாகவே, இவை பூச்சிகள், விதைகள், கள்ளித் தாவரத்தின் மகரந்தத் தேன், மற்றும் உடும்பின் இரத்தம் போன்ற பல்வேறுபட்ட உணவு வகைகளை உட்கொள்ள முடிந்தது. இத்தகைய பண்புகள் இயற்கை தேர்வு மூலம் வழிநடத்தப்படுகின்றன.
  • டார்வின் குருவிகளின் DNA-வில் உள்ள மரபணுக்களில் நிகழ்ந்த மாற்றங்களே அவற்றின் மாறுபட்ட அலகு அமைப்பு சார்ந்த புறப் பண்புகளில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன.

2. பைப்பாலூட்டிகள்:

  • ஆஸ்திரேலியாவிலுள்ள பைப்பாலூட்டிகளும் வட அமெரிக்காவிலுள்ள நஞ்சுக்கொடி பாலூட்டிகளும் பொதுவான ஒரு மூதாதையரிடமிருந்து சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தன.
  • இவை காலத்தால் மற்றும் புவியியல் பரவலால் வேறுபட்டு இருந்தாலும், ஒரே வாழிடத்தில் வாழும் வாழ்க்கை முறைகளைக் கொண்ட பல சிற்றினங்களை உருவாக்கியுள்ளன.
  • இதன் பின்னர், இவை ஒவ்வொன்றும் தனித்தனி மரபுக் கிளைகளாகத் தன்னிச்சையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தன.
  • ஆஸ்திரேலியாவில் 200க்கும் மேற்பட்ட பைப்பாலூட்டிச் சிற்றினங்களும், ஒரு சில நஞ்சுக் கொடி பாலூட்டிச் சிற்றினங்களும் காணப்படுகின்றன. இவை வட அமெரிக்காவில் உள்ள சிற்றினங்களைப் போலவே தகவமைப்புப் பெற்றுள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement