12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 28
கேள்வி 28 : நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கிய தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வு முறைகளை உதாரணங்களுடன் விளக்குக.
விடை :
- நிலைப்படுத்துதல் தேர்வு (மைய நோக்குத் தேர்வு):
- நிலையான சூழல் நிலவும்போது, சராசரிப் புறத்தோற்றப் பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் நிலைத்து வாழும்.
- சூழலுக்கு ஒவ்வாத அதீதப் பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் நீக்கப்படும்.
- ஒரு இனக்கூட்டத்திற்குள், புறத்தோற்றப் பண்புகளின் நிலைத்தன்மை அடுத்தடுத்த தலைமுறைகளிலும் பாதுகாக்கப்படும்.
- எடுத்துக்காட்டு: புயலின்போது பிழைத்து வாழும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சராசரி அளவிலேயே காணப்படும்.
- இலக்கு நோக்கிய தேர்வு முறை:
- படிப்படியாக மாற்றம் பெறும் இவ்வகைத் தேர்வு முறையில், புறத்தோற்றப் பண்புகளின் பரவலின் ஒரு முனையிலிருந்து மறுமுனையை நோக்கி உயிரினங்கள் படிப்படியாக அகற்றப்படுகின்றன.
- எடுத்துக்காட்டு: ஆண் மற்றும் பெண் சிட்டுக்குருவிகள் புறத்தோற்றத்தில் ஒத்திருந்தாலும், அவற்றின் உடல் எடையில் வேறுபாடுகள் காணப்படும். பெண் குருவிகள் அவற்றின் உடல் எடையுடன் தொடர்புடைய இலக்கு நோக்கிய தேர்வு முறையை வெளிப்படுத்துகின்றன.
- உடைத்தல் முறைத் தேர்வு (மைய விலக்குத் தேர்வு):
- ஒரே விதமான சுற்றுச்சூழல் நிலைமாற்றம் பெற்று, பலவகைச் சுற்றுச்சூழல் நிலைகளைக் கொண்டதாக மாறும்போது, இவ்வகைத் தேர்வுமுறையில் இரு முனைகளிலும் காணப்படும்.
- புறத்தோற்றப் பண்புகளைக் கொண்ட உயிரினங்களின் இனக்கூட்டம் துணை இனக்கூட்டங்கள் அல்லது துணைச் சிற்றினங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
- இந்த அரிதான வகைத் தேர்வு முறையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபட்ட சிற்றினங்கள் தோன்றுகின்றன. இது தகவமைப்புப் பரவல் என்றும் அறியப்படுகிறது.
- எடுத்துக்காட்டு: டார்வின் குருவிகளின் அலகுகளின் நீள வேறுபாடு.


0 Comments