12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 31

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 31

கேள்வி 31 : தனிமைப்படுத்துதல் முறைகளை வரையறை செய்க. அதன் வகைகளைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

தனிமைப்படுத்துதல் முறைகள் (Isolation Mechanisms)

வரையறை:
ஒரு இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்களைத் துணை இனக்கூட்டங்களாகப் பிரிக்கும் முறையே தனிமைப்படுத்துதல் முறைகள் ஆகும்.

வகைகள்:
தனிமைப்படுத்துதல் முறைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:

  1. சுற்றுச்சூழல் தனிமைப்படுத்துதல் (Ecological Isolation): ஒரே இனக்கூட்டத்தைச் சேர்ந்த உயிரினங்கள் வாழிட வேறுபாட்டால் பிரிந்திருப்பது.
    • (எ.கா) ரானா ஏரியோலேட்டா (Rana areolata) தவளையினம்.
  2. பருவகாலத் தனிமைப்படுத்துதல் (Seasonal Isolation): இனப்பெருக்க காலங்களில் உள்ள வேறுபாடு அகக்கலப்பைத் தடுத்து பிரிப்பதே பருவகாலத் தனிமைப்படுத்துதல் ஆகும்.
    • (எ.கா) பூயோ அமெரிக்கானஸ் (Bufo americanus) தேரை.
  3. நடத்தையியல் தனிமைப்படுத்துதல் (Behavioral Isolation)
  4. புறத்தோற்றப் பண்பு தனிமைப்படுத்துதல் (Morphological Isolation)
  5. செல்லியல் தனிமைப்படுத்துதல் (Cytological Isolation)
  6. கலப்புயிரி வாழ இயலாமை (Hybrid Inviability)
  7. கலப்புயிரி மலட்டுத்தன்மை (Hybrid Sterility)
  8. கலப்பினம் உடைதல் (Hybrid Breakdown)

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :

தனிமைப்படுத்துதல் முறைகள் (Isolation Mechanisms)

வரையறை:
ஓர் இனக்கூட்டத்தை துணை இனக்கூட்டங்களாகப் பிரிக்கும் முறைகள்.

வகைகள்:

  1. சுற்றுச்சூழல் தனிமைப்படுத்துதல் (Ecological Isolation): வாழிட வேறுபாட்டால் பிரிவது.
    • (எ.கா) ரானா ஏரியோலேட்டா
  2. பருவகாலத் தனிமைப்படுத்துதல் (Seasonal Isolation): இனப்பெருக்க கால வேறுபாட்டால் பிரிவது.
    • (எ.கா) பூயோ அமெரிக்கானஸ்
  3. நடத்தையியல் தனிமைப்படுத்துதல் (Behavioral Isolation)
  4. புறத்தோற்றப் பண்பு தனிமைப்படுத்துதல் (Morphological Isolation)
  5. செல்லியல் தனிமைப்படுத்துதல் (Cytological Isolation)
  6. கலப்புயிரி வாழ இயலாமை (Hybrid Inviability)
  7. கலப்புயிரி மலட்டுத்தன்மை (Hybrid Sterility)
  8. கலப்பினம் உடைதல் (Hybrid Breakdown)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement